தஞ்சாவூர், பிப்.22-
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தஞ்சை மாவட்ட பொருளாளரும், தலைமை நிலைய பேச்சாளருமான சமுதாய கவிஞர் தஞ்சை நபிநேசன் (ஜியாவுதீன்) இன்று (22-2-09) அதிகாலை தஞ்சையில் காலமானார். அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளும், சமுதாயப் பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.
தஞ்சை நபிநேசன் என்று பரவலாக அறியப்பட்ட எச். ஜியாவுதீன் 1992-ம் ஆண்டு முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் சேவையாற்றி வருகிறார்.
தஞ்சை மாவட்ட காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர், மாநில காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் போன்ற பதவிகளை வகித்த அவர் தஞ்சை மாவட்ட பொருளாளராக பதவியேற்று முஸ்லிம் லீகின் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
பூண்டி புஷ்பா கல்லூரியில் பி.எஸ்ஸி., பட்டம் பெற்ற அவர் அண்ணாமலை பல்கலைக்கழக அஞ்சல்வழி கல்வி மூலம் எம்.ஏ. பட்டம் பெற்றார். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்க அவர் ஏராளமான நுல்களை எழுதியுள்ளார்.
விசா பறவைகள்|, புனித நபியே - புகழ் நிலவே|, பிரார்த்தனைப் பூக்கள்|, பச்சை வானில் பொன்விழா பிறைகள்|, தாஜ்மஹால் மனசு|, அண்ணல் நபியின் அற்புத அறிவுரைகள்|, என் நண்பனும் - தேநீர் கோப்பையும்|, புரியாத நட்சத்திரங்கள்| போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.
இலங்கை வானொலியில் இவரது உரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 5 மணியளவில் தஞ்சையில் அவரது இல்லத்தில் காலமானார்.
அவருக்கு தாயும், மனைவியும் உள்ளனர்.
இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் ஆற்றங்கரை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி யில் அவரது ஜனாஸா நல்லடக்கம் நடை பெறுகின்றது.
கவிஞர் தஞ்சை நபிநேசன் மறைவு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது-
கவிஞர் நபிநேசன் சிறந்த கவிஞர். கட்டுரையாலும், கவிதையாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொள்கை கோட்பாடுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். முஸ்லிம் லீகின் வரலாற்றையும், முன்னணி தலைவர்களை படம்பிடித்துக் காட்டுவதில் வல்லவராக திகழ்ந்து வந்தவர்.
சமுதாய எழுச்சிக்கும், மார்க்கத் துறையின் வளர்ச்சிக்கும், முஸ்லிம் லீகின் வலிமைக்கும் காலமெல்லாம் பணியாற்றிய நனிசிறந்த நல்லவர்.
முஸ்லிம் சமுதாயத்தினர் மற்றும் முஸ்லிம் லீகில் உள்ள ஒவ்வொரு வரையும் சரியாக எடைபோடுவதிலும் அவர்களின் பற்றி எழிலார்ந்த குணங்களை விளக்குவதிலும் வல்லவராக விளங்கியவர்.
அண்மையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாட்டில் பங்கேற்று விருதையும் பெற்றார்.
கவியரங்கம், பட்டிமன்றம், சர்வகட்சி கூட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய கொள்கைகளை தெளிவாகவும், உறுதியாகவும் விளக்க கூடியவராக விளங்கி வந்தார்.
அவரின் மறைவு முஸ்லிம் லீகிற்கு பேரிழப்பாகும். தாய்ச்சபையின் சார்பில் மறைவுற்ற கவிஞர் நபிநேசனின் குடும்பத்தா ருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரின் மஃபிரத்துக்கு அனைவரும் துஆ செய்திட கேட்டுக்கொள்கின்றேன்.
