அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!
Showing posts with label மணிச்சுடர் செய்திகள். Show all posts
Showing posts with label மணிச்சுடர் செய்திகள். Show all posts

Friday, June 19, 2009

தெளிவு பிறந்தது! வழி திறக்க வேண்டும்! பேராசிரியர் காதர்மொகிதீன்...

டெல்லிக்குச் சென்றிருந்தேன். மூன்று நாட்கள் தங்கி, எம்.பி.க்குத் தந்திருந்த வீடு மற்றும் அனைத்துப் பொருட்களையும் திரும்பவும் அரசிடம் ஒப்படைத்து விட்டு வரவே சென்றிருந்தேன்.

ஐந்தாண்டு காலமாக டெல்லி வீட்டில் எனக்குத் தரப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் சாதனங்கள்யாவும் தொகுதி மற்றும் சமுதாய பணிகளுக்கு பயன்பட்டன. சகோதரர் முஹம்மது குட்டி, சந்திரிகா நாளிதழின் டெல்லி நிருபர் சிறந்த இயக்கப் பணி புரிந்து வரும் அவர் எனக்கு உதவியாக செயல்பட்டார்.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளர்களில் ஒருவரான இளைஞர், துடிப்பும் - கொள்கைப் பிடிப்பும் மிகுந்த குர்ரம் அனீஸ் உமர் எனது டெல்லி இல்லத்தில் என்னுடன் இணைந்து முஸ்லிம் லீக் அலுவலகப் பணிகளை செயல்படுத்தி கவனித்து வந்தார். டெல்லி பிரதேச துணைச் செயலாளர் நூர் ஷம்ஸ், டெல்லி இல்லத்தை நிர்வகித்து வந்தார். எனது பாராளுமன்ற பணிச் செயலாளராக அருமையாகச் சேவை செய்தார்.
டெல்லியில் இருந்த ஐந்தாண்டும் ஒரு மாதமும் இவர்களின் துணையும், பணியும் எனக்குப் பெரும் உந்து சக்திகளாக இருந்தன.

தமிழகத்தைச் சேர்ந்த முத்துபாட்சா, ஆறுமுகம், ஒரத்த நாடு சிவா ஆகியோரின் சேவையும் - பணியும் எனக்குப் பெருந் துணைபுரிந்துள்ளன.
ஐந்தாண்டு பாராளுமன்றப் பணிக்காலத்தில் டெல்லியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இயக்க வளர்ச்சிக்கு என்னால் ஆனதைச் செய்ய முடிந்தது. அதற்காகவே இறைவனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

கேரளாவில் முஸ்லிம் லீக் எழுச்சியோடு வெற்றிப் பாதையில் செல்கிறது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் வெற்றிப் பயணத்தைத் துவங்கி நம்பிக்கையோடும், எழுச்சியோடும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த எழுச்சி வரலாற்றை இந்தியா முழுவதிலும் உருவாக்க வேண்டும் என்னும் அவா வடபுலத்து முஸ்லிம்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இந்த ஆர்வத்துக்குச் செயல் வடிவம் கொடுத்து ஆக்கப் பணியாக மாற்றும் வகையில் நமது ஐந்தாண்டு காலப் பொழுது கழிந்திருக்கிறது.

டெல்லியில் தங்கியிருந்த இந்த மூன்று நாட்களில் டெல்லி பிரதேச முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அதன் தலைவர் மர்கூப் ஹ{சேன் தலைமையில் வந்து சந்தித்தனர்.

அவர்களுக்கு இடையில் இருந்த உள் பிரச்சி னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு, முஸ்லிம் லீக் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
டெல்லி ஷாஜஹானாபாதில் உள்ள ஜாமிஆ மஸ்ஜிது எதிரில் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் இருந்து முஸ்லிம் லீக் அலுவலகம் இயங்கி வருகிறது. நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக்கொடி அங்கே எப்பொழுதும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும். அந்த அலுவலகத்துக்கு முஸ்லிம் லீக் இதுவரை வாடகை கொடுத்து வந்துள்ளது.


அதனை இப்பொழுது கிரயம் செய்து முஸ்லிம் லீகிற்கு வாங்கும் எண்ணமும், சூழ்நிலை யும் ஏற்பட்டிருக்கிறது.

