அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Wednesday, December 30, 2009

அய்மான் தலைவருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி

கீழக்கரையில் கீர்த்திப் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்,பொருளீட்ட வந்தவர்களை எல்லாம் அல்லாஹ்வின் அருளையும் ஈட்ட வைத்த பெருமைக்குரியவர்,

அய்மானின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்தவர்களில் ஒருவர்.

அனைவர்களின் உள்ளத்திலும் பசுமரத்தாணிபோல் பதிந்திருப்பவர்.
ஆம்! அய்மானின் பெயரைக் கேட்டாலே அடுத்த வினாடி நம் கல்பிலே நிற்பவர் மரியாதைக்குரிய கீழக்கரை டவுன் காஜி .."ஹாதிமுஷ் ஷரீஆ" அல்ஹாஜ் ஏ.எம்.எம்.காதர் பக் ஷ் ஹுஸைன் ஸித்தீகி அவர்கள்தான்!

தனது முப்பத்தைந்தாண்டுகால அமீரகப் பணியில் அசராமல் சமுதாயப் பணியாற்றியவர்.அனைத்து தரப்பினரையும் அரவணைக்கும் ஆற்றல் பெற்றவர்.

இவைகளை எல்லாம் பெருமைக்காகச் சொல்லவில்லை.அவரின் ஒப்பற்ற சமுதாய சேவை அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்க்காகவே இவைகளை பதிய வைக்கின்றோம்.

காஜி ஏ.எம்.எம்.காதர் பக் ஷ் ஹுஸைன் ஸித்தீகி அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் இனிய நிகழ்ச்சி அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள ஹம்தான் ரோட்டில் அமைந்திருக்கு ருசி ரெஸ்டாரண்ட் ஹாலில் 01.01.2010 வெள்ளி மாலை 7 மணிக்கு நிகழ இருக்கின்றது.

நமது அய்மானின் இன்றைய தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத் அவர்கள் தலைமையில் நடைபெறும்விழாவிற்க்கு நோபிள் மரைன் அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீத் அவர்கள் முன்னிலை வகிக்க இசைந்துள்ளார்கள்.

இவ்விழாவில் பங்கேற்ப்பதற்க்காக அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் எம்.லியாகத் அலி அவர்களும், துபை ஈமான் சங்கத்தின் நிர்வாகிகளும்,சங்கைக்குரிய ஆலிம் பெருந்தகைகளும் மற்றும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிக்களும் பங்கேற்று உறையாற்ற இருக்கிறார்கள்..

"ஹாதிமுஷ் ஷரீஆ" தாயகத்திலும் தன் பணியை தொடர்ந்திட வாழ்த்தி வழியனுப்புவோம் வாரீர்!!

Wednesday, December 23, 2009

இராமநாதபுரம், பரங்கிபேட்டையில் பொது தேர்வு பயிற்சி முகாம்

இராமநாதபுரம்

நாள் : 25/12/09- வெள்ளி கிழமை
நேரம் : காலை 9: 30 மணி
சிறப்புரை : சகோ.கலீல்.MBA (மண்டல மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : TNTJ மர்கஸ், AKS காம்ப்லெக்ஸ், (அரவிந்த் மருத்துவமனை எதிரில்), இராம்நாட், இராமநாதபுரம் மாவட்டம்
தொடர்பிற்கு : யாஸின் 9894652633
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.

பரங்கிபேட்டை (கடலூர் மாவட்டம்)

நாள் : ஞாயிற்று கிழைமை (27/12/2009) நேரம் : காலை 9: 30 மணி இடம் : பரங்கிபேட்டை ஷாதி மஹால், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்சிறப்புரை : S.சித்திக்.M.Tech- மாநில மாணவர் அணிச் செயலாளர் தொடர்பிற்கு : 9790325478, 9600613630மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கடலூர் மாவட்ட மாணவர் அணி.

Wednesday, December 9, 2009

தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? TNTJ பயிற்சி முகாம்

1. திருவண்னாமலை ,
நாள் : சனி கிழைமை (12/12/2009)நேரம் : மாலை 4 :00 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், கோபால் தெரு, தர்கா சந்து, தவ்ஹீத் நகர், திருவண்னாமலைசிறப்புரை : S.சித்திக்.M.Tech- மாநில மாணவர் அணிச் செயலாளர்தொடர்பிற்கு : 9486371472, 9787669010மாணவ மாணவிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ திருவண்னாமலை மாவட்ட மாணவர் அணி.

2. கோட்டை குப்பம் (விழுப்புரம் மாவட்டம்)

நாள் : ஞாயிற்று கிழைமை (13/12/2009)நேரம் : காலை 10 :00 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், மோர்சார் தெரு, கோட்டை குப்பம், விழுப்புரம் மாவட்டம்சிறப்புரை : S.சித்திக்.M.Tech- மாநில மாணவர் அணிச் செயலாளர் தொடர்பிற்கு : 9600827946மாணவ மாணவிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ விழுப்புரம் மாவட்ட மாணவர் அணி.

Monday, December 7, 2009

கடலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக டிசம்பர் 6 போராட்டம்

கடலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக டிசம்பர் 6 போராட்டம் மாவட்ட தலைநகரம் கடலூர் உழவர் சந்தை அருகில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. மேலும் முன்னாள் மாநில பொருளாளர் A.S.அலாவுதீன் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.

இதில் மாவட்ட முழுவதிலிருந்தும் கிளை நிர்வாகிகள்,TNTJ தொண்டர்கள் பொது மக்கள் ஏன நூற்றுகணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாபர் மஸ்ஜிதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரியும் லிப்ரான் கமிஷன் அறிக்கையில் குற்றவாளிகல் பெயர் வெளியிட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் கன்டன கோஷங்கள் எழுப்பினர்.





Thanks:

Raisudeen

Tuesday, November 24, 2009

அறிவகம் குர்பானி இலண்டனில் கொடுக்க உடனே தொடர்பு கொள்க;


YOURS
DR. M.A. KABEER, MD HHAAAFIYA HEALTH RESORTLONDON, U.K.00-44-75-8855-8835 (MOBILE)00-44-78-9011-7384 (MOBILE)00-44-20-847-22-999 (LAND LINE)Skype & Action voip ID: dr.m.a.kabeer

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு பி .முட்லூரில் நடைபெற்றது


கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு பி .முட்லூரில் நடைபெற்றது கூட்டதிற்கு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.ஏ.கலிலூர் ரஹ்மான் கலந்து கொண்டு மாவட்ட பிரைமரி மற்றும் கிளைகளுக்கு யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் படிவங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.


முன்னதாக கடலூர் எம்.ஜபார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் தாய்ச்சபையில் தன்னை இணைத்து கொண்டார் இக்கூட்டதிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அப்துல் கப்பார் தலைமை தாங்கினார் செயலாளர் ஏ.சுக்கூர் வரவேற்று பேசினார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் மௌலான தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் மக்காவிலிருந்து அலைபேசி முலம் தொடர்புகொண்டு இயக்க வளர்ச்சிக்கு துஆ செய்வதாக தெரிவித்தார் மாநில பட்டதாரிகள் அணி அமைப்பாளர் ரஷித் ஜான் ,தலைமை நிலைய பேச்சாளர் யு.சல்மான் பாரிஸ் உள்ளிட்ட மாவட்ட பிரைமரி நிர்வாகிகள் கருதுரையற்றினர்கள் மாவட்ட மஹல்ல ஜமாத் ஒருங்கிணைப்பு செயலாளர் பி. முட்லூர் .கப்பார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.


கணக்கரப்பட்டு முன்னதாக சிதம்பரம் தாலுகா கணக்கரப்பட்டு சென்ற அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.ஏ.கலிலூர் ரஹ்மான் .


கணக்கரப்பட்டு பிரைமரி தலைவர் ஷாகுல் ஹமித், செயலாளர் புஹாரி மற்றும் அங்குள்ள ஜமாஅத் நிர்வாகிகளோடு ஆக்கிரமிப்பில் உள்ள வக்ப் சொத்துக்களை பார்வையிட்டதோடு மீட்பதற்கு உரிய நடவைக்கை எட்டுக்கப்படுமென உருதியளித்தர் கணக்கரப்பட்டு குமார். சட்டமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.ஏ.கலிலூர் ரஹ்மான் முன்னிலையில் தாய்ச்சபையில் தன்னை இணைத்து கொண்டார்.

தகவல். இப்னு தளபதி

Tuesday, November 17, 2009

அரஃபா தினம் நவ,26,

Saudi Arabia announced on Tuesday, November 17, that `Eid Al-Adha, one of the two main religious festivals on the Islamic calendar, will fall on Friday, November 27. "The new moon of Dhul-Hijjah was sighted by trusted witnesses on Tuesday in a number of provinces," the Supreme Judicial Council said in a statement published by the state-run Saudi Press Agency. "Thus, Wednesday, November 18, will mark the beginning of the lunar month of Dhul-Hijjah.It is confirmed by Saudi Authorities that ‘Arafah date for Hajj is on Thursday, November 26

Thursday, November 12, 2009

ஐஐடியில் முஸ்லீம்கள் – மாணவர்களே! கனவை நினைவாக்க களமிறங்குங்கள்!

அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவர்களை சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது. கற்பனை செய்துபாருங்கள் :

மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை, மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு, கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது, இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.


இங்கு படிக்க மிக குறைந்த கட்டணமே, வசதி இல்லாத மாணவர்களுக்கு மத்திய அரசே கல்வி செலவை ஏற்க்கும் ( ஐஐடி-யில் படிக்கும் சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது. படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.10,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள். இவை அனைத்தும் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.


இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்,


இட ஒதுக்கீடு : ஐஐடி-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது. IIT-JEE 2010 : தற்போது ஐஐடி-யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2010 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (IIT-JEE 2010) விண்ணப்பம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் கீழே இடம் பெற்றுள்ளது).


இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.


ஐஐடி-யில் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லி கொள்பவர்களின் ஆதிக்கம் : ஐஐடி-யில் பெறும்பாலும் படிப்பதும், ஆசிரியர்களாக இருப்பதும் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்ளும் பார்பனர்கள், , இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, ஐஐடி-யில் சேருவது மிக மிக கடினம்,


சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும். அரசு இட ஒதுகீடு என்று அறிவித்த பிறகும் இவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி (ஐஐடி-யில் அதிகார மட்டத்தில் இவர்களே அதிகம் உள்ளனர்) இட ஒதுக்கீட்டை கிடைக்கவிடாமல் செய்வது, சென்ற ஆண்டு மாணவர் சேர்கையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கோட்டாவில் சேர்க்க தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி 1,100 இடங்கள் காலியாக வைத்து, அதே போல 53 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்களில் சேர்க்கவும் தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி, இதனால் அனைத்து இடங்களும் பொதுக் கோட்டாவுக்கு மாற்றுகின்றோம் என்று கூறி அந்த இடத்தையும் இவர்களே எடுத்து கொண்டனர்.


இது சம்ந்தமாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடந்தும் எந்த பலனும் இல்லை . மாணவ மாணவியர்களே! இதை மாற்ற நாமும் ஐஐடி-யில் படிக்க வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.


உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்களை படிக்கவைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகின்றது நமது மாணவரணி, உங்களுக்கு வழிகாட்ட ஐஐடி-யில் படித்த சகோதரர்களும் நமது மாணவரணியில் உள்ளனர். உயர் கல்வி கற்க முஸ்லீம்களை ஊக்குவிக்க தமிழகத்தின் மூலை முடுக்குகளெள்ளாம் விழிபுணர்வு பிராசாரங்களையும் வழிகாட்டும் முகாம்களையும் நடத்தி வருகின்றோம். ஐஐடி நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது TNTJ மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம்.


நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு ஐஐடி தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள். தேர்வுகள் பற்றியும், விண்ணப்ப படிவங்கள் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள TNTJ மாணவரணியின் சிறப்பு குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.


1. S.N. அஹமது இப்ராஹீம். B.Tech – 9841464521.

2. K. ஹஸன் B.E - 9940611315

IIT-JEE 2010 தேர்வை பற்றிய முழு விபரம்
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :(ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்)டிசம்பர் – 19 (19/12/09) இன்ஷா அல்லாஹ்
தேர்வு நடைபெறும் தேதி ஏப்ரல் – 11 (11/04/10)இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை) இன்ஷா அல்லாஹ்
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி மே – 26 (26/05/10) இன்ஷா அல்லாஹ்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Chairmen, JEE, IIT Madras,
Chennai - 600036
Phone : 044-22578220
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :
இந்தியன் வங்கி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள Help line சென்டர்கள்விண்ணப்ப படிவத்தை பற்றி அறிந்து கொள்ள, சந்தேகங்களுக்கு தெளிவு பெற ஐஐடி - மெட்ராசின் ஹெல்ப் லைன் எண் (Help line Number)044-2250 4500 (காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை)விண்ணப்பத்தின் விலை :Rs.1,000,(ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)வயது வரம்புஅக்டோபர் 1, 1985 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :a) +2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள்,b) +2 வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள்.c) 3 ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள்குறைந்தபட்ச மதிப்பெண்+2-வில் குறைந்த்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

Tuesday, October 27, 2009

லால்கான் பள்ளிவாசல் சொத்துக்களை பாதுகாக்க கோரி

சிதம்பரம்,அக்.27-
லால்கான் பள்ளிவாசல் சொத்துக்களை பாது காக்க வலியுறுத்தி சிதம் பரத்தில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.

