அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Thursday, April 30, 2009

கருணாநிதியின் மறு உருவம்தான் திருமாவளவன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் பேச்சு


சிதம்பரம், ஏப். 29-

காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள ஆயங்குடி தபால் நிலையம் எதிரில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாநில தலைவர் காதர் மைதீன் கலந்து கொண்டு பேசியதாவது:- முஸ்லிம் மக்களின் உடன் பிறவா சகோதரர் திருமாவளவன். மறைந்த ஜி.கே. மூப்பனாருடன் இணைந்திருந்த காலத்தில் இருந்தே அவரை நன்றாக எனக்கு தெரியும். அவர் தனது சமுதாய மக்கள் நலத்திற்காகவும், சிறுபான்மை மக்களுக்காகவும் பாடுபடக்கூடியவர் என்பதை நன்கு அறிவேன்.

திருமாவளவன் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் ஜனநாயகத்தில் அங்கம் வகிக்கின்ற கூட்டணியில் சேர்ந்து உள்ளார். அதனால் தான் அவரை சிதம்பரத்தில் கருணாநிதி நிறுத்தி உள்ளார். அவர் தனது கட்சிக்கு நட்சத்திர சின்னத்தை வாதாடி பெற்றுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னம் முஸ்லிம் லீக் கட்சிக்கு தொடர்புடைய சின்னம். ஆகவே எங்களுடைய சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்கிறேன்.

தமிழ்நாட்டில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஜமாத்துகள் உள்ளது. சிதம்பரம் தொகுதியில் சுமார் 11/2லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். இந்த ஓட்டுகள் அனைத்தும் திருமாவளவனுக்கே உரியது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

சிறுபான்மை மக்களுக்காகவும், முஸ்லிம் மக்களுக்காகவும் பாடுபடக்கூடியவர் கருணாநிதி. இலங்கை தமிழர் பிரச்சினையில் மற்றவர்களை போல் இல்லாமல் முழு அக்கறையுடன் செயல்பட்டவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. அவரது மறு உருவம் தான் திருமாவளவன். சிறுபான்மை மக்களுக்காக பாடுபட்டு வரும் அவரை சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

தேர்தலுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியில் அ.தி.மு.க. சேரும். இவ்வாறு காதர் மைதீன் பேசினார்.

தற்போது அறிவித்துள்ள இலங்கை ராணுவ போர் நிறுத்தம் நாடகமாகும்.மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லா,


மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லா, சீர்காழி வடகாலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:


இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் படுகொலை உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. ராஜபக்சே அரசு ஈவு இரக்கமின்றி ரசாயன குண்டுகளை பயன்படுத்தி ஈழத்தமிழர் இனத்தை கொன்று குவித்து வருகிறது. தற்போது அறிவித்துள்ள இலங்கை ராணுவ போர் நிறுத்தம் நாடகமாகும்.


இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ராஜபக்சே செய்து வருவது போர் குற்றமாகும்.
ஈராக்கில் ரசாயன குண்டுகளை பயன்படுத்தி குர்து இன மக்களை கொன்று குவித்தவர் ஈராக் அதிபர் சதாம் உசேன். இதனால் குற்றம் சாட்டப்பட்டு சதாம்உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதே போல் சற்றும் குறையாத வகையில் ராஜபச்சே தமிழர் இன மக்களை கொன்றுள்ளார்.


எனவே ராஜ்பக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இலங்கை ராணுவ போர் நிறுத்தம் என்பது காலம் கடந்த ஞான உதயமாகும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும். தற்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.


கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது மகள் திருமணத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்து வந்து விருந்து கொடுத்தவர்தான் மணி சங்கர் அய்யர். எனவே தமிழ் மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை தொகுதி மக்கள் மறக்க மாட்டார்கள்.


இலங்கை பிரச்சினையில் இதுவரை மவுனம் காட்டிய அ.தி.மு.க.வையும் இத்தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.


இவ்வாறு மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா பேசினார்.
பேட்டியின் போது மனித நேய கட்சி நிர்வாகிகள் முகமது இர்பான், முசாவூதீன், முகமது ஜுனபர், அசரப் அலி உள்பட பலர் இருந்தனர்

Tuesday, April 21, 2009

மத்திய சென்னை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வளமாக தமுமுக வினர்
வேட்பாளர் செ. ஹைதர் அலி தனது ஆதரவாளர்களுடன்

சென்னை ரிப்பன் மாளிகையில் ஆயிரக்கணக்கான தமுமுக தொண்டர்கள் பின்தொடர வேட்புமனு தாக்கல் செய்தார்
.



