அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Monday, April 13, 2009

ஏப்ரல் 15 வேலூர் முஸ்லிம் லீக் வேட்பாளர் பிரச்சாரத்தை துவங்குகிறார்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துர் ரஹ்மான் 15.4.09 புதன் கிழமை காலை 9 மணிக்கு தலைமை நிலையமான காயிதே மில்லத் மன்ஸிலில் இருந்து புறப்பட்டு திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜித் சென்று காயிதே மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார்.

தொடர்ந்து ராயப்பேட்டையில் சிராஜுல் மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார். காலை 10மணிக்கு வேலூர் புறப்பட்டு சென்று தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்.

அன்று மாலை 5 மணிக்கு வேலூரில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., அவர்கள் தலைமையில் நடை பெறும் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்நிகழ்ச்சிகளில் முஸ்லிம் லீக் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்.

Friday, February 27, 2009

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களை உடனே நிறைவேற்றி தாருங்கள் முதல்வர் கலைஞருக்கு பேராசிரியர்வேண்டுகோள்


சிறுபான்மை கல்வி நிறு வனங்களில் காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர் நியமனங்களை உடனடி யாக செய்து தரும்படியும், பணிபுரியும் ஆசிரியர்க ளுக்கு அரசு ஊதியத்தை வழங்கி உதவும்படியும் முதல் வர் கலைஞரிடம் முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்வோம். என்று பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தெரிவித்தார் .

சென்னை புதுக் கல்லூரியில் வரலாற்று ஆய்வு மன்றம் துவக்க விழா இன்று (வெள்ளி) நடை பெற்றது.

இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவரு மான பேராசி ரியர் கே.எம். காதர் மொகி தீன் எம்.பி., சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு வர லாற்று ஆய்வு மன்றத்தை துவக்கிவைத்து உரையாற்றி னார்.

அப்போது அவர் குறிப் பிட்டதாவது:
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு அளித்த கல்லூரி யின் முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், துறை மாணவர்கள் அனை வருக்கும் முதற் கண் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ள மாணவர்களையும் வாழ்த்த கடமைப் பட்டுள்ளேன்.

இங்கு வரவேற்புரை யாற்றுகையில் கல்லூரியின் தேவைகள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் சுட்டிக் காட்டினார்கள். குறிப்பாக கல்லூரி ஆசிரி யர் நியமன பிரச்சினை குறித்து குறிப்பிட்டார்கள்.

இன்று மாலை முதல்வர் கலைஞர் அவர்களை முஸ் லிம் லீக் சார்பில் சந்திக்க உள்ளோம். அப்போது இந்த பிரச்சினை குறித்து அவரிடம் எடுத்துக் கூறி விரைவில் நல்ல முடிவு கான வலியுறுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங் களில் ஆசிரியர்களாக நிய மிக்கப்படுபவர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ற சரியான ஊதியங்களை பெறுவதற்கு சான்றிதழ்கள் அவசியமாக இருக்கின்றன.

பல்கலைக் கழகங்கள் குறிப்பாக சென்னைப் பல் கலைக் கழகம் இந்த விஷயத்தில் இடையூறு அளிக்கும் வகையில் செயல் பட்டு வருவது நமது கவ னத்திற்கு வந்துள்ளன.

அவை விரைவில் சரி செய்யப்பட முதல்வரிட மும் அரசிடமும் வலியுறுத் துவோம்.

ஏற்கெனவே, இது போன்ற பிரச்சினை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூ ரிக்கு ஏற்பட்டது. அதனை கல்லூரி சார்பில் நாம் எதிர் கொண்டு வெற்றி பெற் றோம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நேற்று முன்தினம் பாரா ளுமன்றத்திலே சிறுபான் மையினர் கல்வி திருத்த மசோதா ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது. நான் காண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட இருந்த இந்த மசோதாவில் பல் வேறு குறைபாடுகள் இருந்தன. அவற்றையெல் லாம் நாம் சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் தொ டர்ந்து வலியுறுத்தி வந் தோம். இப்போழுது மத்திய அரசு அந்த தவறுகளை குறைபாடுகளை சரிசெய்து திருத்தப்பட்ட மசோ தாவை தாக்கல் செய்துள் ளது.

சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய நிலை இத் துனை காலமும் இருந்து வந்தது.

மாநில அரசுகள் அவ் வளவு எளிதாக என்.ஓ.சி., கொடுப்பது கிடையாது. இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு இப் போழுது தாக்கல் செய்யப் பட்டுள்ள புதிய மசோதா வில் சிறுபான்மையினர் மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே கல்வி நிலையங்களை துவங்கி நடத்திட வலிவகை செய் யப் பட்டுள்ளது என்பதை யும் இந்த நேரத்தில் குறிப் பிட விரும்புகின்றனர்.