கண்டன ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் லால்கான் பள்ளி வாசலில் ஊழல் நடந்த தாகவும்,அந்த பள்ளிவாசல் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தியும் சிதம்பரம் ஆர்.டி.ஓ.அலுவலகம் முன்பு லால்கான் பள்ளிவாசல் மீட்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க.மாநில துணை செயலாளர் ஜின்னா தலைமை தாங்கினார்.சிதம்பரம் வர்த்தக சங்கம் கட்டுமான பொருள் வணிகர் கூட்டமைப்பு தலைவர் அன்சாரி, நகரசபை உறுப்பினர் முகமது ஜியாவுதீன், இஸ் மாயில், முகமதுஅலி, அல்தாப் உசேன்,தாஜீதீன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஷேக் தாவுத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சுக்கூர், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மெகராஜ்தீன், முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் முகமது ஜெக் கரியா, மூப்பனார் பேரவை தலைவர் முகமது மக்கீன், ரகமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர பொருளாளர் தாஜிதீன் நன்றி கூறினார்.

Wednesday, October 21, 2009

சிறுபான்மையினரான நமக்கு பல அரசியல் கட்சிகள் எதற்கு?

லால்பேட்டை , அக் 21-
சிறுபான்மையினரான நமக்கு பல அரசியல் கட்சி கள் எதற்கு? முஸ்லிம்கள் அனைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் ஒன்றுபட வாரீர் என தமிழ் நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ. எம். அபூபக்கர் அழைப்பு விடுத்தார்.

கடலூர் மாவட்டம் லால்பேட்டை நகரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது-

வரலாற்று சிறப்பிற் குரிய லால்பேட்டை நகரில் சமுதாயத்தின் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொதுக் கூட்டம் எழுச்சியோடு நடைபெற் றிட ஏற்பாடு செய்த தாய்ச் சபையின் செயல்வீரர்க ளுக்கு தலைமையின் சார் பில் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன். லால்பேட்டையில் உள்ள மன்பவுல் அன்வர் அரபிக் கல்லூரி துவங்கப்பட்டு பல ஆயிரம் உலமாக்களை இச்சமுதாயத்திற்கு வழங்கி யிருக்கின்றது.

இப்பெரு நகரில் தாய்ச் சபையின் அழைப்புப் பணிக்காக நாங்கள் வந்தி ருக்கின்றோம். முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு எதிர்வரும் அக்டோபர் 24ம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கின்றது. முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கின்றோம். இக்கூட் டம் தாய்ச்சபை வரலாற் றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் பத்து லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென தலைவர் பேராசிரியர் அவர்கள் நம்மை பணித் திருக்கின்றார்கள். உறுப் பினர் சேர்ப்புப் பணியை துரிதப்படுத்திடவும், அனைவரையும் உற்சாகப் படுத்திடும் நோக்கிலும் மூன்று வழிமுறைகளை கையாள வேண்டும். முத லில் முஸ்லிம் லீகில் இருக் கக் கூடிய உறுப்பினர்கள் அனைவர்களையும் நேரில் சந்தித்து ஈடுபாடு கொள்ள செய்ய வேண்டும். சிறு சிறு பிரச்சினைகளை பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்து ஈகோ பார்க் காமல் செயலாற்ற வேண் டும்.

அடுத்ததாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புக் களில் இருக்கக் கூடியவர்க ளையும் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீகில் பணிக ளாற்ற அழைக்க வேண் டும். பல்வேறு அமைப்புக் களிலிருந்து கொண்டு சமூக நலப் பணிகளாற்று வதில் எந்த தவறும் இல்லை. நாம் கூறுவதெல் லாம் அர சியல் ரீதியாக தாய்ச்சபையில் ஒன்று படுங்கள், ஆதரவு தாருங் கள் சிறுபான்மை யினராக இருக்கக் கூடிய நமக்கு இரண்டு - மூன்று அரசியல் கட்சிகள் தேவை இல்லை. இதனால் எந்த நன்மையும் இல்லை. தேசிய லீக், த.மு.மு.க, ம.ம.க, தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இயக்கங்களிலிருப்பவர்களும் சமுதாய பணியில் இருக்கக் கூடியவர்கள். நாம் எல் லாம் ஒரு கொடியில் பூத்த மலர்கள் தான்.

அனைவர் களையும் அரசியல் ரீதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் ஒன்றுபடுத்தும் முயற்சியை நாம் தொடர்ந்து செய்ய வேண் டும்.

தேசிய லீக் துவங்கிய இடம் லால்பேட்டை, எனவே நாங்கள் இவ்வி யக்கத்தை கலைக்க மாட் டோம் என்று சிலர் இங்கு கூறி வருவதாக நான் அறிகி றேன். நான் அவர்களுக்கு பணிவோடு தெரிவிப்பது , இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீகை கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத் நிறுவிய போது, தாய்ச் சபையை இந்நாட்டில் நிலைக்க உதவியவர்கள், உழைத்த வர்கள் லால்பேட் டையை சேர்ந்தவர்களும், இங்கு பயின்ற உலமா பெருமக் களும்தான்.

இதை பாதுகாக்க நீங்கள் கடமை பெற்றிருக் கின்றீர்கள் அல்லவா! சில காரணங்களால் தேசிய லீக் எனும் இயக்கம் தோன்றி இருக்கலாம். சிராஜுல் மில்லத் அவர்களாகட்டும் பன் மொழிபுலவர் அப்துல் லத்தீப் சாஹிப் ஆகட்டும் இவரும் சமுதாய ஒற்று மையை விரும்பியே வாழ்ந் தனர்.

சிராஜுல் மில்லத் தின் மறைவிற்கு ஒரு மாதத் திற்கு முன் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொன் விழா மாநாட்டின் போது அப்துல் லத்தீப் அவர் களுக்கு சிராஜுல் மில்லத் கைப்பட கடிதம் எழுதி தாய்ச்சபைக்கு அழைத் தார். அதே போல் சிரா ஜுல் மில்லத் மறைவிற்கு பின் வேலூரில் நடை பெற்ற இந்திய தேசிய லீக் மாநில மாநாடு நுழைவு வாயிலுக்கு சிராஜுல் மில்லத் பெயர் சூட்டப்பட் டது.

என்றும் இல்லாத அளவிற்கு இன்று முஸ்லிம் லீகின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பல்வேறு அமைப்பி னரும் தாய்ச்சபையில் இணைந்து வருகின்றனர். காஷ்மீரில் உள்ள கல்வி யாளர்களும், சமூக சேவ கர்களும், ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்களும் முழுமையாக தங்களை முஸ்லிம் லிகில் இணைத் துக் கொள்ள வற்புறுத்தி வருகின்றனர்.

இன்று தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களின் உண்மையான தோழன் முஸ்லிம் லீக் தான் என்று உணர்ந்து முஸ்லிம் லீகில் இணைந்து வருகின்றனர்.

அனைத்து தரப்பு சிறு பான்மையினரையும், தாழ்த்தப்பட்ட மக்களை யும் தாய்ச்சபையில் இணைத்து சமூக நல்லி ணக்க - சகோதரத்துவத் திற்கு கைகொடுக்கும் இயக்கம் முஸ்லிம் லீக் என்பதை நிலைநிறுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட தாய்ச் சபையின் உறுப்பினர் சேர்ப்புப் பணியில் முழு கவனம் செலுத்திட வேண் டும். மாநில தலைமை அறி விக்கக்கூடிய திட்டங்களை ஏதோ நாங்கள் சில பேர் கூறி வருகின்றோம் என்று இல்லாமல் தாய்ச்சபை அனைத்து மாவட்ட - நகர நிர்வாகிகளும் முழு கவனம் செலுத்தி, ஈடுபாட்டுடன் உறுப்பினர் சேர்ப்புப்பணி களை தீவிரப்படுத்த வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.

Thursday, October 15, 2009

Monday, October 12, 2009

உலகில் முஸ்லிம்களின் ஜனத்தொகை அதிகரிப்பு...

வாஷிங்டன்:உலகத்தில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு அந்த சமூகத்தவரின் ஜனத்தொகை அதிகரித்துள்ளது.சமீபத்தில் மத அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.157 கோடி முதல் 180 கோடி வரை முஸ்லிம் சமூகத்தவரின் எண்ணிக்கை உள்ளது. லெபனான் முஸ்லிம் நாடு. இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர். இதே போல சிரியா முஸ்லிம் நாடு. ஆனால் இந்தநாட்டை விட சீனாவில் முஸ் லிம்கள் அதிகம் உள்ளனர். ஜோர்டான் மற்றும் லிபியாவை விட, ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானிலும், எதியோப்பியாவிலும் சரிவிகிதத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். உலகம் முழுவதும் 220 கோடி கிறிஸ்துவர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில் உள்ளனர்.

அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம் சமூதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரபு நாட்டவர்கள் தான் முஸ்லிம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக் கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களில் ஷியா, சன்னி பிரிவு வேறுபாடு ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. ஈரான், ஈராக்,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.

புதிய வரலாறை தொடர புறப்பட்டு வாருங்கள்! திருப்புமுனைக்கு திருச்சியில் வடிவம் கொடுப்போம்! -கே.எம்.கே


திருச்சியில் வரும் 23, 24 தேதிகளில் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடுகின்றனர். வருங்காலத்துக்கு உரிய செயல் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்த நாடுகின்றனர்.

தமிழகமெங்கும் உள்ள அறுநூறுக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வருவர், புதிய சிந்தனைகள் தருவர்.

திருச்சிராப்பள்ளி, தமிழகத்தின் நடுப்பகுதியாக - மைய இடமாக இருப்பதால், அனைவரும் வரவும், அரிய பெரும் ஆலோசனைகளைத் தரவும் முடியும் என்பதற்காகவே இந்த மாநகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் திருச்சியைப் பற்றிக் கூறும் போதெல்லாம் ஹதமிழகத்தின் நெஞ்சத் தாமரை என்று வருணிப்பார்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் ஆக்க விரும்பினார் என்பது வரலாற்றுச் செய்தி.
தி.மு.க. இன்றைக்கு மாநிலத்திலும், மத்தியிலும் ஆளும் கட்சியாக வளர்ந்திருக்கிறது.
இந்த இயக்கம் தேர்தலில் முஸ்லிம் லீக் வரலாற்றில் திருச்சிக்குத் தனிச் சிறப்புகள் பலப்பல உண்டு. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் லக்னோவில் கூடி முஸ்லிம் லீக் கலைக்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றிய போது, அதே கால கட்டத்தில் திருச்சி தேவர் மன்றத்தில் முஸ்லிம் லீக் ஊழியர்கள் கூடி, சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக் தொடரும் - நீடிக்கும் - நிலைக்கும் என்று தீர்மானம் போட்டு இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த பூமி இந்த திருச்சிதான்.

சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம் லீகிற்கு எதிராக வீசிய சூறாவளியால் பாதிக்கப்படாத திருச்சி முஸ்லிம் லீக் கோட்டையாகவே இருந்தது. திருச்சி முஸ்லிம் லீக் ஊழியர் திலகங்களாக விளங்கியவர்கள் காயிதெ மில்லத் அவர்களின் அத்யந்த நண்பர்கள் ஆனார்கள். அவர் களின் அரசியல் ஆலோசகர்களாகத் திகழ்ந்தார்கள். காயிதெ மில்லத் காலத்தில் திருச்சி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இரண்டாவது தலைமையகமாகவே செயல்பட்டது.

வித்வான் ஏ.கே. ஜமாலி, பாஷாபாய், நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப், அப+பக்கர் ஆகியோர் ஒன்றுபட்டு ஹமறுமலர்ச்சி வார இதழ் துவக்கினர். ஆசிரியர் ஏ.எம். ய+சுப் அவர்களின் எழுத்தும், பாஷா சாஹிபின் கொள்கை விளக்கமும் தாங்கிய மறுமலர்ச்சி தமிழகத்தில் முஸ்லிம் லீகை எழுச்சி கொள்ளச் செய்தது - கேரளாவில் கிளர்ந்து எழ வழிகாட்டியது.

1958 ஜனவரி 11, 12 தேதிகளில் திருச்சியில் நடத்தப் பட்ட முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடுதான் - நூலாசிரியர் ரஜாகான் எழுதியுள்ளபடி அந்த மாநாட்டில் திரண்ட இருபது ஆயிரம் முஸ்லிம் லீகர்கள் எழுப்பிய தக்பீர் முழக்கம் தான் காயிதெ மில்லத் அவர்களுக்கு புதிய உற்சாகத்தை ஊட்டியது. முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கையை உருவாக்கித் தந்தது.

இதே திருச்சி காட்டூரில் 1962-ல் கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில்தான் முஸ்லிம் லீகின் வளர்ச்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தும் வகை காணப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் அவர்களால் மஜ்லிசே முஸாவரத் அமைப்பு உருவாக்கப் பட்டது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் முஸ்லிம் லீகுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை திருச்சி காட்டூர் முஸ்லிம் லீக் கூட்டம் வலியுறுத்தியே வரலாறு கூறிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு நாமெல்லாம் பெருமிதம் கொள்ளும் வகையில் முஸ்லிம் லீக் வரலாறு என்று ஒரு முழுமையான நூலை இந்தியாவில் யாரும் எழுதவில்லை. கேரளாவில்கூட ஒரு வரலாற்று நூலை யாரும் யாத்துத் தரவில்லை. மறுமலர்ச்சி ஏட்டின் துணை ஆசிரியர் பொறுப்பு வகித்த எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் தாம் இந்த சரித்திர சாதனையைச் செய்து முடித்திருக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்பு திருச்சிக்கு உரியதுதான்.

கடந்த அறுபது ஆண்டுகளாகப் பலப்பல வரலாற்று நிகழ்வுகளுக்கு உரிய தலமான திருச்சியில்தான் அக்டோபர் 23 வெள்ளிக்கிமை மாலை மாநில நிர்வாகிகள் கூட்டமும் அக்டோபர் 24 சனிக்கிழமை காலை மாநில பொதுக்குழு கூட்டமும் நடைபெறுகிறது.

திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், முன்னணித் தொண்டர்களும் கூட்ட ஏற்பாடுகளைச் சிறப்பாக மேற்கொண்டு அனைவரையும் வரவேற்க ஆர்வமிகுதியுடன் காத்திருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்றைக்கு தேச மக்களால் வரவேற்கப்படும் இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தை மேலும் வலிமை யுள்ளதாகவும், புதிய பொலிவுமிக்கதாகவும், சமுதாயத் தின் கனவுகளை நனவாக்கித் தரும் அரசியல் நிறுவன மாகவும் வளப்படுத்த இந்தப் பொதுக்குழு பயன்பட வேண்டும்.

புதிய வரலாற்றைத் தொடர புறப்பட்டு வாருங்கள் திருச்சிக்கு!தீர்க்கமான முடிவு எடுப்போம்! திருப்புமுனைக்கு வடிவம் கொடுப்போம்!

Friday, October 9, 2009

முதியோர்கள் தினம் - இஸ்லாமிய பார்வையில்

முதியோர்கள் தினம் - இஸ்லாமிய பார்வையில்

மொளலவி ஷம்சுத்தீன் காசிமி உரை

Wednesday, October 7, 2009

இந்தியன் நேசனல் லீக் சென்னையில் ஆர்ப்பாட்டம்...!

இந்தியன் நேசனல் லீக் வருகின்ற அக்டோபர் மாதம் 14 ம் தேதி சென்னை, மெமோரியல் ஹால் முன்பாக ஒரு மாபெரும் அர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது.

தமிழக முதல்வர் அவர்கள் கடந்த செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை என்று 10 கோவை குண்டு வெடிப்பு கைதிகளை விடுவித்தது வெறும் கண்துடைப்பு நாடகமே. அவர்கள் 10 பேரும் தண்டனை காலம் முடிந்து சிறது நாட்களில் தானாக விடுதலை ஆக இருந்தவர்கள்தான்.

உண்மையில் சிறையில் வாடி வதங்கும் 56 கோவை குண்டு வெடிப்பு சிறைவாசிகளை விடுதலை செய்யாமல் இந்த 10 பேரை மட்டும் கண்துடைப்பாக விடுதலை செய்தது நமது முதல் அமைச்சர் நமது சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகம் ஆகும்.

இதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Sunday, October 4, 2009

அணையா விளக்கு,அப்துல் ஸமது....!

அனைத்துலக இஸ்லா மியத் தமிழ் இலக்கிய மூன்றாம் மாநாடு - உலகளாவிய அளவில் அறிஞர் பெருமக்கள் குழுமி யிருந்த அரங்கு. சீரிய சிந்தனையாளர் களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

மாபெரும் மாநாட்டை நடத்தியதில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியில் உறைகிறார்கள் மேடையில் சோகம் ஆம்.

பொற்கிழி வாங்கிய சிந்தனையாளர்கள், தொகை குறைவு ஆகவே திருப்பித் தருகிறோம் என சொன்னதால்தான் அந்த சோகமும் - அதிர்ச்சியும்! எவர் சொல்லியும் சமாதானம் செய்ய முடிய வில்லை
அந்த நெருக்கடியான நேரத்தில்...

என்ன காரியம் செய் கிறீர்கள்.... காயல்வாசிகள் கொடுத்துப் பழக்கப்பட்ட வர்கள்.

அவர்களுக்கு வாங்கத் தெரியாது வர லாற்றை மாற்றி விடாதீர் கள். இந்த பிரம்மாண்டமான பந்தலைத் தாங்கி நிற்கும் தூண்களைப் பாருங்கள் அவைகள் கம்பங்களல்ல - இந்த மண்ணில் தோன்றி இஸ்லாமியத் தமிழுக்கு உரமேற்றிய மாணிக்கங் களான 130 புலவர்கள் - இந்த புலவர்களை தந்த மண்ணுக்கு களங்கம் ஏற்படுத்திவிடாதீர்கள் என ஒலிவாங்கியில் குரல் ஒலிக்கிறது

இந்த குரல் ஒலித்த நேரத்தில், ~தலைவரே! எங்கள் முடிவை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்@ பொற்கிழியை தக்கவைத் துக்கொள்கிறோம் என கண்ணியமாக பதிலளித் தனர் பொற்கிழி வாங்கி யோர். பல்லாயிரக் கணக் கானோரால் நிரம்பி வழிந்த அரங்கமே தக்பீர் முழக் கத்தால் அதிர்ந்தது.

நிமிடப் பேச்சில் கோபப் பட்டவர்களையும் சந்தோ ஷத்துடன் சம்மதிக்க வைத்த குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?

தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஒரு பொதுக்குழு கூட்டம். கலகலப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென, ~நான் வெளி நடப்புச் செய்கிறேன் என்ற ஒரு குரல். குரல் வந்த திசையை நோக்கி ஏன் என்கின்றனர் கூட்டத்தினர்.

~~தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை முஸ்லிம் லீக் தலைவர்கள் சென்று பார்வையிட்டுள் ளனர். ஆனால், எங்கள் கூத்தாநல்லூரை அவர்கள் புறக்கணித்து விட்டனர். ஆகவேதான், இந்த வெளி நடப்பு என பதில் சொல்கிறார் வெளிநடப்பு செய்ய இருந்தவர்.

கூட்டத்தில் தலைமைப் பீடத்தை அலங்கரித்தவர் நிதானமாக பதில் சொன் னார், ~பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்றவர்கள் முஸ்லிம் லீகின் தலைவர்கள்தான்@ கூத்தாநல்லூரிலேயே முஸ்லிம் லீகில் மிகப் பெரிய தலைவர் சாரண பாஸ் கரனார் இருக்கும்போது நாங்கள் செல்வது அவ்வளவு சரியாக இருக்குமா? என கேட்டார்.

பொதுக்குழு கூட்டம் மட்டுமல்ல. வெளிநடப்பு செய்ய இருந்த கவிஞர் திலகம் சாரண பாஸ்கர னாரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தார். அந்தக் கூட்டத்தின் தலைமைப்பீடத்தை அலங் கரித்தவர் யார் தெரியுமா?
இப்படி மக்கள் மன்றம், கட்சிக் கூட்டம் என்று மட்டும் இல்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஒரு நாள்...

~~எங்கள் முழு சக்தியை யும் திரட்டி இதை எதிர்க் கிறோம் என பேசுகிறார்... ஆளும் வரிசையில் அத்தனை பேரும் வாய்விட்டு சிரிக் கின்றனர். அவர்கள் சிரிப்பதற்கு காரணம்... அன்று சட்ட மன்றத்தில் முஸ்லிம் லீகிற்கு இரண்டே உறுப் பினர்கள்தான்! முழு சக்தி என்றதும் சிரித்தனர். சட்டமன்றத்தில் பேசிய வர் என்ன பதில் சொன் னார் தெரியுமா?

சிரிக்காதீர்கள் - சிரிக்க வைக்கப்படுவீர்கள்!

இந்த ஒரு வார்த்தை யைக் கேட்டு சட்டமன்றம் நிசப்தமானது. சிரித்தவர் களின் நாடி நரம்புகள் அடங்கின. கொஞ்ச நாட்களில் சிரித்தவர்கள் சிரிக்க வைக்கப்பட்டது நடக்கத்தான் செய்தது.

சட்ட சபையை ~நிசப்த மாக்கியது யார் தெரியுமா?...
இப்படி பட்டியல் போட் டுக்கொண்டே போகலாம்.

சட்டசபையில் முழங் கியவர், பொதுக்குழுவில் தலை மைப் பீடத்தை அலங்கரித்தவர் - உலகத் தமிழ் மாநாட்டில் பொற் கிழியை தக்க வைக்கச் செய்தவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் அவர்கள்தான்.

அவர் தலைமை ஏற்றால் சபை அலங்காரம் பெறும். அவர் நாவசைந்தால் தமிழ் நளினமாடும். அருள் மறை குர்ஆனுக்கு முதன் முதலில் தமிழில் விளக்கவுரை எழுதிய அல்லாமா அப்துல் ஹமீது பாகவி - ஜெய்னப் பீவி தம்பதியருக்கு 1926 அக்டோபர் 4இல் பிறந்தவர் சிராஜுல் மில்லத்.
அப்துஸ்ஸமத் தேவைகளற்றவனின் அடிமை என்ற பொருள் பொதிந்த பெயரைத்தான் தன்பிள்ளைக்கு சூட்டி மகிழ்ந்தார் அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீத் பாகவி!
சிராஜுல் மில்லத் சமுதாயம் தன் தேவை களுக்காக இவரை தலைமை பீடத்தில் அமர வைத்த போது சமுதாயத்தின் ஒளிவிளக்கு என்ற பொருள் நிறைந்த பட்டத்தை சூட்டியது.

சிந்தனைச் செம்மல் தமிழ் கொஞ்சி விளை யாடிய அந்த நாவுக்கரசரை தமிழ், கூரும் நல்லுலகம் இப்படி அழைத்த போது - கருத்துச் சுரங்கமாகவும், காலப் பெட்டகமாகவும் பவனி வந்தவர்
பொது மேடைகளில் அவர் சொற்பொழிவை துவக்குவதில்லை வார்த் தைகளை தொடங்குவார் அதில் வரலாறு வலம் வரும் கருத்துக்கள் ஊற்றெடுக் கும். அவர் சாதனைகளை சொல்லிக் காட்டும்போது ஹமன்னிக்கத்தக்க பெருமிதம் கொள்வார்.

அவர் மகிழ்வை பரிமா றும்போது ஹபுளகாங்கித மடைவார்
என்ன அற்புதமான வார்த்தைகள்!

அறிஞர் அண்ணாவுக்கு இது நூற்றாண்டு!

அவரே இவரது தமிழுக்கு ரசிகர்.
ஒரு நிகழ்ச்சியில் இவர் பேசிக் கொண்டிருந்த போது அண்ணா மேடைக்கு வந்தார் இவர் பேச்சை முடிக்கச் சொன்னார்கள் - முடித்தார்.
ஒலிவாங்கி முன் அண்ணா வந்தார் நான் இங்கே பேசவரவில்லை@ அப்துஸ் ஸமதின் பேச்சை கேட்கத்தான் வந்தேன் பேசட்டும் என்றார் - இவர் பேசி முடித்த பின்தான் அண்ணா பேசினார்.

அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்தின் திருமணம்..... தலைவர்கள் அத்தனை பேரும் பங்கேற்று சிறப்பித்தனர்
வரவேற்றுப் பேசிய அண்ணா சொன்னார் - இங்கு ஏராளமான சொல் லாளர்கள் வந்துள்ளீர்கள், எல்லோருக்கும் பேச வாய்ப்பளிக்க நேரமில்லை உங்கள் அனைவர் சார்பாகவும் என் அன்புத் தம்பி மட்டுமே வாழ்த்திப் பேசுவார் என்றார்.

வந்திருந்த அனைவரும் நாவலரா, கலைஞரா என்றெல்லாம் பட்டியல் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் பட்டென அழைத்தார் - அப்துஸ் ஸமத் என்று! இவரது இதழியல் வரலாறு இருபத்தெட்டாம் வயதில் மணிவிளக்கு மாத இதழில் தொடங்கி மணிச் சுடர் வார இதழ், அறமுரசு நாளிதழ், கிரஸண்ட் ஆங்கில இதழ், மணிச்சுடர் நாளிதழ் என விரிவடைந் தது.

அவற்றில் எழுதப்பட்ட ஆக்கங்களெல்லாம் வார்த் தைகளல்ல - வைரவரிகள் - சிந்தனைக் களஞ்சியங்கள்!

இவர் அரசியலில் ராஜ தந்திரி
1959இல் சென்னை மாநகராட்சி தேர்தலில் துறைமுகம் வட்டத்தி லிருந்து முஸ்லிம் லீக் சார்பில் வெற்றி பெற்றார்.

