அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Wednesday, February 18, 2009

தமிழக அரசுக்கு முஸ்லிம் சமுதாயம் நன்றி

தமிழ்நாடு அரசு பிப்ரவரி 17-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், பள்ளி வாசல்கள் - தர்காக்கள் - மதரஸாக்களில் பணியாற்றும் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் உள்ள முஸ்லிம் மார்க்க அறிஞர்கள், சமுதாய அமைப்புக்கள் வரவேற்பு தெரிவித்து நன்றி கூறியுள்ளன.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையான உலமா நல வாரியம் அறிவித்ததற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், உலமாக்கள் - பணியாளர் நலவாரிய அறிவிப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்ததோடு தமிழக முதல்வர் கலைஞர், நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்திருந்தார்.

வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது சமுதாய கோரிக் கையை ஏற்று உலமாக்கள் - பணியாளர் நலவாரியம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்புகளை வெளியிடுமாறு இமாம்களையும் - முத்தவல்லிகளையும் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார்தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக நிதிநிலை அறிக்கையில் உலமாக்களுக்கு நல வாரியம் அறிவித்து இருப்பது இஸ்லா மியர்களுக்கு மறக்கமுடியாத மாபெரும் வரலாற்று சாதனையாகும்.உலமாக்கள் என்பவர்கள் இஸ்லாம் தோற்றுவித்த நபிகள் நாயகம் (ஸல்) வாரிசு ஆவார்கள். இஸ்லாமியர் அனைவரும் இவர்ளை மிகவும் மதிக்கக்கூடியவர்கள், மார்க்க அறிஞர்களான உலமாக்கள் தலைமையில்தான் தினமும் ஐந்து வேளை இறைவனை தொழுகிறோம்.இஸ்லாமியர்களுக்கு அவரிடும் கட்டளைகள்தான் சிரமேற்கொண்டு திருக்குர்ஆன் மற்றும் நபி வழியில் நடக்க வேண்டும். அப்படிப்பட்ட சமுதாயத்தில் மதிக்கக் கூடிய இவர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. சில உலமாக்களுக்கு ஊதியம் போத வில்லை. இவர்களுக்கு நல்ல மருத்துவம்கூட பார்க்க முடியாத நிலை உள்ளது. மார்க்கத்தில் உயர்ந்தவர்கள் என்றாலும் சாதாரண பள்ளிகளில்கூட இவர்களின் பிள்ளை களை சேர்க்க முடிவதில்லை.எனவே, இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உலமாக்கள் நலவாரியம் ஏற்படுத்த வேண்டுமென்ற ரமளான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சியிலும், பின்னர் உலமாக்கள், உமராக்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அச்சாக இருக்கும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். அப்போது முதல் அசை;சரிடம் இந்த கோரிக்கையை எடுத்துச்சென்று ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார். கேட்ட மாத்திரத்திலேயே உலமாக்கள், நலவாரியம் அமைத்துக் கொடுத்த சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய பெருமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக் கிறார்.


தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா


தன்னலம் கருதாமல் சமுதாயப் பணியாற்றி வருகின்ற உலமாக்களுக்கும் - பள்ளிவாசல்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கும் நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை வரவேற்கிறது.சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று நல வாரியம் அமைத்துள்ள மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையி லான தமிழக அரசுக்கும், இதற்காக முயற்சித்த அனைவருக்கும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை உளப்ப+ர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என்று அதன் மாநிலத் தலைவர் மவ்லானா ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹஸரத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மவ்லானா எம்.ஓ. அப்துல் காதிர் தாவுதிஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று அனைத்து தரப்பு மக்க ளும் பயன்பெறுகின்ற பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் கலைஞர் அவர்கள் முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று உலமாக்கள் நல வாரியம் அமைத்த தற்கும், இதற்கு பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் மவ்லானா எம்.ஓ. அப்துல் காதிர் தாவுதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மவ்லானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவுதிதமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் ஈரோடு மவ்லானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவுதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாய நலனுக்காகவே உழைத்து வரக்கூடிய சங்கைக்குரிய உலமாக்களின் நலிவினை போக்கும் வகையில் நல வாரியம் அமைத்த தமிழக அரசுக்கு உலமா பெருமக்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்.