டெல்லி பிரதேச முஸ்லிம் லீக் மேற்கொள்ளும் இந்தப் புதிய முயற்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து உற்சாகப் படுத்தும் உதவிகள் வர வேண்டும் என்று விரும்புகி றோம். இந்தியத் தலைநகர் டெல்லி பட்டணத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தனது சொந்தக் கட்டிடத்தில் அலுவலகம் வைத்திருக்கிறது என்ற புதிய சரித்திரம் தொடர வழிவகுக்கும்.

உத்தரகாண்டம் மாநில முஸ்லிம் லீகினர் மிகுந்த ஆர்வத்தோடு டெல்லி வந்தனர். அந்த மாநிலத்தில் (70) எழுபது தொகுதிகள் அடங்கிய சட்டப் பேரவை இருக்கிறது. டெல்லியிலும் எழுபது தொகுதிகள்தாம் உள்ளன.

உத்தரகாண்டம், உத்திரப்பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலம். இதற்கு முதலில் உத்ராச்சலம் என்று பெயரிட்டனர். பின்னர் உத்தரகாண்டம் என்று பெயர் மாற்றம் செய்தனர்.

இந்த மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில் 24 தொகுதிகளில் முஸ்லிம்கள் 35 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வாழ்கின்றனர். பெரும்பாலும் மலைப்பிரதேசமாக உள்ள இந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் மார்க்கப்பற்று, பிடிப்பு, ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். சட்டசபையில் மூன்று முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் மூவரும் பகுஜன் சமாஜ் கட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள். உத்தரகாண்ட முஸ்லிம் லீக் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறது. முஸ்லிம் லீக் 14 சட்டமன்ற தொகுதிகளில் பலமாக இருக்கிறது. தற்போது விகாஸ் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் வருகிறது. இதில 86 ஆயிரம் வாக்குகள், அதில் 34,500 முஸ்லிம் வாக்குகள். இங்கே 65 மஸ்ஜிதுகளும், 18 மதரஸாகளும் உள்ளன. முன்பு இதில் முஸ்லிம் லீக் 120 வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. தற்போது இடைத் தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட வேண்டும் என்னும் ஆர்வத் துடிப்போடு அந்த மாநில நிர்வாகிகள் வந்தனர். அவர்களின் ஆர்வத்துக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் நல்வாழ்த்துக்ளைத் தெரிவித்தேன். வடபுலத்தில் முஸ்லிம் லீகின் சார்பில் சிறிதளவு பொருளாதார உதவிகள் புரிந்தால் போதும்@ அதிசயம் ஏற்படும் அளவுக்கு முஸ்லிம் லீகினர் அரசியல் நடத்துவர் என்ற உண்மை மட்டும் தெளிவாகப் புரிந்தது.

மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஸிதாபா, மால்டா, நதியா ஆகிய மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் வந்து டெல்லியில் என்னைச் சந்தித்து அவர்களின் மாநில முஸ்லிம் லீக் வளர்ச்சி குறித்து ஆலோசனையை நடத்த வந்தவர்கள் என்னிடம் தந்த அவர்களின் முகவரிகளைப் பார்த்தேன்.

எனக்கு ஒரே வியப்பு! ஆச்சரியம்!

எல்லோரும் பட்டதாரிகள் பலர் மூன்று எம்.ஏ. படித்தவர்கள் சிலர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் சிலர் கல்லூரி விரிவுரையாளர்கள் சிலர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் அரசு மதரஸா கல்வி நிறுவனங் களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள். முஸ்லிம் லீகில் அரசு ஊழியர்களும், கல்வியாளர்களும், மார்க்க அறிஞர் களும் மேற்கு வங்கத்தில் இருக்கிறார்கள். தமிழக நிலைமையை நினைத்து ஒப்பிட்டுப் பார்த்த போது, மிகுந்த வருத்தமும், வேதனையும்தான் ஏற்பட்டது.

எல்லா கட்சிகளிலும் அரசு பணிபுரிவோர் அங்கம் வகிக்கிறார்கள். முஸ்லிம் லீக் மட்டும் விதிவிலக்காக இருக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் முஸ்லிம் லீக் ஆர்வலர்களை எல்லாத் தரப்புகளில் இருந்தும் இயக்கத்தில் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் என்ற தெளிவு பிறந்தது! இனி வழிதான் திறக்க வேண்டும.