அதே ஆண்டுதான் கண்ணியத்தின் காவலர் காயிதே மில்லத் அவர்களை அறிஞர் அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தினார். இதனால்தான் 1962இல் தி.மு.க. வுடன் முஸ்லிம் லீக் கூட்டணி ஏற்பட்டது.

1975இல் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தினார் அதை எதிர்த்த காரணத்தால் 1976இல் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தி.மு.கவினர் தொல்லை களுக்கு ஆளாக்கப்பட்டனர்.

1977இல் நடந்த பொதுத் தேர்தலில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் - ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட், ஜனசங்கம், லோக்தளம் ஆகியகட்சிகளை இணைத்து ஜனதாவை துவக்கினார். அது வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

மொரார்ஜிக்கும், துணை பிரதமர் சரண்சிங்கிற்கும் ஏற்பட்ட மோதலில் நாடாளுமன்றம் கலைக் கப்பட்டு 1980 ஜனவரியில் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸோடு தி.மு.க. விற்கு தோழமை ஏற்படுத்த இவர் முயற்சி மேற் கொண்டார். கலைஞரின் சம்மதத்தை பெற்று அவரது தூதுவராகவே டெல்லி சென்று இந்திரா அம்மை யாரை சம்மதிக்க வைத்தார்.

இந்திரா தமிழகம் வந் தார். ஒரே மேடையில் இந்திரா- கலைஞர் - அப்துஸ் ஸமத்!

ஹநேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக! - கலைஞர் அழைக்க, இந்திரா உரையாற்ற புன்னகை பூத்த முகத்தோடு இவர் பார்த்து மகிழ்ந்தார்.

டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தை நடத்திக் கொண்டிருந் தபோது, இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்கள்...... 1990இல் டாக்டரை சந்தித்த இவர், சங்கம் நடத்தி சமூக பிரச்சனைக்காக சாலையில் இறங்கும் நீங்கள், கட்சி நடத்தி சட்டமன்ற நாடாளு மன்றங்களில் காரியம் சாதிக்கலாமே என ஆலோ சனை வழங்கினார்.

அதுவரை அரசியலே கூடாது என்ற நிலைப் பாட்டில் இருந்த டாக்டர் ராமதாஸ், சிந்திக்க தலைப் பட்டார்@ அதன் விளைவு தான் பாட்டாளி மக்கள் கட்சி! 1991 ஜூனில் நடை பெற்ற தேர்தலில் இக்கட் சியுடன் முஸ்லிம் லீக் தோழமை கொண்டு 18 இடங்களில் போட்டி யிட்டது. அதில் திருச்செந் தூர் தொகுதியில் நான் வேட்பாளன்.

கால் நூற்றாண்டு காலம் இவரது நிழலில் பவனி வர எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

இவருக்கு என் போன்றோர் செல்லப்பிள்ளைகள்.
எங்களை பேச விட்டு ஆசை பார்ப்பார்!
அவரோடு நாங்கள் ஒன்றாக பயணிப்பதில் ஆர்வம் கொள்வார்.
1975இல் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுதான் இளைஞர் முஸ்லிம் லீகிற்கு சட்டப்படி யான அங்கீகாரம் கிடைத்து, செங்கம் ஜப்பார் மாநில பொதுச் செயலாள ராகவும், நான் மாநில பொருளாள ராகவும் தேர்வு செய்யப் பட்டோம். இளைஞர் முஸ்லிம் லீகை பலரும் எதிர்த்த நேரத்தில் அடுத்த தலை முறை தயாராகட்டும் என உற்சாகப் படுத்தியவர்.

1994இல் நான் சிறையி லிருக்கும்போது அவர் கைப்பட எழுதிய இருபக்க கடிதம் நான் இன்றைக்கும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் பொக்கிஷம். அதிலுள்ள வரிகள் பலித்துவிட்டது. அவர் கேட்ட பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதனால்தான்... அவர் வளர்த்து பாது காத்த வரலாற்றுப் பேரியக்கத்தில் கொள்கை பரப்புச் செயலாளனாக பணி செய்யும் பேற்றினை பெற்றுள்ளேன்.
அவர் ஆசை ஆசையாக எழுதிய மணிச்சுடர் நாளி தழில் நான் அமர்ந்து, எழுதும் பாக்கியத்தை பெற்றுள்ளேன்.

அவர் நல்ல தொண்டர் களை மட்டும் உருவாக்க வில்லை. அந்த தொண் டர்களை வழிநடத்த நல்ல தலைவரையும் தந்துவிட்டுச் சென்றுள்ளார். அந்தத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை முனீருல் மில்லத் தலைமையில் நாங்கள் சமுதாயப் பணி தொடரும்போது ஒவ்வோர் அடியிலும் சிராஜுல் மில்லத் வழிகாட்டுதல் இருந்து கொண்டேயிருக் கிறது.

ஆம்! அவர் அணையா விளக்கு! சமுதாயத்தின் மணிச்சுடர்!

Friday, October 2, 2009

புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகில் உள்ள பில்லூரில் ஏ.எம்.எச்.நகரில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மஸ்ஜித் ரஹிமா புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.

விழாவுக்கு கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் ஏ.கே.ஹபிபுர் ரகுமான் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் மாவட்ட துணைத்தலைவர் எம்.அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் தலைவரும் பில்லூர் ரஹிமா மஸ்ஜித் தலைவருமான ஏ.எம். ஹனீஃபா ஹாஜியார் வரவேற்றார் அவ்வமையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்கஅணி செயலாளர் மௌலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டி துஆ செய்தார் .

மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் செயலாளர் எம்.ஏ.சர்தார் நன்றி கூறினர்.

விழாவில் மாவட்ட மார்க்க அணி துணைசெயலாளர் மௌலான நூருல் அமின் மற்றும் பக்கிர் முகமத் ,சபீர் ,முகமத் யுஸுப் ,மிரான்,ஷெரிப்,லால்பேட்டை சல்மான் பாரிஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்

Saturday, September 26, 2009

சேத்தியாதோப்பில் TNTJ புதிய கிளை உதயம்...!


கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் 23.09.09 புதன்கிழைமை மாலை 5 மணி அளவில் சேத்தியாதோப்பு சுற்றுலா மாளிகையில் மாவட்ட செயலாளர் D.முத்துராஜா தலைமையில் புதிய கிளை துவங்கப்பட்டது.


இதில் கிளை நிர்வாகிகளாக தலைவர் D.A.முஹமது ரபி,செயலாளர் M.அப்துல் சலாம் ,பொருளாளர் M.முஹமது ரபிக் ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


மேலும் மாவட்ட பொருளாளர் J.S.ஹாஜி அலி, மாவட்ட மாணவரணி A.ரைஸ்சுதீன், கலந்துகொண்டனர்,இதில் துபாய்-யிலுருந்து தாயகம் திரும்பிய பாஜில் ஹுசைன் (முன்னாள் மாவட்ட பேச்சாளர்) அவர்கள் நிர்வாகத்தை வழிநடத்தும் முறைகளை எடுத்துரைத்து சிறப்புரைஆற்றினார்,

Tuesday, September 8, 2009

முதல்வரை சந்தித்து சிறைவாசிகள் விடுதலை செய்ய முஸ்லிம் லீக் கோரிக்கை...

வரும் அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் சமூக நல்லிணக்க மாநாட்டை தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது.

இம் மாநாட்டில் முதல்வர் கலைஞர் பங் கேற்று இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த மூன்று அறிஞர் பெரு மக்களுக்கு சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கி சிறப்புரை யாற்றுகிறார்.

கலைஞருடன் சந்திப்பு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூ பக்கர், மாநிலச் செயலா ளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், வடசென்னை மாவட்டத் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் ஆகி யோர் இன்று (6-09-09) ஞாயிறு காலை 9.45 மணிக்கு முதல்வர் கலை ஞரை அவரது கோபால புரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாட்டில் உலமாக் கள் பணியாளர் நல வாரி யம் அமைத்தற்காக நன்றி தெரிவித்தனர். அதற்கு முதல்வர் மகிழ்ச்சி தெரிவித் தார்.

தமிழ்நாட்டிலுள்ள மதரஸாக்களில் பயில் கின்ற மாணவர்கள் அனை வருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனைப் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.

சிறைவாசிகள் விடுதலைக்கு கோரிக்கை

அறிஞர் அண்ணா நூற் றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ் நாட்டு சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டு சிறைவாசம் அனு பவித்த மத மோதல், குண்டு வெடிப்பு, ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் தண்டனை பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், 12 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை சிறைவாசியாக சிறையில் உள்ள குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 விசா ரணை சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்பு கொண்டி ருப்பதாகவும் அவர்களின் பதிலை எதிர்பார்ப்பதாக வும் முதல்வர் தெரிவித்தார்.

மத்திய அரசிடம் தங்க ளுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இக் கோரிக் கையை அவசியம் நிறை வேற்றித் தருமாறு முஸ்லிம் லீகினர் முதல்வரிடம் வலி யுறுத்தினர்.

சிறைவாசிகளை விடு விக்கும் வேண்டுமென திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, பாரதீய ஜனதா கட்சி தமிழ் மாநிலத் தலைவர் இல. கணேசன் உள்ளிட்டோர் கோரிக் கையாக வைத்துள்ளதை யும் எடுத்துச் சொன்ன பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முதல்வர் கருணை உள்ளத்தோடு இதனை பரிசீலித்து இக் கோரிக்கையை நிறை வேற்றித்தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.

சிராஜுல் மில்லத் பிறந்த நாள் சமூக நல்லிணக்க மாநாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த மாபெரும் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் பிறந்த நாள் அக்டோபர் 4-ம் தேதி வருகிறது. இந்த நாளை சமூக நல்லிணக்க நாளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அனுசரிக்கிறது.

இதனைத் தொடர்ந்து அந்நாளில் சமூக நல்லி ணக்க மாநாடு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத் தப்படுகிறது.

சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடும் இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமயங்களைச் சார்ந்த சான்றோர்கள் மூவரை தேர்வு செய்து அவர்களுக்கு சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கப்பட உள் ளது.

இம் மாநாட்டில் தமிழ் நாடு முதல்வர் கலைஞர் பங்கேற்று இந்த விருதை வழங்கி விழாப் பேரு ரையாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட முதல் அமைச்சர் கலைஞர் இம் மாநாட்டில் பங்கு கொள்ள இசைவு தெரிவித்தார்.

Monday, September 7, 2009

ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கே

சென்ற வருடம் புனிதஹாஜிகள் அனுப்பியதில் ஊழல் நடந்து விட்டது என்றும், அன்றைய அமைச்சர் இ. அஹமது அவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளார் என்றும் ஒரு பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பத்திரும்பக் கூறுவதன் மூலம் உரிமையை மறைத்து விடலாம் என்னும் நப்பாசையில் தமிழகத்தில் சில சமுதாய புல்லுருவிகள் ஈடுபட்டுவருகிறார்கள்.

சென்ற ஆண்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி, அவருக்குக் கீழ் வெளிவிவகார இணை அமைச்சராகப் பணிபுரிந்தவர் இ. அஹமது அவர்கள்.

சென்ற ஐந்து ஆண்டுகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள், குறிப்பாக இ. அஹமது அவர்கள் நாடும் ஏடும் நானிலமும் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.

இந்தியாவுக்கும் முஸ்லிம் உலகிற்கும், குறிப்பாக அரபுலகத்துக்கும் ஒரு பாசப்பிணைப்பிலான நெருக்கத்தை உருவாக்கி, இந்தியாவின் பேருக்கும் புகழுக்கும் பெருமை சேர்த்துள்ளவர் அமைச்சர் இ. அஹமது என்று பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறப்பாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

இ. அஹமது அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் இந்தியா முழுவதிலும், குறிப்பாக முஸ்லிம் உலகத்திலும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பேரும் செயல்பாடும் மிகவும் பரவலாகப் புகழப்படுகிறது. இந்தியாவில் எங்கோ உள்ள ஒரு குக்கிராமத்தில் கூட இன்றைக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது மத்திய மந்திரியாக இருக்கிறார் என்று பெருமையோடு பேசுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

முஸ்லிம் லீகிற்கு ஏற்பட்டுள்ள இந்த சிறப்பான எழுச்சியையும் ஏற்றத்தையும் கண்டு மனம் புழுங்கும் சிலர், இ. அஹமது அவர்களைப் பற்றி குறை பேசத் துவங்கியுள்ளனர். முஸ்லிம் லீக் என்னும் பெயரைக் கேட்டாலே சீறிப்பாயும் சிலர் இன்னும் இருக்கிறார் கள்.

