1112 பக்கங்களில் குஞ்சாலி மரைக்காயர் தொடங்கி நேதாஜிக்கு தொண்டு செய்த அமீர் ஹம்சாவரை விடு தலைப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பு விளக்கமாக இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய இந்த அற்புதமான நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை யில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி நூலை வெளியிட நல்லி குப்புசாமி செட்டியார் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
அருட்தந்தை மி. அமல தாஸ் வாழ்த்துரை வழங்கினார்.
எதிரொலி நாளிதழ் ஆசிரியர் எல். இராமதாஸ் வரவேற் புரையாற்றினார்
பேராசிரியரின் எளிமையும் நேர்மையும்
வேறு எங்கும் நான் பார்த்ததில்லை
எதிரொலி நாளிதழ் ஆசிரியர் எல்.இராமதாஸ் புகழாராம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவரும். மணிச்சுடர் தமிழ் நாளிதழ் ஆசிரியருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனைப் போன்று எளிமையானவரும் நேர்மையான வரையும் வேறு எங்கும் நான் பார்த்ததில்லை என்று எதிரொலி நாளிதழ் ஆசிரியர் எல். இராமதாஸ் குறிப் பிட்டார்.
பேராசிரியரின் எளிமையும் நேர்மையும்
வேறு எங்கும் நான் பார்த்ததில்லை
எதிரொலி நாளிதழ் ஆசிரியர் எல்.இராமதாஸ் புகழாராம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவரும். மணிச்சுடர் தமிழ் நாளிதழ் ஆசிரியருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனைப் போன்று எளிமையானவரும் நேர்மையான வரையும் வேறு எங்கும் நான் பார்த்ததில்லை என்று எதிரொலி நாளிதழ் ஆசிரியர் எல். இராமதாஸ் குறிப் பிட்டார்.
இந்திய விடுதலைக்காக முஸ்லிம்களின் தியாக வரலாற்றை ஒரு இந்து எழுதி வெளியிட்டிருப்பது மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு.
இந்த விழாவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தலைமை ஏற்றிருப்பது மிகச் சிறப்பாகும்.
அரசியலில் நானறிந்த வரையில் மிகச் சிறந்த பண்பாளர். அவரின் எளிமையையும் நேர்மையையும் நான் வேறெங்கும் பார்த்ததில்லை.
மணிச்சுடர் நாளிதழுக்கு பேராசிரியர் ஆசிரியர். ஆனால், ஒருநாள் கூட அவர் எங்கள் பணியில் குறுக்கிட்ட தில்லை. அது ஒரு முஸ்லிம் நாளிதழாக இருந்தும் ஆசிரியர் குழுவில் பணயிhற்றிய அனைவரும் இந்துக்கள். அந்த அளவு எங்களை நம்பி இந்த பத்திரிக்கையை ஒப்படைத் திருந்தார். அப்படிப்பட்ட ஒரு சிறப்பானவரின் வழிகாட்டு தலில் நீண்ட காலம் ஆசிரியர் குழுவில் பணியாற்றியதை நான் பெருமையாக கருதுகிறேன்.
இவ்வாறு எல்.இராமதாஸ் குறிப்பிட்டார்.
சுதந்திரப் பேராட்ட வீரர் மியான்அக்பர்ஷா நினைவோடு வாழ்கின்றவன் நான்
பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் நெகிழ்ச்சி
விடுதலைப் போரில் முஸ்லிம்கள் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட புரவலர் பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் பேசுகையில், சுதந்திரப் போராட்ட வீரர் மியான் அக்பர்ஷாவின் தியாகத்தை நினைவு கூர்ந்து மெய்சிலிர்க்க வைத்தார்.
அவரது புகைப்படத்தை நான் எப்போதும் என்னுடன் வைத்திருக்கிறேன் எனச் சொல்லி அதை அரங்கத்தில் நல்லி குப்புசாமி செட்டியார் எடுத்துக் காட்டியபோது பலத்த கரகோஷத்தால் அரங்கமே அதிர்ந்தது.
1943ல் இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி 1944ல் அக்டோபர் 21ல் வெள்ளை யருக்கு எதிராக போர் பிரகடனம் செய்தபோது அந்த ராணுவப் படைக்கு அத்தியாவசிப் உணவுப் பொருட்களை வழங்கியவர் சுதந்திரப் போராட்ட வீரர் அமீர் ஹம்சா.
பர்மா தலைநகர் ரங்கூனில் நேதாஜி தமக்கு கிடைத்த மாலைகளை ஏலம் விட்டபோது ஒரு மாலையை 3 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தவர் அப்போது அவருக்கு வயது 21. இந்த மாவீரர். அமீர் ஹம்சாவின் தந்தை ரங்கூனில் நகை, ஜவுளிக் கடை நடத்தியவர்.
வெள்ளையரை எதிர்த்த காரணத்தினாலேயே எல்லா வற்றையும் இழந்து சுதந்திரப் பேராட்ட தியாகிகளுக்கு அரசு கொடுத்த மானிய உதவியில் காலம் கழித்தவர் இந்த தியாகி அமீர் ஹம்சா.
