அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Wednesday, February 11, 2009

உடலில் முதுகுவலியோடும் - உள்ளத்தில் இலங்கை வலியோடும் விமர்சனங்களை தாங்கி தமிழர்களுக்காக உழைக்கின்றவர் கலைஞர்

திருவள்ளுர், பிப்.10-
உடலிலே முதுகுவலியோடும் - உள்ளத்தில் இலங்கை வலியோடும் விமர்சனங்களை தாங்கி தமிழர்களுக்காக உழைக் கின்றவர் கலைஞர் என்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது உரை யாற்றினார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை சார்பில் திருவள்ளுரில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் உரை யாற்றுகையில் அவர் பேசியதாவது-சமீபத்தில் இலங்கை தமிழர் படுகொலை பிரச்சினை உக்கிரமானபோது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து அந்த இனப்படு கொலை யைத் தடுத்து நிறுத்த இங்கிருந்து ஒரு மித்த குரல் கொடுக்க ஓரணியில் திரளக் கூடாதோ என்று பத்திரிகை வாயிலாக கவிதை ஒன்று எழுதி அழைத்தார்.

அதற்கு ஆதரவு தெரிவித்து நான் எழுதிய ஒரு கவிதையை இந்த மேடையில் எங்கள் இயக்கத்தின் சார்பாக அரங்கேற்றுகிறேன்.

ஓரணியில் திரண்டிடுவார் உலகத்து தமிழர்க ளெல்லாம் பேரணியாய் கலைஞர் தம் தலைமை ஏற்று தாரணியை மீட்டு வரும் தமிழர் கூட்டம் ஊர் அணியை அமைத்தவரே தமிழகத்தில் யார் அணியும் ஜெயிக்காது நீரே வெல்வீர்.உடலிலே முதுகுவலியோடும் - உள்ளத்திலே இலங்கை வலியோடும் உடல் தாங்குகிறதோ இல்லையோ எதிர்க்கட்சிகளின் மோசமான விமர்சனங்களை உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டும். இலங்கைத் தமிழர் களின் வாழ்வு பள்ளமாகி விட என உடல் உள்ள வேதனையோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழினத் தலைவர் கலைஞருக்கு இந்த கூட்டத்தின் வாயிலாக தெரியப் படுத்துகிறேன்.

இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவான அண்ணன் - தம்பிகள், தாய்மார்கள், சகோதரிகள், அப்பா - பிள்ளைகள் நமது தமிழினம் அழிந்து கொண் டிருக்கிறது. இந்த அவலமான சூழ்நிலையில் தமிழகத்தில் கட்சி மாச்சாரியங்களையெல்லாம் மறந்து நாமெல்லாம் தமிழர்கள் என்ற ஒருமித்த உணர்வோடு செயல்பட வாருங்கள் என அழைக்கும் கலைஞர் அவர்களது பரந்து விரிந்த அழைப்பு என்பது இலங்கை தமிழர் களை மட்டுமல்ல உலகின் எல்லாப் பகுதியிலும் வாழ்கின்ற தமிழர்களுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு தருவதாகும்.

நாம் பிரிந்து நின்றால் இந்த பாதுகாக்கும் செயலை வலிமையாக செய்ய இயலாது. அவ்வாறு செய்வது நம்மை நாமே பல வீனப்படுத்தி தமிழர்களை பாதுகாக்கும் செயலையும் நம்மை செய்யவிடாது செய்துவிடும் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தி ஒருங்கிணைந்து போராடவே இந்த இலங்கை தமிழர் நல உரிமை பேரவை நோக்கமாக கொண்டு பாடுபடுகிறது.

உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர், மூதறிஞர் கலைஞர் அவர்களது தலைமையில் முடிவெடுக்கப்பட்டு முயற்சிகளை மேற்கொள்கின்ற இது சம்பந்தமான அனைத்து செயல்களிலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அருந்தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரிய பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர்களது வழிகாட்டுத லில் இயங்கும் இயக்கத்தை சேர்ந்த நாங்கள் அனைவரும் மனிதச்சங்கிலி போராட்டம், பேரணி, பொதுக்கூட்டம் அனைத் துக் கட்சிகளின் கூட்டம் என்று எல்லா நடவடிக்கைகளிலும் நாடு தழுவிய அள வில் கலந்து கொண்டு வலிமை சேர்த்து வருகின்றோம்.

தலைவர் கலைஞர் அவர்களது வழித் தடத்தை கிஞ்சித்தும் பிசகாது இந்த பிரச்சினை நடைபோட்டு வருகிறோம். இதுபோல் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் ஒன்று திரள வேண்டும் என மிக்க பணிவன்போடு எங்கள் இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்று பாடினார்கள். அது என்ன குணம், தமிழன் உயிர் பிச்சைக் கேட்டு யாரிடமும் தாழ மாட்டான்.

கடைசிவரை எதிர்த்து போராடுவான். அதுபோல் தன்னை நம்பி வந்தவரை தாழ்த்தவும் மாட்டான் - வாழ்த்துவான், வாழவைப்பான். அதனால்தான் ஹவந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று தமிழர்களை உள்ளடக்கிய தாய் தமிழகம் நம்மு டையது. அப்படிப்பட்ட தமிழனை இலங்கை அரசு அழிப்பது நியாயமா என்பதைத்தான் நமது தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு கோஷமாக்கித் தந்துள்ளார்கள். இதைத்தான் நாமக்கல் கவிஞர் ஹதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேநம்மை அழிக்கும் ராட்சசேதமிழன் மேலே கையை வச்சேநிறுத்த மாட்டோம் எங்கள் பேச்சே என தமிழக மக்கள் எச்சரித்து - உச்சரித்து இந்த கூட்டத்தின் மூலம் தெரிவிக்கின்றோம்.இலங்கைத் தமிழர் இன படுகொலையை நிறுத்த தொடர்ந்து தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களது தலைமையிலும், தமிழின தளபதி அவர்களோடு அணி வகுத்து முஸ்லிம் லீக் தலைவர் முனீருல் மில்லத் அவர்களை பின்தொடர்ந்து நாமெல்லாம் அயராது பாடுபடுவோம் என்பதை உறுதிப்படுத்தி இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும் வரை ஓயமாட்டாம். நிலையான அமைதிக்கு வழி காண்போம்! தடுப்போம்! தடுப்போம்!

இனப் படுகொலையை தடுப்போம்! என்ற தலைவர் கலைஞர் அவர்களது வாய் - மெய் மொழியை வழிமொழிந்து பாவேந்தர் பாரதிதாசன் பாடிய எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு - என்ற சங்கநாதம் நம் காதுகளில் ஒலிக்கட்டும் என கூறி முடிக்கின்றேன். இவ்வாறு வடக்கு கோட்டையார் வ.மு. செய் யது அஹமது உரையாற்றினார்.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template