முஸ்லிம் லீக் தலைவர் இ. அஹமது அவர்களின் பெயர் இத்தகையவர்களுக்கு அவர்களின் காதுகளில் நாராசமாகக் கேட்கிறது. இதனால் இல்லாததும் பொல்லாததும் சொல்லி புலம்பித் திரிகிறார்கள். அதற்குத் தமிழகத்தில் சிலர் எடுபிடி வேலை செய்ய இறங்கியிருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் புனித ஹஜ் பணிகள் மிகவும் அதிகமாகக் செல்வதற்கு வழிவகை கண்டவர் இ. அஹமதுதான்! சவ+தி மன்னருடனும் அமைச்சர்களு டனும் நேரில் பேசி, இந்தியாவின் கோட்டாவை அதிகரிக்கச் செய்து ஒரு லட்சம் அறுபது ஆயிரம் பேர் புனிதப் பயணம் செய்வதற்கு வழி ஏற்படுத்தியவர் இ. அஹமதுதான்.

சவ+தி அரசின் ஒப்பந்தப்படி 4ல் ஒரு பங்கினர் தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற் கொள்ளலாம், 4ல் மூன்று பங்கினர் அரசாங்க ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்வர்.

மாநிலங்களுக்கு ஹஜ் கோட்டா என்பது அந்தந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.

சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.

ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.

பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!
பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.

சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.

ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.

பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!
பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக

Thursday, September 3, 2009

Daily Live Bayan

Bayan Insha Allah India Time: Chennai From 11/09/1430 (01/09/2009) onwards there will be live Bayan (Tamil) by As Sheikh Mufthi Omar Sheriff Insha Allah (Untill Notice)... India time 10:00 - 11:00 PM. Please Click Here to go to…

Thursday, August 27, 2009

TNTJ மாணவரணி சனி கிழைமை (29/08/2009) அன்று நடத்தும் இப்தார் நிகழ்ச்சிகள், இன்ஷா அல்லாஹ்

1.பரங்கிப்பேட்டை யில் (கடலூர் மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், கோட்டர் தங்கறை தெரு, பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்சிறப்புரை : Dr.S. ஜாபர் அலி.P.hdதொடர்பிற்கு : 9790325478அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கடலூர் மாவட்ட மாணவர் அணி.

2. ஆடுதுரை அவனியாபுரத்தில் (தஞ்சை மாவட்டம் )
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், பாத்திமா நகர், ஆடுதுரை அவனியாபுரம், தஞ்சை மாவட்டம்சிறப்புரை : A.அப்துல் ரஹ்மான்.(M.Sc) .-மாவட்ட மாணவர் அணி செயலாளர்தொடர்பிற்கு : சாதிக் பாஷா- 9443564240அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ தஞ்சை (வடக்கு),மாவட்ட மாணவர் அணி.

3. இராஜகம்பீரத்தில் (சிவகங்கை மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குசிறப்புரை : A.ஷாகுல் (மாவட்ட மாணவரணி செயலாளர்)இடம் : TNTJ மர்கஸ், இராஜகம்பீரம், சிவகங்கை மாவட்டம்தொடர்பிற்கு : 9003811959அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ சிவகங்கைமாவட்ட மாணவர் அணி.

4. மந்தாரபுதூரில் (கன்னியாகுமரி மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், மந்தாரபுதூர், கன்னியாகுமரி மாவட்டம் சிறப்புரை : அப்துல் வதூத்.(B.E) - .-மாவட்ட மாணவர் அணி செயலாளர்தொடர்பிற்கு : 9944179481அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கன்னியாகுமரி மாவட்ட மாணவர் அணி.

5 ஆலங்குடியில் (புது கோட்டை மாவட்டம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ அலுவலகம், பெரிய பள்ளிவாசல் அருகில், ஆலங்குடி, புது கோட்டைதொடர்பிற்கு : 9043486280அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ புது கோட்டை மாவட்ட மாணவர் அணி.

6. புதுமடத்தில் (இராமநாதபுரம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், வடக்கு தெரு பஸ் நிலையம் அருகில், புது மடம், இராமநாதபுரம் மாவட்டம்.தொடர்பிற்கு : யாஸின் - 9894652633அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.

7. இருமேனியில் (இராமநாதபுரம்)
நாள் : சனி கிழைமை (29/08/2009)சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்குஇடம் : TNTJ மர்கஸ், பாபுல் மாலிக் வளாகம், இருமேனி, இராமநாதபுரம் மாவட்டம்.தொடர்பிற்கு : யாஸின் - 9894652633அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.
.

Tuesday, August 25, 2009

அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை இழந்து தவிக்கிறேன்|||தலைவர் பேராசிரியர் இரங்கல்

மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும், தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ. அப்துல் ஹக்கீம் மறைவு குறித்து தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி-

தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் தலைவராக திகழ்ந்த தமிழ் அறிஞர் - இலக்கியச் செல்வர் - முஸ்லிம் லீகின் மாபெரும் வழிகாட்டி சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்களின் இரண்டாவது புதல்வர் அப்துல் ஹக்கீம் அவர்கள் சில தினங்களாக நோய் வாய்ப்பட்டிருந்து இன்று (25-08-2009) செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணியளவில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி யுள்ளது. சகோதரர் அப்துல் ஹக்கீம் இளமைக்காலம் முதல் முஸ்லிம் லீக் இயக்கத்தோடு தன்னை பின்னிப் பிணைத்து கொண்டு வாழ்ந்தவர். அடையாறு பிரைமரி முஸ்லிம் லீக் அமைப்பதில் முன்னணியில் இருந்தவர்.

காலப்போக்கில் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாள ராக உயர்ந்தார். அவருடைய பதவிக்காலத்தில்தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கிடைத்தது.

தலைமை நிலையச் செயலாளராக அவர் செயல் பட்ட காலத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும் - எனக்கும் சட்டரீதியான பல்வேறு இடைய+றுகளும், ஏராளமான வழக்குகளும் நடைபெற்றன. அவைகளில் நாம் வெற்றியடைவதற்கு அரிய ஆலோசனைகளையும், உரிய தகவல்களையும் தந்து பெரும் ஒத்துழைப்பு அளித்தார்.

சிறந்த நிர்வாகியாகவும், தொழில் வல்லுநராகவும் வெளிநாடுகளோடு தொடர்புடைய பல தொழில் அதிபர்களுக்கு அறிவுரை கூறக்கூடிய ஆற்றல் பெற்ற வராகவும் விளங்கியவர். அவருடைய அறிவுரையாலும், வழிகாட்டுதலாலும் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் இன்றைக்கும் நன்றி கூறிக் கொண்டிருக் கிறார்கள்.

முஸ்லிம் லீக் இயக்கப் பணிகளிலும், தன்னை முழுமையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததற்கு பின்னர் தீவிரமாக இயக்கப்பணிகளில் அரசியல் கூட்டணி முடிவுகள், தேர்தல் சின்னம் தேர்வு செய்தல் போன்ற பிரச்சினை வரும்போதெல் லாம்ஆலோசனை சொல்லி வந்தார். என்னைப் பொறுத்த வரையில் பல நேரங்களில் அவருடைய ஆலோசனை பெற்று அதன்படி முடிவெடுத்தேன். தொடர்ந்து பல வெற்றிகளை பெற்றிட அவர் ஆலோசனை காரணமாக இருந்ததை நினைத்து நான் பெருமையடைகிறேன்.

எம்.ஏ. பொது நிர்வாக பட்டம் பெற்று தேறியவர். அச்சுக்கலையில் தனிப்பட்டமும் பெற்றவர். படித்துக் கொண்டேயிருப்பதில் அவர் தந்தையை பின்பற்றி வாழ்ந்த சிறப்பு அவருக்கு உண்டு.

முஸ்லிம் சமுதாயத்திற்கும் - முஸ்லிம் லீகிற்கும் நாளேடு இல்லை என்ற குறையை நிவர்த்திக்க வேண்டும் என்பதற்காக ஹமெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்குவ தற்கு மூல காரணமாக இருந்து உழைத்தவர். தமது தந்தை சிராஜுல் மில்லத் அவர்களோடு இணைந்து நிறுவனத்தை பதிவு செய்து ஹமணிச்சுடர் நாளிதழை வெளியிடுவோராக இருந்து பணியாற்றியவர்.

1987-லிருந்து ஹமணிச்சுடர் நாளேட்டை சிறந்த ஒரு பத்திரிகையாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த முயற்சி மேற்கொண் டார். 1996-ல் சிராஜுல் மில்லத் அவர்கள் ஹமணிச்சுடர் நாளிதழுக்கு என்னைப் பொறுப்பாளராக்கிய சமயத்தில் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்து எப்படியாவது தமிழ்நாட்டில் பிரபலமான நாளேடாக மணிச்சுடரை ஆக்க வேண்டும் என்று தொடர்ந்து உற்சாகமூட்டியவர். இறுதி வரை மணிச்சுடர் வெளியீட் டாளராக தொடர்ந்து இருந்து மிகப் பெரிய சேவையை நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார்.

அந்த அன்புச் சகோதரரை - நல்ல ஆலோசகரை - அப்பழுக்கற்ற முஸ்லிம் லீகரை - அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை நாம் இழந்து வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய துணைவியார், ஒரே புதல்வி ஆகியோருக்கு அல்லாஹ் சபுரன் ஜமீல் எனும் உயர்ந்த உன்னதமான தாங்கும் சக்தியை அருள்வானாக. அவர் பிரிவால் வாடும் அவர்களின் சகோதரர்கள் அப்துல் ஹமீத் பாகவி, அப்துல் வஹாப், சகோதரிகள் அலவியா, ஃபாத்திமா முஸப்பர் மற்றும் உற்றார் - உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள் வானாக. அவருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுவுலக மேலான பதவியை வழங்கி அருள்வானாக!

அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை முஸ்லிம் லீக் இயக்கத்தில் நிரப்பி தருவதற்கு தக்கவர்களை அவருடைய மறைவிற்கு இதயம் நிறைந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்!
இவ்வாறு தலைவர் பேராசிரியர் தனது இரங்கல் செய்தியில் குறிபிப்பிட்டுள்ளார் .

தளபதி ஷபிகுர்ரஹ்மான்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினரும் மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத்தின் புதல்வருமாகிய அல்ஹாஜ் அப்துல் ஹக்கீம் அவர்களின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்ததாக தளபதி ஷபிகுர்ரஹ்மான் தெரிவித்துள்ளார் .

மக்காவில் இருந்து அனுப்பியிருக்கும் இரங்கல் செய்தியில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளராக சிறப்பாக பணியாற்றி தொடர்ந்து மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளராகவும் இன்றைய அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்த அப்துல் ஹக்கீம் அவர்களின் இழப்பு தாய்ச்சபை முஸ்லிம் லீக்கினருக்கு பேரிழப்பு அன்னாரை பிரிந்து கவலையில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஷப்ரன் ஜமிலை வழங்க பிரார்த்திப்பதாக அவர் அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி இரங்கல்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராகவும், அதன் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு எதிராகவும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு மிகப் பெரும் தொல்லைகள் தரப்பட்ட சமயத்தில் இந்த வழக்கு களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு அரிய ஆலோசனைகளையும் - உரிய தகவல்களையும் தந்து உறுதியாக ஒத்துழைத்தவர் அப்துல் ஹக்கீம். இந்த வழக்குகள் அனைத்திலிருந்து இறையருளால் நாம் வெற்றியடைந்தோம்.

முஸ்லிம் லீகில் கொள்கை உறுதிமிக்க அவரது இழப்பு தாய்ச்சபைக்கு பேரிழப்பாகும்.

இவ்வாறு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி அமைப்பாளர்
வெ. ஜீவகிரிதன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள் .

ஏ. அப்துல் ஹக்கீம் மறைவிற்கு அரசியல் ஆலோசனை குழு இரங்கல்

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஏ. அப்துல் ஹக்கீம் மறைவிற்கு அரசியல் ஆலோசனைக்குழு உறுப் பினர்களான எம். அப்துல் ரஹ்மான் (வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர்), எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் (அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்), எச். அப்துல் பாசித் (வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர்), பேராசிரியர் குளச்சல் எஸ். சாகுல் ஹமீது ஆகியோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.

வெளியீட்டாளர் ஏ. அப்துல் ஹக்கீம் மறைவுக்கு மணிச்சுடர் பணியாளர்கள் இரங்கல்

மணிச்சுடர் தமிழ் மாலை நாளிதழ் வெளியீட் டாளரும் மறைந்த சிராஜுல் மில்லத் அவர்களின் புதல்வருமான ஏ. அப்துல் ஹக்கீம் இன்று காலமான செய்தி அறிந்து எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன். அன்னாரின் நல் அமல்களை ஏற்றுக் கொண்டு தன் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
-மணிச்சுடர் பணியாளர்கள்



மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளர்- சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது புதல்வர் ஏ. அப்துல் ஹக்கீம் காலமானார்

சிராஜுல் மில்லத் அவர்களின் புதல்வரும், மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும், தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ. அப்துல் ஹக்கீம் இன்று காலை 9.30 மணிக்கு கால மானார். ஜனாஸா இன்று மாலை 5.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை கப்ருஸ்தானில் நல்லடக் கம் செய்யப்படுகிறது.