சென்னையில் அண்மையில் நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சரியான நேரத்தில் நடத்தி சமுதாயத்திற்கு தேவையான பல தீர்மானங்களை நிறைவேற்றியது.


அதில் ஒரு முக்கியமான தீர்மானம் இன்று நிறைவேறியிருக்கிறது. அதற்கு நன்றி சொல்லும் வேளையில் மற்ற தீர்மானங்களையும் தமிழக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரவேண்டும் என்பது இந்த சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. இதற்கு நிச்சயம் வரும் தேர்தலில் சமுதாயம் நன்றியை செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.


மவ்லானா டி.ஜே.எம். ஸலாஹ{த்தீன் ரியாஜிஉலமாக்கள் நலவாரியம் அமைப்பதற்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை யின் சார்பில் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிப்பதாக மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா டி.ஜே.எம். ஸலாஹ{த்தீன் ரியாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


சென்னை மாவட்ட ஜமாஅத்


ஜமாஅத்துல் உலமா சபையும் இதர இஸ்லாமிய இயக்கங்களும் முறையிட்டு வந்த உலமாக்கள் நல வாரியத்தை அமைத்து உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் உலமாக்கள் நல வாரியம் அமைந்திட வலியுறுத்தி சரியான நேரத்தில் சரியான முறையில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டில் கோரிக்கை வைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதன் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தாய்ச்சபையின் நிர்வாகிகள் அனைவருக்கும் சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியினை கொஞ்சும் தமிழில் இதயம் மகிழ்ந்து தெரிவித்துக்கொள்கிறது.அன்பான இறைவன் அனைவருக்கும் இன்னருள் என்றும் புரிந்திடுவானாக என்றும் பிரார்த்தனை செய்கிறது.இவ்வாறு சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா ஓ.எஸ்.எம். இல்யாஸ் காஸிமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் சேமுமு முஹம்மதலி, சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் மேலை நாசர், தமிழ்நாடு இஸ்லாமிய ஆலயப் பணி உடலுழைப்பு பிலால்கள் நல சங்கத்தின் தலைவர் ஏ. முஹம்மது யூனுஸ், சென்னை மாவட்ட பொறுப்பாளர் எம்.ஏ. முஹம்மது ஹனீப் சாகீர் உள்ளிட்டோரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



அண்ணா அறிவாலயத்தில் நேரில் நன்றி

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், அப்துல் பாசித், மாநில மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் கமுதி பஷீர், கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலிம்கள் அணி அமைப்பாளர் மவ்லானா என். ஹாமித் பக்ரீ, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆப்பனூர் பீர் முஹம்மது, நத்தம் ஜஹாங்கீர், தென்சென்னை மாவட்ட தலைவர் கே.பி. இஸ்மத் பாட்ஷா, முஸ்லிம் லீக் பதிப்பக உறுப்பினர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோரை சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

உலமாக்கள் நன்றி

சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ் காசிமி, வி.எஸ். அன்வர் பாதுஷா உலவி, கலிலுர் ரஹ்மான் மன்பஈ, மாநில செய்தி தொடர்பாளர் கா. முஹம்மது இல்யாஸ் ரியாஜி, மற்றும் முஹம்மது ஹனீப் பாகவி, மன்சூர் காசிபி, அப்துர் ரஹீம் பாகவி, அப்துர் ரஹ்மான் மன்பஈ, ஷாகுல் ஹமீத் ரஹ்மானி, உள்ளிட்ட உலமாக்களும் அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் சென்று பேராசிரியர் க. அன்பழகனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.அப்போது தமிழக வக்ஃப் வாரிய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் உடனிருந்தார்.

.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template