Monday, April 20, 2009

தி.மு.க. தலைமை யிலான ஜானனயக் முற் போக்கு கூட்டணிக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை ஆதரவு

தஞ்சை , ஏப். 19-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைமை யிலான ஜனநாயக முற் போக்கு கூட்டணிக்கு தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

தஞ்சையில் 18-04-2009 அன்று தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் உயர்மட்டக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் லால்பேட்டை மவ்லானா ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமையில் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு-
இந்தியத் திருநாட்டில் தாழ்த்தப்பட்டோர், ஒடுக் கப்பட்டோர், சிறுபான் மையினர் நலம் பேணும் மதச்சார்பற்ற ஆட்சி மத்தியில் அமையவும், தமி ழகத்தைப் பொருத்தவரை முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய துடன் உலமாக்கள் நல வாரியம் அமைத்து முஸ்லிம்களின் கோரிக் கைகளை நிறைவேற்றிய தி.மு.க. தலைமையிலான இந்திய ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடலூர்,சிதம்பரம் தொகுதிகளில் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் சூறாவளி பிரச்சாரம் ..!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களான கடலூர் தொகுதி கே.எஸ்,அழகிரி,சிதம்பரம் தொகுதி தொல்.திருமாவளவன் ஆகியோரை ஆதரித்து சிதம்பரம்,மற்றும் கடலூர் தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்,பி.தீவிர பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார்.

28.04.2009 செவ்வாய்க் கிழமை காலை ஆயங்குடியில் பிரச்சாரத்தை துவக்கும் அவர் காட்டுமன்னார்குடி,லால்பேட்டை,சிதம்பரம்,பரங்கிப்பேட்டை,புவனகிரி,கடலூர்,விருதாச்சலம்,மங்கலம்பேட்டை,நெல்லிக்குப்பம்,பண்ருட்டி,உள்ளிட்ட ஊர்களில் பிரச்சாரத்தில் உரையாற்றுகிறார்.

இந்த பிரச்சாரப் பயணத்தில் கடலூர் மாவட்ட முஸ்லிம் லீகினர்களோடு தோழமைக் கட்சித் தொண்டர்களும் பங்கேற்கின்றனர்.

மத்திய சென்னை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் முதன்முறையாக களம் இறங்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் செ. ஹைதர் அலி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Central Chennai M.M.K candidate S.Hyder Ali Mand ask support from Arch Bishop.ESRA SARGUNAM.
Central Chennai M.M.K Candidate S.Hyder ali Met AIOBC Railway Employees union general Secretary J.K.Pudiyavan.

Wednesday, April 15, 2009

சமூக ஜனநாயக முன்னணி உதயம் - ஒரே சின்னத்தி்ல் போட்டியிட முயற்சி


மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய தேசிய லீக் ஆகிய 3 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.

“சமூக ஜனநாயக முன்னணி” என்ற பெயரில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் சையத்இனாயத்துல்லா ஆகியோர் கூட்டாக சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:


-தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக “சமூக ஜனநாயக முன்னணி” என்ற புதிய கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோம். கடந்த 1 மாதமாக பேசி இன்று இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது.


எங்களுடன் சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை மற்றும் சில அமைப்புகள் பேசி வருகின்றன.


இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி 4 தொகுதியில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறை- ஜவாஹிருல்லா, மத்திய சென்னை- எஸ்.ஹைதர்அலி, பொள்ளாச்சி-உமர், ராமநாதபுரம்-சலீமுல்லா கான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.


இன்னும் சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி பின்னர் அறிவிப்போம்.


புதிய தமிழகம் கட்சி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.


இந்திய தேசிய லீக் 3 தொகுதியில் போட்டியிடுகிறது. திருச்சி, தஞ்சை, கோவை அல்லது தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.


இந்த கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.


இந்த அணியில் விரைவில் இன்னும் பலர் சேருவார்கள்.


கேள்வி:- தி.மு.க., அ.தி. மு.க. போன்ற பெரிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு புதிய கூட்டணியை உருவாக்கியது ஏன்?