தாய்ச்சபையின் தனிப் பெருந்தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் - நர்கீஸ் பானு தம்பதி யரின் இரண்டாவது புதல் வராக 05-12-1961-ல் பிறந்த வர் ஏ. அப்துல் ஹக்கீம். இவரது உடன் பிறந்த சகோதரர்கள் அப்துல் ஹமீது பாகவி, அப்துல் வஹாப் மற்றும் உடன் பிறந்த சகோதரி அலவியா, ஃபாத்திமா முஸப்பர் ஆகி யோர் ஆகும். இவருடைய துணைவியார் சமீமா, ஒரே மகள் இஸ்ரா.
எம்.ஏ. பொது நிர்வாகம் பட்டம் பெற்ற அப்துல் ஹக்கீம், அச்சுக்கலை நிபுணர் படிப்பையும் படித்துள்ளார். 1986-ம் ஆண்டு சிறுபான்மையினர் குரல் ஒலிக்க ஒரு நாளிதழ் தொடங்க வேண்டும் என சிராஜுல் மில்லத் முடிவெ டுத்த போது அதற்கான முழு பொறுப்பையும் ஏற்று மூத்த பத்திரிகை யாளர்களுடன் கலந்தா லோசித்து 1987-ல் ஏப்ரலில் மாதிரிப் பிரதியையும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி மணிச்சுடர் நாளிதழையும் கொண்டு வந்தார்.

1999-ம் ஆண்டு சிராஜுல் மில்லத் அவர் களின் மறைவுக்குப் பின் முஸ்லிம் லீகில் அவர் முழு நேர ஊழியம் செய்ய வேண்டும் என விரும்பி தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இவரை மாநில தலைமை நிலையச் செயலாளராக நியமனம் செய்தார். பல அரசியல் மாநாடுகள், தேர்தல் பணிகள், பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்தி கட்சியின் வளர்ச் சிக்கு பெரும் துணை புரிந் தார்.

தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் (மியாஸி) மற்றும் புதுக் கல்லூரியில் செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்துள்ளார்.
சென்னை அயன்புரத் தில் அமைந்துள்ள டிரஸ்ட் மருத்துவமனை யில் சிறுநீரக நோயாளிக ளுக்கான கவுரவ டிரஸ்டி யாக 2001-ம் ஆண்டு முதல் சேவையாற்றி வந்துள்ளார்.

2002-ம் ஆண்டு குடும்பத்துடன் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி யுள்ள இவர் இலங்கை, சிங்கப்ப+ர், மலேஷியா, ஸவ+தி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள் ளார்.
அமைதியான சுபாவ மும், அபாரமான ஆற்ற லும், அறிவு ஞானமும் மிக்க இவர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாளராக வும், அதன்பின் அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினராக வும் பணி செய்து வந்துள் ளார்.

அவரது மறைவுக்கு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள னர் .

Monday, August 17, 2009

TNTJ நடத்திய தமிழக முதல்வர் வீடு முற்றுகை,

இன்று (17-8-2009) காலை சரியாக 11 மணி அளவில் முதல்வர் வீடு அருகே உள்ள தவ்சன்ட் லைட் என்ற பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிட துவங்கினர்.

காவல்துறை எதிர் பார்த்ததை விட கூட்டம் அதிகமானதால் முற்றுகையிடும் சகோதர சகோதரிகளை கைது செய்ய துவங்கிய தமிழக காவல்துறை வாகன பற்றாக்குறையினால் தினறியது.

அல்ஹம்துலில்லாஹ்!.

இறை இல்லத்தை மீட்க கொட்டும் மழையையும் பொருட்படுத்தால் பெண்கள் கைகுழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.சென்னை அண்ணா சாலையே இன்று ஸ்தம்பித்து போனது வாகனங்கள் வேரு வழியாக திருப்பி விடப்பட்டது!. அல்ஹம்துலில்லாஹ்…கலத்தொகுப்பு விரைவில்… புகைப்படங்களில் சில இதோ…















Wednesday, August 12, 2009

காயிதெ மில்லத் குறித்து ஆவணப்படம்

இந்திய அரசியல் வானில் கண்ணியத்தின் சின்னமாய் மின்னிய முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் பற்றி ஹகண்ணியத் தமிழர் என்ற ஆவணப்படம் தயாரிக்கப் பட இருக்கிறது. மிகுந்த பொருட்செலவில் நேர்த்தி யுடனும், உயர் தொழில் நுட்ப தரத்துட னும் தாயரிக்கப்பட உள்ள இந்த படத்தில் காயிதெ மில்லத் பற்றிய வர லாற்றுச் சுவடு களும், அவரைப் பற்றிய மூத்த அரசியல் தலைவர் களின் கருத்துக்களும் இடம் பெற உள்ளன.

இந்த ஆவணப்பட தயாரிப்பு பற்றிய அறி விப்பை வெளியிடும் நிகழ்ச்சி கடந்த 8-8-2009 வியாழன் அன்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலை யில் உள்ள சவேரா ஓட்ட லில் நடைபெற்றது.

ஆவணப்படத்தின் இயக்குநர் ஆளுர் ஷா நவாஸ், ஆவணப் படத்தை தாயரித்து வெளியிடும் எஸ்.டி. கூரியர் நிறுவனத் தலைவர் கே.அன்சாரி, பேராசிரியர் அ. மார்க்ஸ், தமிழ் மைய இயக்குநர் ஜெகத் கஸ்பர் உள்ளிட் டோர் நிகழ்வில் பங்கேற்ற னர்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஆவணப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் கூறியதா வது-
ஒரு மணி நேரம் ஓடும் வகையில் ஆவணப்படம் தயாரிக்கப்படுவதோடு, முதலில் தமிழ் மொழியி லும் பின்னர் மலையாளம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். காயிதெ மில்லத் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு செய்தனர்.

இந்த ஆவணப்படம் டிசம்பர் இறுதியில் வெளி யிடப்படும் என்று தெரி வித்த ஆளுநர் ஷாநவாஸ், இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, காயிதெ மில்லத் வாழ்க் கையை திரைப்படமாக இயக்குவதற்கு முயற்சி எடுக்கப்படும் என்றார். பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப் படமாக எடுக்கப்பட் டுள்ள நிலையில் காயிதெ மில்லத் பற்றி எந்தப் பதிவும் இல்லையென்றால் அது வரலாற்றுப் பிழையாகி விடும் என்பதாலேயே இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைவர் பேராசிரியர் வாழ்த்து கண்ணியத் தமிழர் ஆவணப்பட இயக்குநர் ஆளுர் ஷானவாஸ் 10-8-09 மாலை முஸ்லிம் லீக் தலைமை நிலையம் காயிதெ மில்லத் மன்ஸி லுக்கு வருகை தந்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செய லாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். அப+பக்கர் ஆகி யோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆவண படம் குறித்த விவரங்களை ஆளுர் ஷானவாஸ் 65139, போலீஸ் கமிஷனர் ஆபீஸ் சாலை, கணேன் டிரா வல்ஸ், எழும்ப+ர், சென்னை செல்-9444976476 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி :
முஸ்லிம் லீக்.காம்

Tuesday, August 4, 2009

அரசியல் மேதைகளாலும் ஆன்மீகத் தலைவர்களாலும் போற்றப்பட்ட ஷங்கை மிகு செய்யத் ஷிஹாப் தங்ஙள் தங்கமான தங்ஙள்

-தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் களில் ஒருவரும் கேரள மாநில முஸ்லிம் லீக்கின் தனிப் பெரும் தலைவருமான ஷங்கைமிகு செய்யிதுனா ஷிஹாப் தங்ஙள் அவர்கள் மறைந்த செய்தியை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும் தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் எனக்கு அலைப்பேசியில் தெரிவித்தார்கள். இச்செய்தி எனக்கு கவலையை தந்தது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தில்மறைந்த ஷிஹாப் தங்ஙள் அவர்கள் செய்த சேவை மிக மகத்தானதாகும். அரசியல் மேதையாகவும், ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்து, தக்வாவின் தென்றல் தங்கமான தங்ஙள் அவர்களின் மறைவு இஸ்லாமிய சமுதாயத்துக்கும் தாய்ச் சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும்
நம் நாட்டு அரசியல் தலைவர்களாலும், மார்க்க மேதை களாலும் போற்றப்பட்ட தங்ஙள் அவர்களின் தியாகமிகு சேவையால்சமுதாயம் சிறப்பான நன்மைகளைப் பெற்றது.

சமுதாயத்தை நோக்கி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் புனித ஸ்தாபனத்தை நோக்கி தேவையற்ற சர்ச்சை களையும், சோதனைகளையும் சிலர் உருவாக்கிய காலக் கட்டத்தில் அவைகளையெல்லாம் தனது அன்பான அழகு மிகு பஷாரத் எனும் இன்முகத்துடனும் துஆவுடன் எதிர் நோக்கி வெற்றியைத் தேடித்தந்த மார்க்க மேதை தங்கள் அவர்களாகும்.

நம் நாட்டு தலைவர்களாலும், உலகத் தலைவர்களா லும் பெரிதும் மதிக்கப்பட்ட ஷிஹாப் தங்ஙள் அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் நடை பெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பொன்விழா மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி தங்ஙள் அவர்கள் ஆன்மீக ஒளியும், அரசியல் தெளிவும் மிக்க அவர்களின் உரையைக் கேட்டு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரும் நெஞ் சம் நெகிழ பாராட்டி மகிழ்ந்த நிகழ்ச்சி மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

1993ம் ஆண்டில் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களுடன் நானும் புனித ரமளானில் உம்ராவுக்கு சென்றிருந்த போது புனித மக்காவில் கஃபத்துல்லா ஷரீபில் ஷங்கை மிகு ஷிஹாப் தங்கள் அவர்களை சந்தித்த போது. இரு தலைவர்களும் சமுதாயத் தைப் பற்றியும், நாட்டு மக்களின் நன்மையைப் பற்றியும், சமுதாய ஒற்றுமையைப் பற்றியும் ஒருவருக்கொருவர் அன்புடனும் அக மகிழ்வுடனும் பேசிக்கொண்டிருந்த இந்நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை.

காயிதே மில்லத் அவர்களின் நூற்றாண்டு விழாவை யொட்டி 1995ம் ஆண்டில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் தேசிய செயற்குப முஜாஹிதே மில்லத் பனாத் வாலா சாஹிப் தலைமையில் நடைபெற்றபோது அக் கூட்டத்தில் பங்கேற்று தங்ஙள் அவர்கள் நிகழ்த்திய உரை இன்னும் நமது நெஞ்சை நெகிழவைக்கிறது.

2004ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் துறைமுகப் பகுதியில் காயிதே மில்லத் மன்ஜில் என்ற பெயரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு மகத்தான மாபெரும் கட்டிடத்தை அமைத்து கொடுத்த தமிழகத் தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை பெரிதும் பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், தமிழக நிர்வாகிகளை முன்னோடிகளை பாராட்டி துஆச் செய்த காட்சியும் அதேக் கூட்டத்தில் 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக போட்டியிட்ட தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மகத்தான வெற்றி வாகைச் சூடுவார் என்று கேரள மாநில முஸ்லிம் லீக்கின் தலைவர்களுடனும் முன் னோடிகளுடனும் சென்னைக்கு வந்து மனமாற வாழ்த்தி துஆச் செய்ததை சுட்டிக் காட்டுவதில் மகிழ்கிறேன். நம்முடைய பெருந் தலைவர் முஜாஹிதே மில்லத் பனாத் வாலா சாஹிப் மறைந்த நேரத்தில் கேரளத்தின் பாலக்காட்டில் ஷிஹாப் தங்கள் இல்லத்தில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. அவர்களுடன் சென்றிருந்தேன்.

அக்கூட்டத்தில் தேசியத் தலைவர் மத்திய அமைச்சர் இ.அஹ்மது, கேரளப் பொதுச் செயலாளர் குஞ்சாலி குட்டி, இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் இ.டி.பஷீர், முனீர் கோயா மற்றும் கேரள தலைவர்களும், தேசிய தலை வர்களும் பங்கேற்ற கூட்டத்தில் நம்முடைய தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. அவர்களின் சேவையைப் பற்றி ஷிஹாப் தங்ஙள் அவர்கள் மகிழ்வுடன் சொல்லிக் காட் டிய நிகழ்ச்சி மகிழ்ச்சியான நிகழ்ச்சி.

நம் அண்டை நாடான மாலத்தீவின் அதிபர் கய்ய+ம் அவர்களையும் அவர்கள் அரசையும் அங்குள்ள கடல் கொள்ளையர்கள் சூழ்ச்சிக் காரர்களைப் பற்றி அந்நாட்டு அதிபரை சிறைப் பிடிக்க திட்ட மிட்டு புரட்சி செய்த காலத்தில் மாலத்தீவு அதிபரின் நண்பரான ஷிஹாப் தங்ஙள் அவர்களுக்கு இச்செய்தியை அதிபர் கைய்ய+ம் தெரியப்படுத்தினார்.

அன்றைய நம் நாட்டு பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஷிஹாப் தங்ஙள் அவர்கள் தொடர்பு கொண்டு நட வடிக்கை எடுத்து காப்பாற்றி கொடுத்த சிறப்பு ஷிஹாப் தங்ஙள் அவர்களைச் சார்ந்ததாகும்.