இப்பொழுதுள்ள நமது தமிழக அரசானாலும், மத் திய அரசானாலும் இரண்டு அரசுகளுமே சிறு பான்மையினர் நலனை அக் கரை கொண்டு அவர்க ளின் உணர்வுகளை மதித்து நடக்கின்றன.

இத்தகைய நல்லாட் சியில் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் ஆசி ரியர் நியமனங்கள் நல்ல முறையில் நடந்தேறும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசும் பொழுது குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் புதுக் கல்லூரி முதல்வர் டாக்டர் அல்தாப் தலைமை தாங் கினார், பேராசிரியர் ஜப ருல்லா கான் வரவேற்புரை யாற்றினார். துணை முதல் வர் நயீமுர் ரஹ்மான், பேராசிரியர் முஹம்மது மன்சூர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் நிஜா முத்தீன், டாக்டர் சே.மு.மு. முஹம்ம தலி, பேராசிரியர் நத்தர் ஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளர் அபூபக்கர், மாநில செய லாளர் கமுதி பஷீர், தென் சென்னை மாவட்ட தலை வர் இஸ்மத் பாட்சா, செயலாளர் பாவை முஸ் தபா, ஒருங்கினைப்பாளர் பீர் முஹம்மது, நத்தம் ஜஹாங்கீர், ஆலம் கான், கவிஞர் ஷேக் மதார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sunday, February 22, 2009

கோட்டகுப்பம் அப்துஸ் ஸமத் நத்வி ஹஸரத் காலமானார் தலைவர் பேராசிரியர் இரங்கல்

கோட்டகுப்பம், பிப்.22-

கோட்டகுப்பம் ரப்பானியா அரபிக் கல்லூரியில் தலைவரும், நாடறிந்த மார்க்க அறிஞருமான மவ்லானா மவ்லவி அப்துஸ் ஸமத் நத்வி ஹஸரத் 21-2-2009 சனிக் கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார்.

மவ்லானா அப்துஸ் ஸமத் நத்வி சென்னை பல்லாவரம் மதரஸாவில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதெ மில்லத் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அன்றிலிருந்து இன்று வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

சென்னை அஞ்சுமனே ஹிமாயத்துல் இஸ்லாம் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றியவர். மலேசியா ஈப்போவில் மதரஸாவை நிறுவி திறம்பட சேவையாற்றியவர்.

வானொலி மற்றும் இஸ்லாமிய பத்திரிகைகள் மூலம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் ஹகாயிதெ மில்லத் விருது| வழங்கி கவுரவிக்கப்பட்டவர்.

மவ்லானா மவ்லவி அப்துஸ் ஸமத் நத்வி ஹஜரத் மறைவு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது-

மவ்லானா மவ்லவி அப்துஸ் ஸமத் நத்வி ஹஜரத் அவர்கள் தமிழக உலமாக்களின் தனித்து ஒளிசிந்திய நட்சத்திரம் போல் விளங்கியவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர்களான கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத், சிந்தனை செல்வர் சிராஜுல் மில்லத், இப்ராஹீம் சுலைமான் சேட், குலாம் மஹ்மூது பனாத்வாலா உள்ளிட்ட தலைவர்களுடனும் என்னுடனும் மிகுந்த நேசம் பாராட்டி ஆழமான அன்பும், பாசமும் கொண்டு விளங்கியவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், ஜமாஅத் துல் உலமா சபையும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திய பெருமை ஹஜரத் அவர்களுக்கு உண்டு.

கோட்டகுப்பம் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியை நிறுவியதில் மிகப் பெரும் பங்காற்றியவர். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மிகப் பெரும் பணியாற்றியவர்.

அவருடைய எழுத்தும், சொற்பொழிவுகளும் இஸ்லாமிய மார்க்கத்தின் பெருமையை நிலை நிறுத்தியதோடு அனைத்து சமுதாய மக்களையும் சன் மார்க்கத்தின்பால் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது.

தமிழக அரபிக் கல்லூரி , மதரஸா கல்வி, மார்க்க கல்வி மக்கள் மத்தியில் சென்றடைய நத்வி ஹஜரத் போன்ற உலமாக்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

ஆலிமின் மரணம் அகிலத்தின் மரணம் என்பர். அவரின் மறைவால் அறிவுலகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அல்லாஹ் தன் கருணையால் நிரப்பிட அனைவரும் பிரார்த்திப்போமாக.

