அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Monday, October 12, 2009

புதிய வரலாறை தொடர புறப்பட்டு வாருங்கள்! திருப்புமுனைக்கு திருச்சியில் வடிவம் கொடுப்போம்! -கே.எம்.கே


திருச்சியில் வரும் 23, 24 தேதிகளில் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடுகின்றனர். வருங்காலத்துக்கு உரிய செயல் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்த நாடுகின்றனர்.

தமிழகமெங்கும் உள்ள அறுநூறுக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வருவர், புதிய சிந்தனைகள் தருவர்.

திருச்சிராப்பள்ளி, தமிழகத்தின் நடுப்பகுதியாக - மைய இடமாக இருப்பதால், அனைவரும் வரவும், அரிய பெரும் ஆலோசனைகளைத் தரவும் முடியும் என்பதற்காகவே இந்த மாநகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் திருச்சியைப் பற்றிக் கூறும் போதெல்லாம் ஹதமிழகத்தின் நெஞ்சத் தாமரை என்று வருணிப்பார்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் ஆக்க விரும்பினார் என்பது வரலாற்றுச் செய்தி.
தி.மு.க. இன்றைக்கு மாநிலத்திலும், மத்தியிலும் ஆளும் கட்சியாக வளர்ந்திருக்கிறது.
இந்த இயக்கம் தேர்தலில் முஸ்லிம் லீக் வரலாற்றில் திருச்சிக்குத் தனிச் சிறப்புகள் பலப்பல உண்டு. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் லக்னோவில் கூடி முஸ்லிம் லீக் கலைக்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றிய போது, அதே கால கட்டத்தில் திருச்சி தேவர் மன்றத்தில் முஸ்லிம் லீக் ஊழியர்கள் கூடி, சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக் தொடரும் - நீடிக்கும் - நிலைக்கும் என்று தீர்மானம் போட்டு இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த பூமி இந்த திருச்சிதான்.

சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம் லீகிற்கு எதிராக வீசிய சூறாவளியால் பாதிக்கப்படாத திருச்சி முஸ்லிம் லீக் கோட்டையாகவே இருந்தது. திருச்சி முஸ்லிம் லீக் ஊழியர் திலகங்களாக விளங்கியவர்கள் காயிதெ மில்லத் அவர்களின் அத்யந்த நண்பர்கள் ஆனார்கள். அவர் களின் அரசியல் ஆலோசகர்களாகத் திகழ்ந்தார்கள். காயிதெ மில்லத் காலத்தில் திருச்சி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இரண்டாவது தலைமையகமாகவே செயல்பட்டது.

வித்வான் ஏ.கே. ஜமாலி, பாஷாபாய், நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப், அப+பக்கர் ஆகியோர் ஒன்றுபட்டு ஹமறுமலர்ச்சி வார இதழ் துவக்கினர். ஆசிரியர் ஏ.எம். ய+சுப் அவர்களின் எழுத்தும், பாஷா சாஹிபின் கொள்கை விளக்கமும் தாங்கிய மறுமலர்ச்சி தமிழகத்தில் முஸ்லிம் லீகை எழுச்சி கொள்ளச் செய்தது - கேரளாவில் கிளர்ந்து எழ வழிகாட்டியது.

1958 ஜனவரி 11, 12 தேதிகளில் திருச்சியில் நடத்தப் பட்ட முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடுதான் - நூலாசிரியர் ரஜாகான் எழுதியுள்ளபடி அந்த மாநாட்டில் திரண்ட இருபது ஆயிரம் முஸ்லிம் லீகர்கள் எழுப்பிய தக்பீர் முழக்கம் தான் காயிதெ மில்லத் அவர்களுக்கு புதிய உற்சாகத்தை ஊட்டியது. முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கையை உருவாக்கித் தந்தது.

இதே திருச்சி காட்டூரில் 1962-ல் கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில்தான் முஸ்லிம் லீகின் வளர்ச்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தும் வகை காணப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் அவர்களால் மஜ்லிசே முஸாவரத் அமைப்பு உருவாக்கப் பட்டது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் முஸ்லிம் லீகுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை திருச்சி காட்டூர் முஸ்லிம் லீக் கூட்டம் வலியுறுத்தியே வரலாறு கூறிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு நாமெல்லாம் பெருமிதம் கொள்ளும் வகையில் முஸ்லிம் லீக் வரலாறு என்று ஒரு முழுமையான நூலை இந்தியாவில் யாரும் எழுதவில்லை. கேரளாவில்கூட ஒரு வரலாற்று நூலை யாரும் யாத்துத் தரவில்லை. மறுமலர்ச்சி ஏட்டின் துணை ஆசிரியர் பொறுப்பு வகித்த எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் தாம் இந்த சரித்திர சாதனையைச் செய்து முடித்திருக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்பு திருச்சிக்கு உரியதுதான்.

கடந்த அறுபது ஆண்டுகளாகப் பலப்பல வரலாற்று நிகழ்வுகளுக்கு உரிய தலமான திருச்சியில்தான் அக்டோபர் 23 வெள்ளிக்கிமை மாலை மாநில நிர்வாகிகள் கூட்டமும் அக்டோபர் 24 சனிக்கிழமை காலை மாநில பொதுக்குழு கூட்டமும் நடைபெறுகிறது.

திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், முன்னணித் தொண்டர்களும் கூட்ட ஏற்பாடுகளைச் சிறப்பாக மேற்கொண்டு அனைவரையும் வரவேற்க ஆர்வமிகுதியுடன் காத்திருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்றைக்கு தேச மக்களால் வரவேற்கப்படும் இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தை மேலும் வலிமை யுள்ளதாகவும், புதிய பொலிவுமிக்கதாகவும், சமுதாயத் தின் கனவுகளை நனவாக்கித் தரும் அரசியல் நிறுவன மாகவும் வளப்படுத்த இந்தப் பொதுக்குழு பயன்பட வேண்டும்.

புதிய வரலாற்றைத் தொடர புறப்பட்டு வாருங்கள் திருச்சிக்கு!தீர்க்கமான முடிவு எடுப்போம்! திருப்புமுனைக்கு வடிவம் கொடுப்போம்!

1 comment:

Unknown said...

சிந்தனையைத் தூண்டும் சிறப்பான அறிக்கை,சமுதாயத்தின் அக்கறையும் முஸ்லிம் லீகின் முன்னேற்றமும் மூச்சாக பெற்றிருக்கும் அரிய தலைவர்களின் வரிசையில் கே.எம்.கே இடம் பிடித்து விட்டார்.

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template