My Blog List
-
-
ஜாகிர் உசேன் - தர்ஜுனா பேகம் திருமணம்14 years ago
-
-
லால்பேட்டை முஹிபுல்லா வஃபாத்14 years ago
Categories
- Dr .PERIYAR DASAN
- Dr K V S ஹபீப் முஹம்மத்
- Dr. அப்துல்லாஹ்
- IIT
- TNTJ புதிய கிளை உதயம்
- TNTJ நடத்திய தமிழக முதல்வர் வீடு முற்றுகை
- TNTJ மாணவரணி
- TNTJ மாணவர் அணி
- அடிக்கல் நாட்டு விழா
- அணையா விளக்கு
- அபூபக்கர்
- அப்துல் ஸமது
- அய்மான்
- அய்மான் சங்கம்
- அரசியல்
- ஆயங்குடி
- ஆர்ப்பாட்டம்
- இந்தியன் நேசனல் லீக்
- இப்தார் நிகழ்ச்சிகள்
- இரத்த தான முகாம்
- இலங்கையில்
- இலண்டனில்
- இலண்டன் மாநாட்டில் தமுமுக
- இஸ்லாமிய
- இஸ்லாம் கூறும் மனித உரிமை நிகழ்ச்சியின் புகப்படங்கள்
- உரிமைகள் பற்றிய கலந்துரையாடல்
- உலக அமைதிக்கு வழி ஓரிறை கொள்கை ஒன்றே
- உலகில் முஸ்லிம்களின்
- ஏ. அப்துல் ஹக்கீம் காலமானார்
- ஐ.ஏ.எஸ். தேர்வு:ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி
- ஐக்கிய ஜமா அத்
- ஒரு இலட்சம் பரிசு
- கடலூர் தேர்தல்
- கண்ணியமிகு காயிதெ மில்லத்
- கல்வி
- கல்வி அமைச்சருக்கு ஜவாஹிருல்லா கடிதம்
- காதலர் தினம்
- காயிதெ மில்லத் குறித்து ஆவணப்படம்
- காவல் துறையில் வேலை வாய்ப்பு
- குர்பானி
- கே.எம்.கே.அரிக்கை
- சமுதாயப் பார்வையில் ஒரு சட்ட மசோதா
- சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா
- சென்னையில்
- டிசம்பர் 6
- தமிழக அரசுக்கு நன்றி
- தமிழக மாநில மாநாடு
- தமிழ் இலக்கியக்
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
- தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
- தலைவருக்கு
- திருக்குர் ஆன் மாநாடு
- துணை முதல்வர் மு க ஸ்டாலினுக்கு முஸ்லிம் லீக் வாழ்த்து
- துபாய் மருத்துவமனையில் சுயநினைவிழந்த நிலையில் இந்தியர்
- துபாய்.முஸ்லிம் லீக் தலைவர்
- தேர்தல் 2009
- தொலைபேசியில் குர்ஆன்
- நபிகளாரின் வரலாறு
- நீடூர் மிஸ்பாஹி
- படிக்காமல் வேலைத் தேடி வெளிநாடு வருவோருடைய அவலம்
- பனாத்வாலா நினைவு நாள்
- பிப்ரவரி 14
- புதிய பள்ளிவாசல்
- புனித ஹஜ் பயணம்
- பெருநாள்
- பொருளாதார அடிமைகளின் விடுதலை...
- மணிச்சுடர்
- மணிச்சுடர் செய்திகள்
- மமக
- மனிதநேய மக்கள் கட்சி
- மாநாடு
- மீலாது விழா
- முதல்வரை சந்தித்து சிறைவாசிகள் விடுதலை செய்ய
- முதியோர்கள் தினம்
- முஸ்லிம் மருத்துவ மாணவர்கள்
- முஸ்லிம் லீக்
- முஸ்லிம் லீக் கோரிக்கை
- முஸ்லிம்கள்
- முஸ்லீம் லீக்
- யு எ இ
- ரங்கநாத் மிஸ்ரா
- ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்
- லால்கான் பள்ளிவாசல்
- லால்பேட்டை
- வரவேற்பு
- வழியனுப்பும் நிகழ்ச்சி
- விடுதலைப்போரில்
- வேண்டுகோள்
- வேலூர் நாடாளுமன்ற தொகுதி
- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
- ஜனத்தொகை அதிகரிப்பு...
- ஜாக் தலைவர்கள்
- ஹஜ்
- ஹாஜிகள்
Recent Comments
.
Sunday, February 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2009
(70)
-
▼
February
(11)
- சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களை...
- கோட்டகுப்பம் அப்துஸ் ஸமத் நத்வி ஹஸரத் காலமானார் தல...
- கவிஞர் தஞ்சை நபிநேசன் காலமானார்
- ஐ.ஏ.எஸ். தேர்வு: ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி
- தமிழக அரசுக்கு முஸ்லிம் சமுதாயம் நன்றி
- தமிழக அரசுக்கு நன்றி
- stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி...
- பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட தப்லீக் பிரமுக...
- முஸ்லிம் லீகின் அவாவும் - துஆவும் இலங்கையில் அமைதி...
- உடலில் முதுகுவலியோடும் - உள்ளத்தில் இலங்கை வலியோடு...
- வளைகுடாவாழ் சகோதரர்களின் அவலநிலைகள்
-
▼
February
(11)
No comments:
Post a Comment