அன்னாரின் குடும்பத்தாருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்வதோடு அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் பிரார்த் திக்க கேட்டுக்கொள்கின்றேன். ஜனாஸா இன்று (22-2-2009) இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டகுப்பம் ஜாமிஆ மதரஸா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படு கின்றது.

கவிஞர் தஞ்சை நபிநேசன் காலமானார்

தஞ்சாவூர், பிப்.22-

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தஞ்சை மாவட்ட பொருளாளரும், தலைமை நிலைய பேச்சாளருமான சமுதாய கவிஞர் தஞ்சை நபிநேசன் (ஜியாவுதீன்) இன்று (22-2-09) அதிகாலை தஞ்சையில் காலமானார். அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளும், சமுதாயப் பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.

தஞ்சை நபிநேசன் என்று பரவலாக அறியப்பட்ட எச். ஜியாவுதீன் 1992-ம் ஆண்டு முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் சேவையாற்றி வருகிறார்.

தஞ்சை மாவட்ட காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர், மாநில காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் போன்ற பதவிகளை வகித்த அவர் தஞ்சை மாவட்ட பொருளாளராக பதவியேற்று முஸ்லிம் லீகின் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

பூண்டி புஷ்பா கல்லூரியில் பி.எஸ்ஸி., பட்டம் பெற்ற அவர் அண்ணாமலை பல்கலைக்கழக அஞ்சல்வழி கல்வி மூலம் எம்.ஏ. பட்டம் பெற்றார். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்க அவர் ஏராளமான நுல்களை எழுதியுள்ளார்.

விசா பறவைகள்|, புனித நபியே - புகழ் நிலவே|, பிரார்த்தனைப் பூக்கள்|, பச்சை வானில் பொன்விழா பிறைகள்|, தாஜ்மஹால் மனசு|, அண்ணல் நபியின் அற்புத அறிவுரைகள்|, என் நண்பனும் - தேநீர் கோப்பையும்|, புரியாத நட்சத்திரங்கள்| போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

இலங்கை வானொலியில் இவரது உரைகள் இடம் பெற்றிருக்கின்றன.

கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 5 மணியளவில் தஞ்சையில் அவரது இல்லத்தில் காலமானார்.

அவருக்கு தாயும், மனைவியும் உள்ளனர்.

இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் ஆற்றங்கரை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி யில் அவரது ஜனாஸா நல்லடக்கம் நடை பெறுகின்றது.

கவிஞர் தஞ்சை நபிநேசன் மறைவு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது-

கவிஞர் நபிநேசன் சிறந்த கவிஞர். கட்டுரையாலும், கவிதையாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொள்கை கோட்பாடுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். முஸ்லிம் லீகின் வரலாற்றையும், முன்னணி தலைவர்களை படம்பிடித்துக் காட்டுவதில் வல்லவராக திகழ்ந்து வந்தவர்.

சமுதாய எழுச்சிக்கும், மார்க்கத் துறையின் வளர்ச்சிக்கும், முஸ்லிம் லீகின் வலிமைக்கும் காலமெல்லாம் பணியாற்றிய நனிசிறந்த நல்லவர்.

முஸ்லிம் சமுதாயத்தினர் மற்றும் முஸ்லிம் லீகில் உள்ள ஒவ்வொரு வரையும் சரியாக எடைபோடுவதிலும் அவர்களின் பற்றி எழிலார்ந்த குணங்களை விளக்குவதிலும் வல்லவராக விளங்கியவர்.

அண்மையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாட்டில் பங்கேற்று விருதையும் பெற்றார்.

கவியரங்கம், பட்டிமன்றம், சர்வகட்சி கூட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய கொள்கைகளை தெளிவாகவும், உறுதியாகவும் விளக்க கூடியவராக விளங்கி வந்தார்.

அவரின் மறைவு முஸ்லிம் லீகிற்கு பேரிழப்பாகும். தாய்ச்சபையின் சார்பில் மறைவுற்ற கவிஞர் நபிநேசனின் குடும்பத்தா ருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரின் மஃபிரத்துக்கு அனைவரும் துஆ செய்திட கேட்டுக்கொள்கின்றேன்.