Wednesday, February 18, 2009

தமிழக அரசுக்கு முஸ்லிம் சமுதாயம் நன்றி

தமிழ்நாடு அரசு பிப்ரவரி 17-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், பள்ளி வாசல்கள் - தர்காக்கள் - மதரஸாக்களில் பணியாற்றும் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் உள்ள முஸ்லிம் மார்க்க அறிஞர்கள், சமுதாய அமைப்புக்கள் வரவேற்பு தெரிவித்து நன்றி கூறியுள்ளன.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையான உலமா நல வாரியம் அறிவித்ததற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், உலமாக்கள் - பணியாளர் நலவாரிய அறிவிப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்ததோடு தமிழக முதல்வர் கலைஞர், நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்திருந்தார்.

வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது சமுதாய கோரிக் கையை ஏற்று உலமாக்கள் - பணியாளர் நலவாரியம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்புகளை வெளியிடுமாறு இமாம்களையும் - முத்தவல்லிகளையும் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார்தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக நிதிநிலை அறிக்கையில் உலமாக்களுக்கு நல வாரியம் அறிவித்து இருப்பது இஸ்லா மியர்களுக்கு மறக்கமுடியாத மாபெரும் வரலாற்று சாதனையாகும்.உலமாக்கள் என்பவர்கள் இஸ்லாம் தோற்றுவித்த நபிகள் நாயகம் (ஸல்) வாரிசு ஆவார்கள். இஸ்லாமியர் அனைவரும் இவர்ளை மிகவும் மதிக்கக்கூடியவர்கள், மார்க்க அறிஞர்களான உலமாக்கள் தலைமையில்தான் தினமும் ஐந்து வேளை இறைவனை தொழுகிறோம்.இஸ்லாமியர்களுக்கு அவரிடும் கட்டளைகள்தான் சிரமேற்கொண்டு திருக்குர்ஆன் மற்றும் நபி வழியில் நடக்க வேண்டும். அப்படிப்பட்ட சமுதாயத்தில் மதிக்கக் கூடிய இவர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. சில உலமாக்களுக்கு ஊதியம் போத வில்லை. இவர்களுக்கு நல்ல மருத்துவம்கூட பார்க்க முடியாத நிலை உள்ளது. மார்க்கத்தில் உயர்ந்தவர்கள் என்றாலும் சாதாரண பள்ளிகளில்கூட இவர்களின் பிள்ளை களை சேர்க்க முடிவதில்லை.எனவே, இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உலமாக்கள் நலவாரியம் ஏற்படுத்த வேண்டுமென்ற ரமளான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சியிலும், பின்னர் உலமாக்கள், உமராக்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அச்சாக இருக்கும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். அப்போது முதல் அசை;சரிடம் இந்த கோரிக்கையை எடுத்துச்சென்று ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார். கேட்ட மாத்திரத்திலேயே உலமாக்கள், நலவாரியம் அமைத்துக் கொடுத்த சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய பெருமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக் கிறார்.


தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா


தன்னலம் கருதாமல் சமுதாயப் பணியாற்றி வருகின்ற உலமாக்களுக்கும் - பள்ளிவாசல்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கும் நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை வரவேற்கிறது.சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று நல வாரியம் அமைத்துள்ள மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையி லான தமிழக அரசுக்கும், இதற்காக முயற்சித்த அனைவருக்கும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை உளப்ப+ர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என்று அதன் மாநிலத் தலைவர் மவ்லானா ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹஸரத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மவ்லானா எம்.ஓ. அப்துல் காதிர் தாவுதிஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று அனைத்து தரப்பு மக்க ளும் பயன்பெறுகின்ற பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் கலைஞர் அவர்கள் முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று உலமாக்கள் நல வாரியம் அமைத்த தற்கும், இதற்கு பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் மவ்லானா எம்.ஓ. அப்துல் காதிர் தாவுதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மவ்லானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவுதிதமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் ஈரோடு மவ்லானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவுதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாய நலனுக்காகவே உழைத்து வரக்கூடிய சங்கைக்குரிய உலமாக்களின் நலிவினை போக்கும் வகையில் நல வாரியம் அமைத்த தமிழக அரசுக்கு உலமா பெருமக்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்.


சென்னையில் அண்மையில் நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சரியான நேரத்தில் நடத்தி சமுதாயத்திற்கு தேவையான பல தீர்மானங்களை நிறைவேற்றியது.


அதில் ஒரு முக்கியமான தீர்மானம் இன்று நிறைவேறியிருக்கிறது. அதற்கு நன்றி சொல்லும் வேளையில் மற்ற தீர்மானங்களையும் தமிழக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரவேண்டும் என்பது இந்த சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. இதற்கு நிச்சயம் வரும் தேர்தலில் சமுதாயம் நன்றியை செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.