இந்தியர்கள் அனைவருமே ஒன்றுதான் பிரிவினைக்கு ஒருவர் மட்டுமே காரணமல்ல
அருட்தந்தை அமலதாஸ் பேச்சு
முஸ்லிம்களின் தியாகம் பற்றி ஒரு இந்து எழுதி ஒரு கிறிஸ்தவரை வாழ்த்தி பேசவைப்பது சமய நல்லிணக்கத் திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
விடுதலைப்போரில் முஸ்லிம்களின் தியாகத்தைப் பற்றி விரிவாக எழுதிய வி.என். சாமி அவர்கள் அடுத்து இந்திய விடுதலைப் போரில் கிறிஸ்தவர்களின் தியாகத்தை எழுதப் போவதாக குறிப்பிட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தியாவில் அனைவருமே ஒன்றுதான். அரசியலுக் காகவும், பொருளாதார லாபத்திற்காகவும்தான் சமய சாயம் பூசுகின்றனர். எந்த மதமும் ஒன்றை ஒன்று எதிர்ப்பதில்லை எல்லோரும் ஒரே குடும்பமாகவே உள்ளோம். அதை இந்த நூல் தெளிவாக உணர்த்துகிறது. இந்த பண்பாட்டு நெறி வளர வேண்டும்.
இந்தியா நமது நாடு நாம் எல்லோரும் இந்தியர்கள். காந்தி, நேரு, ஜின்னா சாஹிப் எல்லோருமே இந்திய விடுதலைக்காக ஒன்றாக உழைத்தவர்கள். பாகிஸ்தான் பிரிவினை ஏன் ஏற்பட்டது என்பதற்கு யார் ஒருவர் மீது மட்டும் குற்றம் சுமத்த முடியாது. அதை இன்றைக்கு அத் வானியும், ஜஸ்வந்த் சிங்கும் தெளிவு படுத்திவிட்டார்கள்.
இன்று உலக அரங்கில் இந்தியாவில் மட்டும்தான் சிறுபான்மையினர் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் உரிமைகளை அனுபவித்து வருகிறார்கள். அதைக் கூட அனு பவிக்க விடாமல் வகுப்பு வாத சக்திகள் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை வளர விடாமல் ஒவ்வொரு மதத்திலும் உள்ள நல்ல விஷயங்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். பல்சமய உரையாடல்கள், சமூக நல்லிணக்க கருத்தரங்கு கள் நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற நூல்கள் பள்ளி களில் வாசிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அருட்தந்தை அமலதாஸ் குறிப்பிட்டார்.
நாங்களும் சிறுபான்மையினர்தான்
ஆனால் உரிமை கேட்க தைரியமில்லை
நூலாசிரியர் வி.என்.சாமி ஏற்புரை
விடுதலைப் போரில் முஸ்லிம்கள் நூலாசிரியர் வி.என். சாமி ஏற்புரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,
இந்த நூலை 2001ல் நான் எழுத தொடங்கினேன். ஏழரை ஆண்டு காலம் ஆகியுள்ளது. நான் எழுதத் தொடங் கிய போது நூலின் தலைப்பு மட்டுமே என் கையில் இருந்தது. அதற்கான பொருள் எதுவும் இல்லை.
ஒரு ஆங்கில புத்தகத்தை பார்த்ததற்குப் பிறகுதான் இந்த தலைப்புக்கூட எனக்கு புலப்பட்டது. ஃபிரிடம், ஃபைட்டர்ஸ் ஆஃப் பாகிஸ்தான் என்ற நூலை படித்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
பாகிஸ்தான் கிடைப்பதற்கு மதன் மோகன மாலவியா, டாக்டர் மூஞ்சே போன்றோர் காரணம் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது. அதன் காரணமாகத்தான் நான் இந்த நூலை எழுதினேன். 300பக்கங்களில் முடிக்க திட்டமிட்டேன். அது எனக்கு மனநிறைவை தராததால் விரிவாக எழுதியுள் ளேன்.
அந்த நூலைப் பற்றி எல்லோரும் இங்கே பாராட்டிப் பேசினார்கள். நெய்யும் தொழிலில் பரம்பரையாக வந்தவன். எனக்கு தாய்மொழி தமிழல்ல. சவுராஷ்ட்டிரா எனது தாய்மொழி. நாங்களும் சிறுபான்மையினர்தான். மொழிவழிச் சிறுபான்மையினர். மிக மிக சிறுபான்மையி னர் அதனால் உரிமைகள் கேட்க தைரியம் வரவில்லை.
எனது அடுத்த வெளியீடாக ஆயுதம் ஏந்தி சுதந்திரப் பேராட்டத்தில் ஈடுபட்டோரின் சரித்திரத்தை அக்னி யுகமாக கொண்டு வரப்போகிறேன்.
எழுத்துலக பிரம்மா என்றால் அது கலைஞர்தான். கலைஞர் படித்த இலக்கியங்கள் அழியாது. அவர் புதல்வி திருமிகு கனிமொழி அவர்கள் இந்நூலை வெளியிடுவதும், நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக் கொள்வதும், பேராசிரியர் பெருந்தகை அதற்கு தலைமை ஏற்பதும் மிக மகிழ்ச்சியானது.
இவ்வாறு நூலாசிரியர் வி.என்.சாமி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment