அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Monday, February 8, 2010

திருமண பதிவு சட்டத்தில் விதி விலக்கு ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு தீர்மானம்

விருத்தாசலம் :
தமிழக அரசு அறிவித்துள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து இஸ்லாமியர்களுக்கு விதிவிலக்கு அளிக் கவேண்டும் என ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

விருத்தாசலம் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு கூட்டம் நவாப் பள்ளிவாசலில் நடந்தது.

நகர தலைவர் அப்துல்மஜீது தலைமை தாங்கினார். நாகூர்கனிஇ அபுபக்கர்இ பாஷா முன் னிலை வகித்தனர். கூட் டம் குறித்து செயலாளர் சபியுல்லாஹ் பேசினார். சுக்கூர்இ முஸ்தபாஇ யாசீன்இ அலங்கார்இ அப் துல் மஜீத்இ ஜவஹர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்த ஆண்டு மிலாதுநபி விழாவை ஆலடிரோடு நவாப் பள்ளிவாசலில் நடத்தி அனைவருக்கும் ஊர் விருந்து அளிப்பதுஇ அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஊக்கதொகை வழங்குவது தமிழக அரசு அறிவித் துள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து இஸ்லாமியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template