Thursday, February 19, 2009

ஐ.ஏ.எஸ். தேர்வு: ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி

பொருளாதார வசதியற்ற, படிப்பில் தகுதி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற சென்னையில் இலவச தங்குமிடம், உணவு மற்றும் சிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளித்து உதவ தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சே.மு. முஹம்மதலி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது-

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஆர்வமுடைய முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற வழிகாட்டும் வகையில் இத்திட்டத்தினை துவக்கியுள்ளோம்.
இத்திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தேர்வு எழுத இருப்பவர்கள்
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள் பயன் பெறலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் நேர்காணல் செய்து, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்படும் மாணவர்களுக்கு சென்னையில் தங்குமிடம், உணவு, சிறந்த மையத்தின் மூலம் பயிற்சி, நூலக வசதி முதலியன முற்றிலும் இலவசமாக செய்து தரப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் எஸ்.எஸ்.எல்சி., (10-ம் வகுப்பு), பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முதலான மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களோடும், ஜமாஅத் தலைவர் சான்றிதழோடும் சுய விவரக் குறிப்பினை க்ஷiடி-னுயவய உடனடியாக அனுப்பி விண்ணப் பிக்கலாம்.

முகவரி -
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்,
118ஃ13, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 3.
அலைபேசி, பொதுச் செயலாளர் - 9444165153

Wednesday, February 18, 2009

தமிழக அரசுக்கு முஸ்லிம் சமுதாயம் நன்றி

தமிழ்நாடு அரசு பிப்ரவரி 17-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், பள்ளி வாசல்கள் - தர்காக்கள் - மதரஸாக்களில் பணியாற்றும் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் உள்ள முஸ்லிம் மார்க்க அறிஞர்கள், சமுதாய அமைப்புக்கள் வரவேற்பு தெரிவித்து நன்றி கூறியுள்ளன.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையான உலமா நல வாரியம் அறிவித்ததற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், உலமாக்கள் - பணியாளர் நலவாரிய அறிவிப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்ததோடு தமிழக முதல்வர் கலைஞர், நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்திருந்தார்.

வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது சமுதாய கோரிக் கையை ஏற்று உலமாக்கள் - பணியாளர் நலவாரியம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்புகளை வெளியிடுமாறு இமாம்களையும் - முத்தவல்லிகளையும் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார்தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக நிதிநிலை அறிக்கையில் உலமாக்களுக்கு நல வாரியம் அறிவித்து இருப்பது இஸ்லா மியர்களுக்கு மறக்கமுடியாத மாபெரும் வரலாற்று சாதனையாகும்.உலமாக்கள் என்பவர்கள் இஸ்லாம் தோற்றுவித்த நபிகள் நாயகம் (ஸல்) வாரிசு ஆவார்கள். இஸ்லாமியர் அனைவரும் இவர்ளை மிகவும் மதிக்கக்கூடியவர்கள், மார்க்க அறிஞர்களான உலமாக்கள் தலைமையில்தான் தினமும் ஐந்து வேளை இறைவனை தொழுகிறோம்.இஸ்லாமியர்களுக்கு அவரிடும் கட்டளைகள்தான் சிரமேற்கொண்டு திருக்குர்ஆன் மற்றும் நபி வழியில் நடக்க வேண்டும். அப்படிப்பட்ட சமுதாயத்தில் மதிக்கக் கூடிய இவர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. சில உலமாக்களுக்கு ஊதியம் போத வில்லை. இவர்களுக்கு நல்ல மருத்துவம்கூட பார்க்க முடியாத நிலை உள்ளது. மார்க்கத்தில் உயர்ந்தவர்கள் என்றாலும் சாதாரண பள்ளிகளில்கூட இவர்களின் பிள்ளை களை சேர்க்க முடிவதில்லை.எனவே, இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உலமாக்கள் நலவாரியம் ஏற்படுத்த வேண்டுமென்ற ரமளான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சியிலும், பின்னர் உலமாக்கள், உமராக்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அச்சாக இருக்கும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். அப்போது முதல் அசை;சரிடம் இந்த கோரிக்கையை எடுத்துச்சென்று ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார். கேட்ட மாத்திரத்திலேயே உலமாக்கள், நலவாரியம் அமைத்துக் கொடுத்த சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய பெருமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக் கிறார்.


தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா


தன்னலம் கருதாமல் சமுதாயப் பணியாற்றி வருகின்ற உலமாக்களுக்கும் - பள்ளிவாசல்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கும் நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை வரவேற்கிறது.சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று நல வாரியம் அமைத்துள்ள மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையி லான தமிழக அரசுக்கும், இதற்காக முயற்சித்த அனைவருக்கும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை உளப்ப+ர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என்று அதன் மாநிலத் தலைவர் மவ்லானா ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹஸரத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மவ்லானா எம்.ஓ. அப்துல் காதிர் தாவுதிஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று அனைத்து தரப்பு மக்க ளும் பயன்பெறுகின்ற பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் கலைஞர் அவர்கள் முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று உலமாக்கள் நல வாரியம் அமைத்த தற்கும், இதற்கு பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் மவ்லானா எம்.ஓ. அப்துல் காதிர் தாவுதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மவ்லானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவுதிதமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் ஈரோடு மவ்லானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவுதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாய நலனுக்காகவே உழைத்து வரக்கூடிய சங்கைக்குரிய உலமாக்களின் நலிவினை போக்கும் வகையில் நல வாரியம் அமைத்த தமிழக அரசுக்கு உலமா பெருமக்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்.