உலகத் தலைவர்களாலும், அரசியல் மேதைகளாலும், ஆன்மீக தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஷிஹாப் தங்ஙள் அவர்களின் கப்ரை கருணையுள்ள ரஹ்மான் பிரகாசமாக்கிவைப்பானாக.

அன்னாரின் மறைவால் வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் முஸ்லிம் லீக்கினர்களுக்கும் ஹஸப்ரே ஜமீலை| அல்லாஹ் வழங்குவானாக.

Thursday, July 30, 2009

அறிவுச் செல்வங்களே! அன்பின் சிகரங்களே! வருக!


இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-


துருக்கி சுல்தான்களின் இஸ்லாமிய ஆட்சிகளின் கடும் வீழ்ச்சியால் உலகெங்கும் ஆங்கிலேயர்களின் ஆட்சி அதிகாரம் ஏற்பட்டது.


நம் இந்திய நாட்டிலும் முகலாய மன்னர்களின் ஆட்சியின் வீழ்ச்சியினா லும் இஸ்லாமிய கலாச் சாரத்தை பேணுவதிலும், பின்பற்றுவதிலும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மிகப்பெரும் சோதனையும், வேதனையும் ஏற்பட்டது.
இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகளும் இஸ்லாமியர் களின் கல்வி, கலாச்சாரம், தனித்தன்மை இவைகளை அழித்தொழிக்கும் முயற்சிகள் ஆங்கிலேயர்கனினால் நடந்து கொண்டிருந்தது


முஸ்லிம் சமுதாயத்தினரிடையே ஒருவகையான அச்சமும், வேதனையும் நிலவிய காலக் கட்டத்தில் தான். அல்லாஹ{த்த ஆலா வின் மீது அச்சம் கொண்ட தியாகச் சீலர்கள் உருவானார்கள்.


இருளே போ! போ! என்று கோஷமிட்டுக் கொண்டிருப்பதை விட இருள் சூழ்ந்திருந்த இடத் தில் ஒரு விளக்கை ஏற்றி விட்டால் இருள் தானாக போய் விம். அந்த நல்ல நோக்கில் - தியாக நோக்கில் சத்திய சீலர்களான சங்கைமிகு உலமாக்களால் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக் கப்பட்டது. வலிமை மிகுந்த பிரிட்டிஷ் அரசை கடுமையாக எதிர்த்து 1857-ம் ஆண்டில் ஷாமிலி மைதானத்தில் தியாகச் சீலர் மவ்லானா இம்தாதுல்லா தலைமை யில் நடைபெற்ற கடுமையான போராட் டத்தில் கலந்து கொண்டு தியாகமிகு சேவையாற்றிய, தேவ்பந்த், தாருல் உலூம் கல்லூரியின் நிறுவனர் காஸிம் நானோத் தவி அவர்களின் பெயரும் மற்றும் மார்க்க மேதைகளின் பெயர்களும் இடம் பெற்றிருந் தது.


இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து சிறைப் பிடித்து சித்திரவதை செய்து தண்டிக்க வேண்டு மென்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெரிதும் கங்கணம் கட்டிக் கொண்டு, தேடுதல் வேட்டையாடிய காலக் கட்டத்தில்தான்.
புனித ஹஜ்ஜை நிறைவேற்ற சென்றிருந்த மார்க்க மேதை - தியாகச்சீலர் மவ் லானா காஸிம் நானோத் தவி தலைமையில் மக்காவின் மிகப் பெரும் இந்திய நாட்டு உலமாக்கள் ஒன்று திரண்டு ஒருமித்த கருத்துடன் வெள்ளையர்கள் ஆட்சி அகற்றப்பட வேண்டும். வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா உருவாக வேண்டும். இஸ்லாமிய கலாச்சா ரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், இஸ்லா மியர்களின் உரிமைகளில் - அவர்களின் மார்க்க சட்டத்தை பேணிப் பின்பற்றுவதில் யாருடைய குறுக்கீடும் இருக்கக் கூடாது என்ற நோக்கில்தான் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக்கப்பட்டன.


ஊர்களில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தினரும், சமுதாயப் பிரமுகர்களும், உலமாக்களும் ஒன்று சேர்ந்து மதரஸாக்களை உருவாக்கினார்கள். நாடெங்கும் நடை பெற்று வரும் மதரஸாக்களிலி ருந்து வருடந்தோறும் மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்றவர்கள், பட்டயங் கள் பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் வருகை தருகிறார் கள். அதுபோல் ஹாபிழ் பட்டம் பெற்றவர்களும், காரி பட்டம் பெற்றவர்களும் வருகை தருகிறார்கள்.
இதேபோல் பெண்கள் மதரஸாக்களிலிருந்தும் ஆலிமா பட்டம், முபல்லிகா பட்டம் பெற்ற பெண் மகனும் வருகை தந்து நாட் டுக்கும், சமுதாயத்துக்கும் சிறப்பான சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். அடியார்கள் மீது அன்பு ஆதரவு அண்டை வீட்டாரிடமும் அன்பான உறவு முறை - உறவினர்களிடம் நேசமுடனும், பாசமுடனும் நடந்து கொள்ளும் அன்பான முறை இத்தகைய மனிதநேயத்தை பேணிப்பின்பற்றி போதித்து வரும் அன் பார்ந்த வாழ்க்கை முறையை மதரஸாக்களிலி ருந்து கற்றுத் தேறி பட்டங்கள், பட்டயங்கள் பெற்று வரும் அனைவர்களையும் அன்புடனும், மகிழ்வுடனும் வருக என வாழ்த்துகிறோம்.


இந்திய நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், உ.பி. மாநிலத்திலுள்ள உலகப் புகழ் பெற்ற தேவ்பந்த் தாருல் உலூம் மத்ரஸா வுக்கு சென்று தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் உலமாக்கள் நம் நாட்டுக்கு செய்த சேவை விடுதலைப் போராட்டத் தில் உலமாக்கள் ஆற்றிய பங்கு மகத்தானது, மறக்க முடியாதது. இன்றும் அவர்களின் சேவையை நினைக்கும் போது என் நெஞ்சம் நெகிழ்கிறது என்று இந்திய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் சொன்ன செய்தி சரித்திர செய்தியாகும். புகழ்பெற்ற லக்னோ நத்வத்துல் உலூம் மதரஸா வின் பட்டமளிப்பு விழா சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாட்டு உலமாக்கள் செய்த சேவை இந்திய விடுத லைப்போரில் உல மாக்கள் ஆற்றிய பங்கு மிக மகத்தானது என்று அவர் நிகழ்த்திய உரை மறக்க முடியாததாகும். தென்னகத்தின் தாய் மதரஸாவான வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் மதரஸாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரை யாறிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் பேசுகையில் மனித சமுதாயத்தை புனித சமுதாயமாக ஆக்கி வருவது மதரஸாக்கள் என்று குறிப்பிட்ட செய்தி நமக்கு இன்றும் நினைவில் நிற்கிறது.


சிறப்புமிகு லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு நூற்றாண்டு விழாவுக்கு தலைமை வகித்து உரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் சங்கை மிகு உலமாக்கள், கண்ணியமிகு - சத்தியமிகு நபிமார்களின் வாரிசுகளாக திகழ் கிறார்கள். புனித நபிமார்கள் செய்தப் பணியை சங்கைமிகு உலமாக்கள் செய்து வருகிறார்கள் என்று உலமாக்களின் சேவையை பாராட்டி பேசியுள்ளார்கள்.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் லிபியா நாட்டில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தலைவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பங்கேற்று பேசுகையில் உண்மைகளை - நன்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதில் என் இந்திய நாட்டு உலமாக்கள் மிகச் சிறந்தவர்கள் என்று தலைவர் பேசிய செய்தி உலக செய்திகளில் மீடியாக்களில் வெளிவந்தது. மணிச்சுடரி லும் வந்தது.


மவ்லவி ஆலிம் பட்டம் பெற்ற வெண்புறாச் சேனைகளே மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்ற சமாதான புறாக்களே வருக, ஹாபிழ் பட்டம் பெற்ற அன்பின் சின்னங்களே வருக, ஆலிமா பட்டம் பெற்ற சமுதாயச் செல்வங்களே வருக.
முபல்லிகா பட்டம் பெற்ற சமுதாயக் கண் ணொளிகளே வருக வருக என உங்களை வாழ்த்தி வரவேற்று உங்கள் சேவை சிறக்க துஆ செய்கிறோம

Friday, July 17, 2009

சமுதாயப் பார்வையில் ஒரு சட்ட மசோதா...!