ஜவாஹிருல்லா பதில்:- தி.மு.க.வுடன் 1995-ம் ஆண்டு முதல் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டோம். இந்த தேர்தலில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் சிறுபான்மையினரான எங்கள் கட்சி தனி முத்திரை பதித்து விடும் என்று கருதி 1 தொகுதியை கொடுத்து ஓரம் கட்டப்பார்த்தார்கள்.


அதுவும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.


தி.மு.க. காலம் காலமாக இப்படித்தான் செய்து வருகிறது.சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். அதை அவர்கள் ஏற்க வில்லை. இப்போது தி.மு.க. 21 தொகுதியில் அல்ல 22 தொகுதியில் போட்டியிடுகிறது.


காதர்மொய்தீன் முஸ்லிம் லீக் கட்சியும் தி.மு.க. சின்னத்திலேயே நிற்கிறது.


அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வில்லை.


கேள்வி:- டாக்டர் ராமதாஸ் உங்களிடம் அ.தி.மு.க. வுக்கு ஆதரவு கேட்டாரா?


பதில்:- டாக்டர் ராமதாசுடன் நீண்ட காலமாக பழகியுள்ளேன். அவரது கோட்பாடு எனக்கு பிடிக்கும். அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு தர வேண்டும் என அவர் கேட்டார். நான் எங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூறினேன்.


கேள்வி:- எல்லாத்தொகுதிகளிலும் போட்டியிடுவீர்களா?


பதில்:- 40 தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.


கேள்வி:- தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்குவீர்கள்?


பதில்:- நாளை தொடங்குகிறோம்.


கேள்வி:- எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வீர்கள்?


கிருஷ்ணசாமி பதில்:- இலங்கை தமிழர் பிரச்சினையை தி.மு.க., அ.தி.மு.க. கைவிட்டு விட்டது. இலங்கை பிரச்சினையை எடுத்து வைப்போம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது போல தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.


கடந்த 40 வருடத்தில் தென் மாவட்டங்களில் கல்வி, மருத்துவம், தொழிற்சாலை போன்றவை உருவாக்கப்பட வில்லை.கேள்வி:- எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்?பதில்:- எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம்.

நன்றி :

Tuesday, April 14, 2009

சிதம்பரத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்! புகைப்படங்களுடன் செய்தி..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம்
சிதம்பரத்தில் கடந்த 12-4-2009 அன்று
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பிறமத சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த தங்களின் ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

கேள்விகளுக்கு மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள்.
.

.

பொருளாதார அடிமைகளின் விடுதலை வட்டியில்லா வங்கியை நோக்கி...


Monday, April 13, 2009

மனிதநேய மக்கள் கட்சியின் பொள்ளாச்சி வேட்பாளர் அறிவிப்பு


மனிதநேய மக்கள் கட்சியின் பொள்ளாச்சி வேட்பாளராக தமுமுகவின் மாநிலச் செயலாளர் கோவை. இ. உமர் அவர்கள் அறிவிக்கப் பட்டுள்ளார்.


இவர் ஆரம்ப காலத்தில் கோவை குனிய முத்துர் கிளை தலைவராகப் பணியாற்றி பின்னர் மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் மாவட்டத் தலைவர் பதவிக்குப் பின்னர் மாநிலச் செயலாளராக பணியாற்றி வருகிறார்இ கோவை மாவட்ட மக்களால் நன்கு அறிமுகமானவர்.

ஏப்ரல் 15 வேலூர் முஸ்லிம் லீக் வேட்பாளர் பிரச்சாரத்தை துவங்குகிறார்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துர் ரஹ்மான் 15.4.09 புதன் கிழமை காலை 9 மணிக்கு தலைமை நிலையமான காயிதே மில்லத் மன்ஸிலில் இருந்து புறப்பட்டு திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜித் சென்று காயிதே மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார்.

தொடர்ந்து ராயப்பேட்டையில் சிராஜுல் மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார். காலை 10மணிக்கு வேலூர் புறப்பட்டு சென்று தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்.

அன்று மாலை 5 மணிக்கு வேலூரில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., அவர்கள் தலைமையில் நடை பெறும் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்நிகழ்ச்சிகளில் முஸ்லிம் லீக் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்.
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template