சென்னையில் அண்மையில் நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சரியான நேரத்தில் நடத்தி சமுதாயத்திற்கு தேவையான பல தீர்மானங்களை நிறைவேற்றியது.


அதில் ஒரு முக்கியமான தீர்மானம் இன்று நிறைவேறியிருக்கிறது. அதற்கு நன்றி சொல்லும் வேளையில் மற்ற தீர்மானங்களையும் தமிழக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரவேண்டும் என்பது இந்த சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. இதற்கு நிச்சயம் வரும் தேர்தலில் சமுதாயம் நன்றியை செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.


மவ்லானா டி.ஜே.எம். ஸலாஹ{த்தீன் ரியாஜிஉலமாக்கள் நலவாரியம் அமைப்பதற்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை யின் சார்பில் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிப்பதாக மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா டி.ஜே.எம். ஸலாஹ{த்தீன் ரியாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


சென்னை மாவட்ட ஜமாஅத்


ஜமாஅத்துல் உலமா சபையும் இதர இஸ்லாமிய இயக்கங்களும் முறையிட்டு வந்த உலமாக்கள் நல வாரியத்தை அமைத்து உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் உலமாக்கள் நல வாரியம் அமைந்திட வலியுறுத்தி சரியான நேரத்தில் சரியான முறையில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டில் கோரிக்கை வைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதன் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தாய்ச்சபையின் நிர்வாகிகள் அனைவருக்கும் சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியினை கொஞ்சும் தமிழில் இதயம் மகிழ்ந்து தெரிவித்துக்கொள்கிறது.அன்பான இறைவன் அனைவருக்கும் இன்னருள் என்றும் புரிந்திடுவானாக என்றும் பிரார்த்தனை செய்கிறது.இவ்வாறு சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா ஓ.எஸ்.எம். இல்யாஸ் காஸிமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் சேமுமு முஹம்மதலி, சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் மேலை நாசர், தமிழ்நாடு இஸ்லாமிய ஆலயப் பணி உடலுழைப்பு பிலால்கள் நல சங்கத்தின் தலைவர் ஏ. முஹம்மது யூனுஸ், சென்னை மாவட்ட பொறுப்பாளர் எம்.ஏ. முஹம்மது ஹனீப் சாகீர் உள்ளிட்டோரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



அண்ணா அறிவாலயத்தில் நேரில் நன்றி

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், அப்துல் பாசித், மாநில மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் கமுதி பஷீர், கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலிம்கள் அணி அமைப்பாளர் மவ்லானா என். ஹாமித் பக்ரீ, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆப்பனூர் பீர் முஹம்மது, நத்தம் ஜஹாங்கீர், தென்சென்னை மாவட்ட தலைவர் கே.பி. இஸ்மத் பாட்ஷா, முஸ்லிம் லீக் பதிப்பக உறுப்பினர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோரை சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

உலமாக்கள் நன்றி

சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ் காசிமி, வி.எஸ். அன்வர் பாதுஷா உலவி, கலிலுர் ரஹ்மான் மன்பஈ, மாநில செய்தி தொடர்பாளர் கா. முஹம்மது இல்யாஸ் ரியாஜி, மற்றும் முஹம்மது ஹனீப் பாகவி, மன்சூர் காசிபி, அப்துர் ரஹீம் பாகவி, அப்துர் ரஹ்மான் மன்பஈ, ஷாகுல் ஹமீத் ரஹ்மானி, உள்ளிட்ட உலமாக்களும் அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் சென்று பேராசிரியர் க. அன்பழகனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.அப்போது தமிழக வக்ஃப் வாரிய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் உடனிருந்தார்.

.

தமிழக அரசுக்கு நன்றி

சென்னை, பிப். 17:
உலமாக்கள் நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரியம், இந்திய தவ்ஹுத் ஜமாஅத், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர் செ. ஹைதர் அலி: தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸôக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், முஸ்லிம் அநாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்காக "உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர் நலவாரியம்' அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.

இந்திய தவ்ஹுத் ஜமாஅத்தின் பொதுச் செயலர் ஏ. முகம்மது சித்திக், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் பொதுச் செயலர் ஹக்கீம் சையது சத்தார் ஆகியோரும் உலமாக்கள் நலவாரியம் அமைத்ததற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template