அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Wednesday, October 21, 2009

சிறுபான்மையினரான நமக்கு பல அரசியல் கட்சிகள் எதற்கு?

லால்பேட்டை , அக் 21-
சிறுபான்மையினரான நமக்கு பல அரசியல் கட்சி கள் எதற்கு? முஸ்லிம்கள் அனைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் ஒன்றுபட வாரீர் என தமிழ் நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ. எம். அபூபக்கர் அழைப்பு விடுத்தார்.

கடலூர் மாவட்டம் லால்பேட்டை நகரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது-

வரலாற்று சிறப்பிற் குரிய லால்பேட்டை நகரில் சமுதாயத்தின் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொதுக் கூட்டம் எழுச்சியோடு நடைபெற் றிட ஏற்பாடு செய்த தாய்ச் சபையின் செயல்வீரர்க ளுக்கு தலைமையின் சார் பில் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன். லால்பேட்டையில் உள்ள மன்பவுல் அன்வர் அரபிக் கல்லூரி துவங்கப்பட்டு பல ஆயிரம் உலமாக்களை இச்சமுதாயத்திற்கு வழங்கி யிருக்கின்றது.

இப்பெரு நகரில் தாய்ச் சபையின் அழைப்புப் பணிக்காக நாங்கள் வந்தி ருக்கின்றோம். முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு எதிர்வரும் அக்டோபர் 24ம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கின்றது. முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கின்றோம். இக்கூட் டம் தாய்ச்சபை வரலாற் றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் பத்து லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென தலைவர் பேராசிரியர் அவர்கள் நம்மை பணித் திருக்கின்றார்கள். உறுப் பினர் சேர்ப்புப் பணியை துரிதப்படுத்திடவும், அனைவரையும் உற்சாகப் படுத்திடும் நோக்கிலும் மூன்று வழிமுறைகளை கையாள வேண்டும். முத லில் முஸ்லிம் லீகில் இருக் கக் கூடிய உறுப்பினர்கள் அனைவர்களையும் நேரில் சந்தித்து ஈடுபாடு கொள்ள செய்ய வேண்டும். சிறு சிறு பிரச்சினைகளை பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்து ஈகோ பார்க் காமல் செயலாற்ற வேண் டும்.

அடுத்ததாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புக் களில் இருக்கக் கூடியவர்க ளையும் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீகில் பணிக ளாற்ற அழைக்க வேண் டும். பல்வேறு அமைப்புக் களிலிருந்து கொண்டு சமூக நலப் பணிகளாற்று வதில் எந்த தவறும் இல்லை. நாம் கூறுவதெல் லாம் அர சியல் ரீதியாக தாய்ச்சபையில் ஒன்று படுங்கள், ஆதரவு தாருங் கள் சிறுபான்மை யினராக இருக்கக் கூடிய நமக்கு இரண்டு - மூன்று அரசியல் கட்சிகள் தேவை இல்லை. இதனால் எந்த நன்மையும் இல்லை. தேசிய லீக், த.மு.மு.க, ம.ம.க, தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இயக்கங்களிலிருப்பவர்களும் சமுதாய பணியில் இருக்கக் கூடியவர்கள். நாம் எல் லாம் ஒரு கொடியில் பூத்த மலர்கள் தான்.

அனைவர் களையும் அரசியல் ரீதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் ஒன்றுபடுத்தும் முயற்சியை நாம் தொடர்ந்து செய்ய வேண் டும்.

தேசிய லீக் துவங்கிய இடம் லால்பேட்டை, எனவே நாங்கள் இவ்வி யக்கத்தை கலைக்க மாட் டோம் என்று சிலர் இங்கு கூறி வருவதாக நான் அறிகி றேன். நான் அவர்களுக்கு பணிவோடு தெரிவிப்பது , இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீகை கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத் நிறுவிய போது, தாய்ச் சபையை இந்நாட்டில் நிலைக்க உதவியவர்கள், உழைத்த வர்கள் லால்பேட் டையை சேர்ந்தவர்களும், இங்கு பயின்ற உலமா பெருமக் களும்தான்.

இதை பாதுகாக்க நீங்கள் கடமை பெற்றிருக் கின்றீர்கள் அல்லவா! சில காரணங்களால் தேசிய லீக் எனும் இயக்கம் தோன்றி இருக்கலாம். சிராஜுல் மில்லத் அவர்களாகட்டும் பன் மொழிபுலவர் அப்துல் லத்தீப் சாஹிப் ஆகட்டும் இவரும் சமுதாய ஒற்று மையை விரும்பியே வாழ்ந் தனர்.

சிராஜுல் மில்லத் தின் மறைவிற்கு ஒரு மாதத் திற்கு முன் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொன் விழா மாநாட்டின் போது அப்துல் லத்தீப் அவர் களுக்கு சிராஜுல் மில்லத் கைப்பட கடிதம் எழுதி தாய்ச்சபைக்கு அழைத் தார். அதே போல் சிரா ஜுல் மில்லத் மறைவிற்கு பின் வேலூரில் நடை பெற்ற இந்திய தேசிய லீக் மாநில மாநாடு நுழைவு வாயிலுக்கு சிராஜுல் மில்லத் பெயர் சூட்டப்பட் டது.

என்றும் இல்லாத அளவிற்கு இன்று முஸ்லிம் லீகின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பல்வேறு அமைப்பி னரும் தாய்ச்சபையில் இணைந்து வருகின்றனர். காஷ்மீரில் உள்ள கல்வி யாளர்களும், சமூக சேவ கர்களும், ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்களும் முழுமையாக தங்களை முஸ்லிம் லிகில் இணைத் துக் கொள்ள வற்புறுத்தி வருகின்றனர்.

இன்று தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களின் உண்மையான தோழன் முஸ்லிம் லீக் தான் என்று உணர்ந்து முஸ்லிம் லீகில் இணைந்து வருகின்றனர்.

அனைத்து தரப்பு சிறு பான்மையினரையும், தாழ்த்தப்பட்ட மக்களை யும் தாய்ச்சபையில் இணைத்து சமூக நல்லி ணக்க - சகோதரத்துவத் திற்கு கைகொடுக்கும் இயக்கம் முஸ்லிம் லீக் என்பதை நிலைநிறுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட தாய்ச் சபையின் உறுப்பினர் சேர்ப்புப் பணியில் முழு கவனம் செலுத்திட வேண் டும். மாநில தலைமை அறி விக்கக்கூடிய திட்டங்களை ஏதோ நாங்கள் சில பேர் கூறி வருகின்றோம் என்று இல்லாமல் தாய்ச்சபை அனைத்து மாவட்ட - நகர நிர்வாகிகளும் முழு கவனம் செலுத்தி, ஈடுபாட்டுடன் உறுப்பினர் சேர்ப்புப்பணி களை தீவிரப்படுத்த வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template