அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Tuesday, February 23, 2010

41 இடங்களில் பொது தேர்வு பயிறிசி முகாம்-2 மாதத்தில் நடத்தி TNTJ மாணவர் அணி மீண்டும் ஓர் சாதனை

தமிழகத்தில் இதுவரை யாரும் செய்திராத கல்விசேவைகளை நமது TNTJ மாணவர் அணி அல்லாஹ்வுடைய மிக பெரிய கிருபையால் சிறப்பாக தமிழகம் முழுவதும் செய்துவருகின்றது, அல்ஹம்துலில்லாஹ். குறைந்த செலவில் நல்ல கல்வி பெற அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு தேர்வு துவங்குவதர்க்கு முன்னதாகவே தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? என்ற பொது தேர்வு பயிற்சி முகாமை தமிழகத்தில் 20 மாவட்டத்தில் 41 இடங்களில் நடத்தி உள்ளது. (இடங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது). கடந்த இரண்டு மாதங்களாக தேர்வுக்கு மாணவர்களை தயாராக்க TNTJ மாணவர் அணி சகோதரர்கள் மாநில முழுவதும் சுற்று பயணம் செய்து இத்தகைய சாதனையை செய்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.



திட்டமிட்டபடி மாணவ, மாணவிகளுக்கு, தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது? என்ற கையேடு இலவசமாக வங்கப்பட்டது. மேலும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது? என்ற வீடியோ உரையும் தயாரித்து நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டது. (தமிழகம் முழுவதும் பொது தேர்வு பயிற்சி முகாம் நடத்தபடும் என 4/12/09 அன்று TNTJ மாணவர் அணி உணர்வில் வெளியிட்ட அறிக்கை அட்டாச்செய்யபட்டுள்ளது).



தமிழகத்தில் எத்தனையோ அமைப்புகள், கல்வி அறகட்டளைகள் உள்ளன. யாரும் நம் அளவிற்க்கு (41 இடங்களில் ) பயிற்சி முகாம்களை நடத்தவில்லை, சில அமைப்புகள், அறக்கட்டளைகள் ஓரிரு இடங்களில் நடத்தின. மிக பெறிய அமைப்பு என தங்களை சொல்லிகொள்ளும் அமைப்புகள் கூட 5 அல்லது 6 இடங்களுக்கு மேல் நடத்த இயலவில்லை. அல்லாஹ்வுடைய மிக பெரிய கிருபையால் நமது TNTJ மாணவர் அணி இந்தகைய சாதனைகளை செய்யதுள்ளது. (இது வரை தமிழக்த்தில் 132 இடங்களில் TNTJ மாணவர் அணி கல்வி சேவை நிகழ்சிகளை நடத்தி உள்ளது குறிபிட்டதக்கது). நிகழ்சிகளை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.



பொது தேர்விற்க்கு இன்னும் சில நாள்களே உள்ளன, தேர்வு எழுதும் நமது சமுதாய மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என அல்லாஹ்விடம் துவா செய்யுமாரு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.



இன்ஷா அல்லாஹ் தேர்வுகள் முடிந்த பிறகு மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்ட என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற கல்வி வழிகாட்டும் நிகழ்சியை மாநிலம் முழுவது 80 இடங்களில் நடத்த நமது TNTJ மாணவர் அணி திட்டமிட்டுள்ளது என்பது குறிபிடதக்கது.



பணி சிறக்க அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுமாரு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்



-S.சித்தீக்.M.Tech

TNTJ மாணவர் அணி



பொது தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்ற 41 இடங்கள் (20 மாவட்டங்களில்)



வட சென்னை மாவட்டம்

1. புளியந்தோப்பு



காஞ்சி (மேற்கு) மாவட்டம்

2. தாம்பரம்



காஞ்சி (கிழக்கு) மாவட்டம்

3. கல்பாக்கம்



திருவள்ளுர் மாவட்டம்

4. பட்டாபிராம்

5. ஆழ்வார் திரு நகர்



கடலூர் மாவட்டம்

6. பரங்கி பேட்டை



விழுப்புரம் மாவட்டம்

7. கோட்டை குப்பம்



திருவன்ணாமலை மாவட்டம்

8. திருவண்னாமலை



தஞ்சாவூர்(வடக்கு) மாவட்டம்

9. சோழபுரம்

10. ஆவூர்



தஞ்சாவூர்(தெற்கு) மாவட்டம்

11. அம்மாப்பேட்டை



திருவாரூர் மாவட்டம்

12. திருவாரூர்

13. கொல்லாபுரம்

14. பொதகுடி

15. அடலங்குடி

16. திருத்துறைபூண்டி

17. வாழ்க்கை

18. கூத்தாநல்லூர்

19. அத்திக்கடை

20. மன்னார்குடி



நாகை(வடக்கு) மாவட்டம்

21. மயிலாடுதுறை



பெரம்பலூர் மாவட்டம்

22. பெரம்பலூர்



புதுக்கோட்டை மாவட்டம்

23. புதுகோட்டை

24. அம்மாபட்டினம்

25. அறந்தாங்கி

26. கிருஷ்னாச்சிபட்டணம்

27. முக்கன்னாமலைபட்டி

28. ஆர்.புது பட்டிணம்

29. ஆலங்குடி



இராமநாதபுரம் மாவட்டம்

30. இராம்நாட்

31. கீழக்கரை



கோவை மாவட்டம்

32. ஆத்துபாலம்

33. மேட்டுபாளையம்



திருப்பூர் மாவட்டம்

34. திருப்பூர்



காரைகால்

35. காரைகால்

36. TR பட்டினம்

37. நிரவி



நெல்லை மாவட்டம்

38. மேலப்பாளையம்



தூத்துக்குடி மாவட்டம்

39. கேம்லாபாத்

40. ஆராம்பன்னை



திண்டுக்கல் மாவட்டம்

41. பழனி

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template