மவ்லானா டி.ஜே.எம். ஸலாஹ{த்தீன் ரியாஜிஉலமாக்கள் நலவாரியம் அமைப்பதற்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை யின் சார்பில் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிப்பதாக மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா டி.ஜே.எம். ஸலாஹ{த்தீன் ரியாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


சென்னை மாவட்ட ஜமாஅத்


ஜமாஅத்துல் உலமா சபையும் இதர இஸ்லாமிய இயக்கங்களும் முறையிட்டு வந்த உலமாக்கள் நல வாரியத்தை அமைத்து உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் உலமாக்கள் நல வாரியம் அமைந்திட வலியுறுத்தி சரியான நேரத்தில் சரியான முறையில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டில் கோரிக்கை வைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதன் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தாய்ச்சபையின் நிர்வாகிகள் அனைவருக்கும் சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியினை கொஞ்சும் தமிழில் இதயம் மகிழ்ந்து தெரிவித்துக்கொள்கிறது.அன்பான இறைவன் அனைவருக்கும் இன்னருள் என்றும் புரிந்திடுவானாக என்றும் பிரார்த்தனை செய்கிறது.இவ்வாறு சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா ஓ.எஸ்.எம். இல்யாஸ் காஸிமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் சேமுமு முஹம்மதலி, சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் மேலை நாசர், தமிழ்நாடு இஸ்லாமிய ஆலயப் பணி உடலுழைப்பு பிலால்கள் நல சங்கத்தின் தலைவர் ஏ. முஹம்மது யூனுஸ், சென்னை மாவட்ட பொறுப்பாளர் எம்.ஏ. முஹம்மது ஹனீப் சாகீர் உள்ளிட்டோரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



அண்ணா அறிவாலயத்தில் நேரில் நன்றி

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், அப்துல் பாசித், மாநில மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் கமுதி பஷீர், கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலிம்கள் அணி அமைப்பாளர் மவ்லானா என். ஹாமித் பக்ரீ, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆப்பனூர் பீர் முஹம்மது, நத்தம் ஜஹாங்கீர், தென்சென்னை மாவட்ட தலைவர் கே.பி. இஸ்மத் பாட்ஷா, முஸ்லிம் லீக் பதிப்பக உறுப்பினர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோரை சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

உலமாக்கள் நன்றி

சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ் காசிமி, வி.எஸ். அன்வர் பாதுஷா உலவி, கலிலுர் ரஹ்மான் மன்பஈ, மாநில செய்தி தொடர்பாளர் கா. முஹம்மது இல்யாஸ் ரியாஜி, மற்றும் முஹம்மது ஹனீப் பாகவி, மன்சூர் காசிபி, அப்துர் ரஹீம் பாகவி, அப்துர் ரஹ்மான் மன்பஈ, ஷாகுல் ஹமீத் ரஹ்மானி, உள்ளிட்ட உலமாக்களும் அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் சென்று பேராசிரியர் க. அன்பழகனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.அப்போது தமிழக வக்ஃப் வாரிய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் உடனிருந்தார்.

.

Wednesday, February 11, 2009

பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட தப்லீக் பிரமுகர் புளியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் தமிழக அரசு உதவி

கொலை செய்யப்பட்ட புளியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த 2 லட்ச ரூபாய் நிதியை அவரது மனைவி சவுதால் பீவியிடம் நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ் வழங்குகிறார். அருகில் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி செயலாளர் புளியங்குடி எம். காதர் மொகிதீன்.

திருநெல்வேலி, பிப்.11-
புளியங்குடியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 09-02-2000 அன்று தப்லீக் ஜமாஅத் பணி செய்வதற்காக பாளையங்கோட்டை கிரசன்ட் நகர் பள்ளி வாசலில் இருந்தபோது வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் கொல்லப்பட்டார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது இவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 2 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்கியது. இந்த வழக்கு தொடர்பாக இன்றைய டி.ஐ.ஜி.யும், அப்போதைய எஸ்.பி.யும் ஆன கண்ணப்பன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டு அப்துல் ரஷீத் சொந்த காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டதாகவும், கொலையாளி அவர் மகன்தான் என்றும் அறிவித்து அவரது மகன் மைதீன் பிச்சையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனைத் தொடர்ந்து அரசு அறிவித்த நிவாரணத் தொகை திரும்பப் பெற்றது. இச் சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அன்றைய மாநிலத் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிப் அன்றைய மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் முதவ்வர் கலைஞரை நேரில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக சி.பி. சிஐ.டி. விசாரணை கோரி னர்.. பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு முஸ்லிம் லீக் பிரமுகர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். கோதர் மொகிதீன், வி.எஸ். டி. சம்சுல் ஆலம் மற்றும் காயல் மகபூப், எல்.கே.எஸ். மீரான் முகைதீன் உள்ளிட்டோர் சென்று சிறை வைக்கப்பட்டிருந்த மொய்தீன் பிச்சையிடம் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்.

