அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Wednesday, February 11, 2009

பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட தப்லீக் பிரமுகர் புளியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் தமிழக அரசு உதவி

கொலை செய்யப்பட்ட புளியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த 2 லட்ச ரூபாய் நிதியை அவரது மனைவி சவுதால் பீவியிடம் நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ் வழங்குகிறார். அருகில் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி செயலாளர் புளியங்குடி எம். காதர் மொகிதீன்.

திருநெல்வேலி, பிப்.11-
புளியங்குடியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 09-02-2000 அன்று தப்லீக் ஜமாஅத் பணி செய்வதற்காக பாளையங்கோட்டை கிரசன்ட் நகர் பள்ளி வாசலில் இருந்தபோது வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் கொல்லப்பட்டார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது இவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 2 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்கியது. இந்த வழக்கு தொடர்பாக இன்றைய டி.ஐ.ஜி.யும், அப்போதைய எஸ்.பி.யும் ஆன கண்ணப்பன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டு அப்துல் ரஷீத் சொந்த காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டதாகவும், கொலையாளி அவர் மகன்தான் என்றும் அறிவித்து அவரது மகன் மைதீன் பிச்சையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனைத் தொடர்ந்து அரசு அறிவித்த நிவாரணத் தொகை திரும்பப் பெற்றது. இச் சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அன்றைய மாநிலத் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிப் அன்றைய மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் முதவ்வர் கலைஞரை நேரில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக சி.பி. சிஐ.டி. விசாரணை கோரி னர்.. பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு முஸ்லிம் லீக் பிரமுகர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். கோதர் மொகிதீன், வி.எஸ். டி. சம்சுல் ஆலம் மற்றும் காயல் மகபூப், எல்.கே.எஸ். மீரான் முகைதீன் உள்ளிட்டோர் சென்று சிறை வைக்கப்பட்டிருந்த மொய்தீன் பிச்சையிடம் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்.

உண்மைகளை தெரிந்துகொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இப் பிரச்சினையில் நீதி வழங்க கோரி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மாநாடுகளிலும், செயற்குழு - பொதுக் குழு கூட்டங்களிலும் தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு அப்துல் ரஷீத் கொலைக்கும், அவரது மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முடிவு செய்யப்பட்டு சிறையிலிருந்த அவர் மகன் மொய்தீன் பிச்சை விடுவிக்கப்பட்டார். அவர் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்ட நிவாரணத் தொகை 2 லட்ச ரூபாயை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

சமீபத்தில் புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டங்கள் நடத்தப்பட்டு இது தொடர்பான கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வைக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அரசு அப்துல் ரஷீத் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிதி வழங்கியது. 09-02-2009 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. பிரகாஷ் இந்த நிதியினை அப்துர் ரஷீத்தின் மனைவி சவுதால் பீவியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன், மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி அமைப்பாளர் புளியங்குடி எம். காதர் மொகிதீன் ஆகியோர் உடன் இருந்தனர். அரசு வேலை வழங்கவேண்டுகோள்கொலை வழக்கில் அநி யாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மொய்தீன் பிச்சைக்கு நீதி கிடைக்கும் வகையிலும் காலதாமத மாக இந்த உதவி வழங்கப்பட்டதை கருத்தில் கொண்டும் மொய்தீன் பிச்சைக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது.
.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template