அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Wednesday, February 11, 2009

முஸ்லிம் லீகின் அவாவும் - துஆவும் இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும்-

கடலூர், பிப்.11-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஆசையும் - பிரார்த்தனையும் இலங்கை யில் அமைதி திரும்ப வேண்டும். கலைஞர் பூரண நலம் பெறவேண்டும் என்பதுதான் என தமிழ் நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க துறை செயலாளர் மவ்லானா தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் உரையாற்றினார்.

கடலூரில் இலங்கை தமிழர்களுக்காக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது-இலங்கையில் அப்பாவி தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்படுவதையும், போரின் மரபையும், வரம்பையும் மீறி சின்னஞ் சிறு குழந்தைகள் கொல்லப்படுவதையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவரும், மத்திய இணை அமைச்சருமான இ.அஹமது சாஹிப் அவர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொதுச் செயலாள ரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி,யும் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அரசியல்ரீதியாகத்தான் தீர்க்க முடியும். தீர்வுகாண முடியும் என்று தெளிவாக சொல்லி தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் அனைத்து வகையான முயற்சிகளுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவை வழங்கி வரும் என்று சொல்லியுள்ளனர்.

நம் நாட்டிலுள்ள சில தலைவர்கள் தேர்தலுக்காக இலங்கைப் பிரச்சினையை அரசியலாக்கி வருகிறார்கள். ஆனால், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும், மேம்பாடுகளுக்காகவும் அரும்பாடுபட்டு வருகிறார்கள். உடல் நலம் குன்றிய நிலையிலும், மருத்துவமனையிலும் இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பெருந்தலைவர் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ. அஹமது சாஹிப், அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., ஆகியோர் முதல்வர் கலைஞரை மருத்துவ மனையில் சந்தித்து அவர் பூரண நலம் பெற வேண்டும் என்று வாழ்த்தி வந்தார்கள்.உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் மருத்துவமனையிலும் முதல்வர் ஆற்றி வரும் சேவையை எங்கள் தலைவர்கள் நெஞ்சுருக பாராட்டினார்கள். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படு வதை நிறுத்த வேண்டும். உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற்று நலமுடன் வாழ்ந்து நமக்கும், நாட்டுக்கும் பணி செய்திட பிரார்த்திக்கின்றோம்.

இவ்வாறு தளபதி ஷபீகுர் ரஹ்மான் உரை யாற்றினார்.கண்டன ஆர்ப்பாட்டத்திலும் பொதுக் கூட்டத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார் ஹாஜியார், மாவட்ட துணைத் தலை வர்களான லால்பேட்டை கே.ஏ. முஹம்மது, மங்களம்பேட்டை அப்துர் ரஹ்மான், கடலூர் கமாலுத்தீன், மாவட்டச்செயலாளர் ஏ. சுக்கூர், துணைச் செயலாளர்கள் லால்பேட்டை கே.ஏ. அமானுல்லா, விருத்தாசலம் லியாகத் அலி, அப்துல் மஜீத், நெல்லிக்குப்பம் ராஜா ரஹிமுல்லா, மாநில பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷீத்கான், மாவட்ட இளைஞர் அணை அமைப்பாளர் முஸ்தபா, கடலூர் நகரத் தலைவர் அக்பர் அலி, செய லாளர் இஸ்மாயில், பொருளாளர் ஷரீப், மாவட்ட பொருளாளர் மங்களம்பேட்டை ஹபீபுர் ரஹ்மான், லால்பேட்டை நகரச் செயலாளர் முஹம் மது ஆசிப், இளைஞர் அணிச் செயலாளர் சல்மான் மற்றும் மாவட்டம் முழுவதிலுமிருந்தும் முஸ்லிம் லீக் தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template