உண்மைகளை தெரிந்துகொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இப் பிரச்சினையில் நீதி வழங்க கோரி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மாநாடுகளிலும், செயற்குழு - பொதுக் குழு கூட்டங்களிலும் தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு அப்துல் ரஷீத் கொலைக்கும், அவரது மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முடிவு செய்யப்பட்டு சிறையிலிருந்த அவர் மகன் மொய்தீன் பிச்சை விடுவிக்கப்பட்டார். அவர் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்ட நிவாரணத் தொகை 2 லட்ச ரூபாயை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

சமீபத்தில் புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டங்கள் நடத்தப்பட்டு இது தொடர்பான கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வைக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அரசு அப்துல் ரஷீத் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிதி வழங்கியது. 09-02-2009 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. பிரகாஷ் இந்த நிதியினை அப்துர் ரஷீத்தின் மனைவி சவுதால் பீவியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன், மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி அமைப்பாளர் புளியங்குடி எம். காதர் மொகிதீன் ஆகியோர் உடன் இருந்தனர். அரசு வேலை வழங்கவேண்டுகோள்கொலை வழக்கில் அநி யாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மொய்தீன் பிச்சைக்கு நீதி கிடைக்கும் வகையிலும் காலதாமத மாக இந்த உதவி வழங்கப்பட்டதை கருத்தில் கொண்டும் மொய்தீன் பிச்சைக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது.
.

உடலில் முதுகுவலியோடும் - உள்ளத்தில் இலங்கை வலியோடும் விமர்சனங்களை தாங்கி தமிழர்களுக்காக உழைக்கின்றவர் கலைஞர்

திருவள்ளுர், பிப்.10-
உடலிலே முதுகுவலியோடும் - உள்ளத்தில் இலங்கை வலியோடும் விமர்சனங்களை தாங்கி தமிழர்களுக்காக உழைக் கின்றவர் கலைஞர் என்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது உரை யாற்றினார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை சார்பில் திருவள்ளுரில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் உரை யாற்றுகையில் அவர் பேசியதாவது-சமீபத்தில் இலங்கை தமிழர் படுகொலை பிரச்சினை உக்கிரமானபோது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து அந்த இனப்படு கொலை யைத் தடுத்து நிறுத்த இங்கிருந்து ஒரு மித்த குரல் கொடுக்க ஓரணியில் திரளக் கூடாதோ என்று பத்திரிகை வாயிலாக கவிதை ஒன்று எழுதி அழைத்தார்.

அதற்கு ஆதரவு தெரிவித்து நான் எழுதிய ஒரு கவிதையை இந்த மேடையில் எங்கள் இயக்கத்தின் சார்பாக அரங்கேற்றுகிறேன்.

ஓரணியில் திரண்டிடுவார் உலகத்து தமிழர்க ளெல்லாம் பேரணியாய் கலைஞர் தம் தலைமை ஏற்று தாரணியை மீட்டு வரும் தமிழர் கூட்டம் ஊர் அணியை அமைத்தவரே தமிழகத்தில் யார் அணியும் ஜெயிக்காது நீரே வெல்வீர்.உடலிலே முதுகுவலியோடும் - உள்ளத்திலே இலங்கை வலியோடும் உடல் தாங்குகிறதோ இல்லையோ எதிர்க்கட்சிகளின் மோசமான விமர்சனங்களை உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டும். இலங்கைத் தமிழர் களின் வாழ்வு பள்ளமாகி விட என உடல் உள்ள வேதனையோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழினத் தலைவர் கலைஞருக்கு இந்த கூட்டத்தின் வாயிலாக தெரியப் படுத்துகிறேன்.

இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவான அண்ணன் - தம்பிகள், தாய்மார்கள், சகோதரிகள், அப்பா - பிள்ளைகள் நமது தமிழினம் அழிந்து கொண் டிருக்கிறது. இந்த அவலமான சூழ்நிலையில் தமிழகத்தில் கட்சி மாச்சாரியங்களையெல்லாம் மறந்து நாமெல்லாம் தமிழர்கள் என்ற ஒருமித்த உணர்வோடு செயல்பட வாருங்கள் என அழைக்கும் கலைஞர் அவர்களது பரந்து விரிந்த அழைப்பு என்பது இலங்கை தமிழர் களை மட்டுமல்ல உலகின் எல்லாப் பகுதியிலும் வாழ்கின்ற தமிழர்களுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு தருவதாகும்.

நாம் பிரிந்து நின்றால் இந்த பாதுகாக்கும் செயலை வலிமையாக செய்ய இயலாது. அவ்வாறு செய்வது நம்மை நாமே பல வீனப்படுத்தி தமிழர்களை பாதுகாக்கும் செயலையும் நம்மை செய்யவிடாது செய்துவிடும் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தி ஒருங்கிணைந்து போராடவே இந்த இலங்கை தமிழர் நல உரிமை பேரவை நோக்கமாக கொண்டு பாடுபடுகிறது.

உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர், மூதறிஞர் கலைஞர் அவர்களது தலைமையில் முடிவெடுக்கப்பட்டு முயற்சிகளை மேற்கொள்கின்ற இது சம்பந்தமான அனைத்து செயல்களிலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அருந்தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரிய பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர்களது வழிகாட்டுத லில் இயங்கும் இயக்கத்தை சேர்ந்த நாங்கள் அனைவரும் மனிதச்சங்கிலி போராட்டம், பேரணி, பொதுக்கூட்டம் அனைத் துக் கட்சிகளின் கூட்டம் என்று எல்லா நடவடிக்கைகளிலும் நாடு தழுவிய அள வில் கலந்து கொண்டு வலிமை சேர்த்து வருகின்றோம்.

தலைவர் கலைஞர் அவர்களது வழித் தடத்தை கிஞ்சித்தும் பிசகாது இந்த பிரச்சினை நடைபோட்டு வருகிறோம். இதுபோல் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் ஒன்று திரள வேண்டும் என மிக்க பணிவன்போடு எங்கள் இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்று பாடினார்கள். அது என்ன குணம், தமிழன் உயிர் பிச்சைக் கேட்டு யாரிடமும் தாழ மாட்டான்.

கடைசிவரை எதிர்த்து போராடுவான். அதுபோல் தன்னை நம்பி வந்தவரை தாழ்த்தவும் மாட்டான் - வாழ்த்துவான், வாழவைப்பான். அதனால்தான் ஹவந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று தமிழர்களை உள்ளடக்கிய தாய் தமிழகம் நம்மு டையது. அப்படிப்பட்ட தமிழனை இலங்கை அரசு அழிப்பது நியாயமா என்பதைத்தான் நமது தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு கோஷமாக்கித் தந்துள்ளார்கள். இதைத்தான் நாமக்கல் கவிஞர் ஹதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேநம்மை அழிக்கும் ராட்சசேதமிழன் மேலே கையை வச்சேநிறுத்த மாட்டோம் எங்கள் பேச்சே என தமிழக மக்கள் எச்சரித்து - உச்சரித்து இந்த கூட்டத்தின் மூலம் தெரிவிக்கின்றோம்.இலங்கைத் தமிழர் இன படுகொலையை நிறுத்த தொடர்ந்து தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களது தலைமையிலும், தமிழின தளபதி அவர்களோடு அணி வகுத்து முஸ்லிம் லீக் தலைவர் முனீருல் மில்லத் அவர்களை பின்தொடர்ந்து நாமெல்லாம் அயராது பாடுபடுவோம் என்பதை உறுதிப்படுத்தி இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும் வரை ஓயமாட்டாம். நிலையான அமைதிக்கு வழி காண்போம்! தடுப்போம்! தடுப்போம்!

இனப் படுகொலையை தடுப்போம்! என்ற தலைவர் கலைஞர் அவர்களது வாய் - மெய் மொழியை வழிமொழிந்து பாவேந்தர் பாரதிதாசன் பாடிய எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு - என்ற சங்கநாதம் நம் காதுகளில் ஒலிக்கட்டும் என கூறி முடிக்கின்றேன். இவ்வாறு வடக்கு கோட்டையார் வ.மு. செய் யது அஹமது உரையாற்றினார்.
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template