சமுதாயப் பார்வையில் ஒரு சட்ட மசோதா திருமணங்களை கட்டாயாக பதிவு செய்யும் சட் முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்ற நடப்பு கூட்டத் தொடரில தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
.
இஸ்hமிய ஷரீஅத் சட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்னோட்டமாக இது அமைந்து விடுமோ என்ற அச்ம் முஸ்லிம் சமுதாயத்திற்கு இன்றுஏற்பட் டுள்ளது.
இந்த கவலையில் அக்கறை கொண்ட சமுதாயத்தின் தாய்ச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய அமைப்புக்களை ஒன்றிணைத்து ஆலோசனைக் கூட் டத்தை சென்னையல் நடத்தியது.
.
இதில் பங்கேற்றோர் வெளிப்படுத்திய கருத்துக்கள் தமிழக அரசின் பரிசீலனைக்கு உரியவை என்பதோடு, சமுதாயம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியவை.
இதோ அந்த கருத்துக்களில் சில....
.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய
பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
.
இன்று தமிழக அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருமண கட்டாயப் பதிவு சட்ட மசோதா இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்த ஒரு தீர்ப்பின்படி கொண்டு வரப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல் படுத்துவது ஒவ்வொரு மாநிலத்தின் கட்டாய கடமை. இந்த சட்டத்தின் நோக்கம் தவறானது அல்ல.
.
சுயமரியாதை திருமணங்கள் நடப்பதே தமிழ்நாட் டில்தான். இந்த சட்ட முன்வடிவை படித்ததும் மாநில அரசு திருமணங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்க நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றியுள்ளது தெரிகிறது. இப்போது திருமணங்கள் பதிவாளர் அலுவலகங் களில் பதிவு செய்யச் சொல்வது பொதுவான சிவில் சட்டத்திற்கு முன்னோட்டமாக அமைந்து விடும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
ஒரேவிதமான சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சில அரசி யல் கட்சிகளும், இந்துத் துவ அமைப்புகளும் குரல் கொடுத்து வரும் இந்த சம யத்தில் எந்த ரூபத்திலும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால் அதை உறுதியுடன் எதிர்ப் போம் என சொன்ன அரசு தான் மத்தியிலும், மாநிலத் திலும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
.
திருமணங்களை பதிவாளர் அலுவலகங்களில் கட் டாயப் பதிவு செய்ய வேண்டும் என்பதை பிரச்சி னையாக்கி அதன் மூலம் தமிழ்நாடு அரசு பற்றி தவறான கருத்து வந்து விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக உள்ளோம்.
.
ஏனெனில் சிறிய விஷயம் கூட பெரிய பாதகத்தில் கொண்டு சேர்த்து விடும். எனவே, திருமணங் களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற சட்ட முன்வடிவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி முஸ்லிம் ஷரீஅத் சட்டத்திற்கு எந்த வகையிலும் இது இடைஞ்சலாக இருக்காது என்ற ஐயப்பாட்டை போக்கி தேவைப்பட்ட திருத்தங்களை செய்து பின்னர் நிறைவேற்ற வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
.
தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான்
.
பதிவு செய்யும் முறை ஆங்கிலேய ஆட்சியின் போது 1886-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பிறப்பு, இறப்பு, திருமணங்களை பதிவு செய்வதற்கு இதன் மூலம் வழி ஏற்பட்டது.
'
திருமணங்களை பதிவு செய்வது 1973-ம் ஆண்டு கர்நாடகத்திலும், 1996-ம் ஆண்டு இமாச்சாலப்பிர தேசத்திலும் 2002-ம் ஆண்டு ஆந்திராவிலும் அமல்படுத்தப்பட்டது. ஜம்மு கஷ்மீரில் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
'
அஸ்ஸாம், பீகார், மேகாலயா, ஒரிஸ்ஸா, மேற்குவங்க மாநிலங்களில் விருப்பப்பட்டால் பதிவு செய்யலாம் என உள்ளது. எகிப்து, பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் திருமண பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
'
நமது ஷரீஅத் சட்டம் மிகச் சிறந்தது. எல்லா மஹல்லாக்களிலும் ஷரீ அத் சட்டப்படியே இஸ் லாமியத் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஷரீஅத் சட்டப்படி திருமணங்கள் நடந்தாலும் அதை பதிவு செய்ய வேண்டும் என தற்போது அறிமுகப்படுத்தப்பட் டுள்ள சட்ட முன்வடிவு கூறுகி றது.
'
ஷரீஅத் சட்டப்படியே திருமணங்கள் நடந்தாலும் ஏழைப் பெண்கள் திருமண மோசடியிலிருந்து தடுக் கப்படுவதற்கு இந்த பதிவு முறை பலன் தரும்.
வங்கியின் நாமினேஷன், வாரிசு, கடவுச்சீட்டு போன்ற காரியங்களுக்கு பயனுள்ள ஆவணமாக இந்த பதிவு சான்றிதழ் அமையும்.
'
இருப்பினும் இந்த சட்ட முன்வடிவு சமுதாயத் தில் ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதால் முஸ்லிம் களின் மார்க்க அறிஞர்கள், சிறந்த வழக்கறிஞர்கள், பேராசிரி யர்கள், சமுதாயத் தலைவர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அறிஞர் பெருமக்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து அரசுக்கு நம் கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம்.
'
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அப்துல் வஹாப்
'
திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது ஷரீஅத் சட்டத்திற்கு இடைய+றானது அல்ல. ஆனால் இந்த சட்ட முன்வடிவு முழுமை பெற வில்லை. விதி இல்லாததால் முழுமையாக அறிய முடியவில்லை. சட்டம் வந்ததற்குப் பிறகு விதி வரும்.
'
நாம் நம்முடைய திருமணங்களை பதிவு செய்ய அருமையான படிவம் வைத்துள்ளோம். அதையே அரசுக்கு மாதிரி படிவமாக அனுப்பி இதன்படி அமல் படுத்துங்கள் என கோரலாம்.
'
இமாம், ஜமாஅத் தலைவர், பெண்ணுக்கு திருமண சம்மதம் கொடுப் போர், மாப்பிள்ளை, சாட்சிகள் என அனைவரின் கையெழுத்துக்களும் இந்த படிவத்தில் இடம் பெறுகின்றன.
'
இந்த சட்டம் நம்மை பாதிக்காது என்றாலும் தலாக் பற்றிய விவரங்கள் பிரச்சினையை ஏற்படுத்தத் தான் செய்யும்.
'
விவாகரத்து என்பது இந்துக்களுக்கு நீதிமன்றத் தில்தான் முடியும். முஸ்லிம் களுக்கு அப்படியல்ல. இந்த சட்டத்தில் இதுபற்றி தெளிவு வேண்டும்.
ஏற்கனவே, நடைமுறையில் ஒப்புக் கொள்ளப் பட்ட விதிமுறைகளின்படி மனமுறிவு ஏற்பட்டால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற திருத்தம் ஏற்கப்பட வேண்டும்.
'
தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூ ர் அல்தாப்
'
சமுதாயத்தில் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக் கின்ற இந்த சூழ்நிலையில் அத்தகைய அமைப்புக் களையெல்லாம் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த ஆலோசனை கூட் டத்தை ஏற்பாடு செய்ததன் மூலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய வரலாறு படைத்துள்ளது-பாராட்டுகிறேன்.
'
கல்வியில் மேம்படுத்தப்பட்ட சமுதாயம் அல்ல முஸ்லிம் சமுதாயம். உலமாக்களால் நடத்தி வைக் கப்படுகின்ற திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப் பட்டவை.
'
திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்பதை ஆதரித்தால் அது பேரழிவைத் தான் கொண்டு வரும். இது ஏழைகளை பாதிக்கும்.
பள்ளிவாசலிலும், மண்டபத்திலும் முடிந்து விடும் திருமணங்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்றால் உலமாக்கள், இமாம்கள் நடத்தி வைக்கும் திருமணங்கள் பதிவாளரால் நடத்தப்படும் நிலை ஏற்பட்டு விடும்.
'
சட்டமன்ற இந்திய தேசிய லீக் முன்னாள் உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுத்தீன்
'
திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதை நம் மீது திணிக்கக் கூடாது. உச்சநீதிமன்றத் திற்கு முஸ்லிம்கள் யாரும் இந்த வழக்கை கொண்டு செல்லவில்லை. சீமா - அஸ்வினிகுமார் தம்பதியர் வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு பரிந்துரையை சொல்லி யது.
'
இப்போது தமிழக சட்டமன்றத்தில் முன் மொழியப் பட்ட சட்ட முன்வடிவை பல அம்சங்களில் நமக்கு பாதிப்பு வரும் நிலை உள்ளது. அதை விரிவாக ஆராய்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். அதுவரை அவசரப்பட்டு இதை சட்டமன்றத்திலே நிறை வேற்றாமல் சட்டமன்ற செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப முஸ்லிம் எல்.எல்.ஏக்கள் முயற்சிக்க வேண்டும்.
'
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எச். அப்துல் பாஸித்
'
ஷரீஅத்திற்கு பாதகம் ஏற்படும் என்ற நிலை வந்தால் எதிர்ப்பதை தவிர வேறு வழி இல்லை. ஆனால், காரியம் தான் தேவை. வீரியம் தேவை இல்லை. எனவே, திருமண கட்டாயப் பதிவு சட்ட முன்வடிவை நன்கு ஆலோசித்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
'
இன்று முஸ்லிம்கள் மஸ்ஜித், திருமண மண்டபங்கள் வீடுகளில் திருமணம் செய்கின்றனர். அவை அனைத்தும் பள்ளிவாசல்களில் பராமரிக்கப்படும் தப்தரில் பதிவு செய்யப்படுகிறது. அதை அப்படியே அங்கீகரிக்க வேண்டுமென முதல்வர் கலைஞர் இடத்தில் ஒரு ஐவர் குழுவாக சென்று சந்தித்து வலியுறுத்தலாம்.
'
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.
முஹம்மது ஜுனைது
'
உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது என்பதற்காக எல்லா சட்டத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நம்முடைய தனியார் சட் உரிமை எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.
'
எனவே, திருமண கட்டாய பதிவு சட்டத்தை நிறைவேற்றுவதை தற்காலிகமாவது நிறுத்தி வைத்து, முஸ்லிம் தனி சட்டத்திற்கு பாதகம் ஏற்படுமா என ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
'
இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச் செயலாளர் எஸ்.எம்.
ஹிதாயத்துல்லாஹ்
'
திருமணங்கள் பதிவு கட்டாயம் என்ற சட்டம் இந்துக்களுக்கு தேவை. ஆனால், முஸ்லிம்களைப் பொறுத்தவரை 1400 ஆண்டுகளாக இருக்கக்கூடிய சட்டத்தின் அடிப்படையில் திருமணங்கள் நடைபெறு கின்றன.
'
திருமணப்பதிவு என்பது அவசியம்தான். பாஸ்போர்ட், உள்ளிட்ட தேவைகளுக்கு திருமண சான்றிதழ் தேவைப்படும். பள்ளிவாசல்களில் உள்ள திருமண பதி வில் காஜியிடம் கையெழுத்து பெற்று அந்த சான்றிதழ் களை சட்டப்படி அரசு அங்கீகரிக்கலாம்.
'
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் பிரிவு
அமைப்பாளர் வெ. ஜீவகிரிதரன்
'
திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டமே பொது சிவில் சட்டத்திற்கான முதல்படி தான். முஸ்லிம் தனியார் சட்டத்தில் இது அப்பட்டமாக கை வைப்பதாகும்.
'
இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 25 மற்றும் 26 ஆகியவை மத நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகளாக்கி யிருக்கிறது.
'
அதன்படி இந்தியர்கள் எவரும் தான் விரும்பிய மதத்தை ஏற்றுக் கொள்ளவும் நடைமுறைப் படுத்தவும் அதனை பரப்பவும் அடிப்படை உரிமைகளைப் பெற்றவர்கள்.
'
இந்த அடிப்படை உரிமைகளின் மீது நீதித் துறை கை வைக்க இடம் அளித்தால் நம்முடைய தனிச் சட்டத்தையே நாம் இழந்து விடுவோம்.
'
இன்று திருமண கட்டாய பதிவு சட்டம் என்பார்கள். நாளை சொத்துரிமைக்காக சட்டம் கொண்டு வருவார் கள். பின்னர் வாரிசு உரிமைகளுக்கான சட்டம் வரும்.
'
கடைசியில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ள ஒவ்வொரு அம்சமும் பறிபோய் பொது சிவில் சட்டத்தில் கொண்டுபோய் விட்டு விடும்.
'
மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் அ.ச உமர் பாரூக்
'
பொது சிவில் சட்டத்தை முஸ்லிம்கள் எப்படி எதிர்க்கின்றார்களோ அது எந்த ரூபத்திலும் நுழைந்து விட வாய்ப்பு ஏற்படுத்தும் சட்டங்களையும் நாம் எதிர்த்தே தீர வேண்டும்.
'
மேலோட்டமாகப் பார்த்தால் இந்த சட்டம் தேன் தடவிய தோட்டாவாக உள்ளது. எனவே, மதமாற்ற தடை சட்டத்தை எப்படி எதிர்க்கிறோமோ அப்படி இதனையும் எதிர்க்க வேண்டும்.
'
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் புதிய சட்டம் என்பது தேவைப்படுகின்ற ஒன்று அல்ல. இன்று இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பாராட்டுகிறேன்.
'
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா செய்தித் தொடர்பாளர் மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி
'
எத்தனையோ ஆண்டு காலம் அரசாட்சி செய்து வந்த ஸ்பெயினில் முஸ்லிம்கள் துடைத்தெறியப்பட்ட தற்கான முதல்படி அங்கு கொண்டு வரப்பட்ட திருமண பதிவு சட்டம்தான்.
'
இன்று தாடி வைத்தால் தாலிபான்கள், முஸ்லிம் பெண்கள் பர்தா அணியக்கூடாது என்றெல்லாம் சர்வ சாதாரணமாக சொல்லத் துணிந்து விட்டனர்.
'
பொது சிவில் சட்டம் கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நாம் மிகுந்த விழிப்போடு பிரச்சினைகளை அணுக வேண்டும்.
'
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநிலச் செயலாளர் கமுதி பஷீர், உலமாக்கள் அணியின் அமைப்பானர் மவ்லவி ஹாமித் பக்ரீ, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் எஸ்.எம். சிக்கந்தர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் பிரஸிடென்ட் ஏ.அபுபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கப் பொறுப்பாளர் முஹம்மது ஹனீபா, சென்னை மாவட்ட சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவரும், வக்ஃபு வாரிய உறுப்பினரு மான எம். சிக்கந்தர், சுன்னத் ஜமாஅத் ஆன்மீகப் பேரவைத் தலைவர் மவ்லானா தேங்கை சர்புத்தீன் மிஸ்பாஹி, தமிழக சட்டமன்ற முன்னாள் இணைச் செயலாளர் வழக்கறிஞர் நாகூர் மீரான், பேராசிரியர் டாக்டர் சையது ரஃபீக் அஹமது ஆகியோரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
'
இந்தியா சுதந்திரமடைந்த சமயத்திலேயே அடுக் கடுக்கடுக்கான பல சோதனைகளுக்கு நாம் ஆளா னோம். அதில் ஒன்று, ஹஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்| என்ற சிறப்பு திருமணச் சட்டம் அன்று காயிதெ மில்லத் அவர்களின் உணர்ச்சிமிக்க வழிகாட்டுதலில் சமுதாயம் எழுப்பிய உரத்த குரலால் முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
'
இன்று திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பார்கள். அதில் நமக்கு என்ன ஆபத்து என்று கேட்கலாம். பதிவாளர் அலுவலகங்களின் பதிவு செய்யப்பட்ட திருமணம் எதையும் வெளியில் விவா கரத்து செய்வது ஏற்க முடியாதது@ அதை நீதி மன்றங்கள்தான் முடிவு செய்யும் என அடுத்த அறிவிப்பு வரும்போதுதான் இதன் ஆபத்து தெரியும்.
'
பெண்ணின் திருமண வயது 21 என்றுதான் அரசு இப்போது விளம்பரம் செய்து வருகிறது. 18 வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்ய முடியாது என்ற நிலை வந்தால் என்ன செய்வது? சரி. 18 வயதிலேயே திருமணம் செய்கிறோம் என்றாலும் மணப்பெண் 18 வயதை அடைந்திருப்பாள் என்பது சந்தேகம் என பதிவாளர் மறுத்தால் அப்பெண்ணிற்கு பள்ளிக்கூட சான்றிதழோ, பிறப்புச் சான்றிதழோ இல்லையென்றால் என்ன நிலை?
'
வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள் ஒரு மாத விடுமுறையில் ஊர் வந்து பெண்ணுக்கு திருமணம் முடித்து திரும்பலாம் என்றால் இந்த சங்கடங்களை எப்படி சந்திப்பது? வறுமையின் காரணமாக ஊர் கடந்து ஊர் வாழ்கின்றவர்கள் எங்கே போய் சான்று தேடுவது? என்ற கருத்துக்களையெல்லாம் அந்த கூட்டத்தில் நான் எடுத்து வைத்தேன்.
'
இறுதியில், தமிழக அரசின் இந்த மசோதாவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி சிறுபான்மை மக்களின் ஐயப் பாட்டை நீக்கும் வகையில் வேண்டிய திருத்தங் களை செய்து பின்னர் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை கேட்டுக் கொண்டு ஏகமதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'
இந்த தீர்மானத்தை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே முஸ்லிம் சமுதாயத்தின் விருப்பமாகும்.
'
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template