அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Monday, March 29, 2010

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக 14 ஆம் ஆண்டு பெருவிழா

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக 14 ஆம் ஆண்டு பெருவிழா ஏப்ரல் 2,3,ஆகிய தேதிகளில் அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது 02.04.2010. வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு தொடக்கவிழா நடைபெறுகிறது

 இலக்கியக் கழக தலைவர் முனைவர் அய்யூப் தலைமை வகிக்கிறார் ,பொதுச்செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் வரவேற்ப்புரையாற்றுகிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் தொடக்க உரையாற்றுகிறார் ,

இந்நிகழ்ச்சியில் அறிஞர் பெருமக்கள் பலரின் நூலினை தமிழக அமைச்சர் உபையதுல்லா வெளியிட்டு உரையாற்றுகிறார் அதனை தொடர்ந்து


இலக்கிய கழக மகளிர் பிரிவு தலைவர் பேராசிரியை சா.நசிம பானு தலைமையில் மகளிர் அரங்கம் நடைபெறுகிறது

ஆன்மிக அரங்கம்

சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் ஆன்மிக அரங்கிற்கு ஹாஜி.அ.அஹமத் பசீர் தலைமை தாங்குகிறார்,ஹாஜி கா.மு.ஜக்கரியா வரவேற்ப்புரையாற்றுகிறார்,ஹாஜி.ப.யூ.அய்யூப்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்கத் துறைச் செயலாளர் அல்ஹாஜ் .தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் ,ஆலிம் கவிஞர் ஹுசைன் முகமத் மன்பஈ ஆகியோர் சிறப்புரையற்றுகின்றனர் ,

அதனை தொடர்ந்து கவியரங்கம்,ஆய்வரங்கம்,பட்டிமன்றம் ஆகியன நடைபெறுகின்றன

நிறைவரங்கம்

இரவு 7 மணிக்கு நடைபெறும் நிறைவரங்குக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் வ.மு.செய்யது அஹமத் தலைமை தாங்குகிறார்,இலக்கியக் கழக தலைவர் முனைவர் அய்யூப் வரவேற்ப்புரையாற்றுகிறார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும்,இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக உலக ஒருங்கினைப்பாலருமான முனிருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ் கே.எம்.கதர் மொகிதீன் தமிழ் மாமணி ,சேவைச் செம்மல் ,மற்றும் சாதனையாளர் விருதுகளை சாதனையாளர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கு வழங்கி பாராட்டி சிறப்பிக்கிறார் ,

உலக தமிழ் பண்பாட்டுக்கழக தலைவர் அ.ரபியுதீன் ,பேராசிரியர் முகமத் பாரூக்,எஸ்.முகமத் அஸ்லம்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் பாராட்டுரை நிகழ்த்துகின்றனர்

நிறைவுப் பேருரை

.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும்,இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக உலக ஒருங்கினைப்பாலருமான முனிருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ் கே.எம்.கதர் மொகிதீன் நிறைவுப் பேருரையாற்றுகிறார்,
 
 மாநாட்டு தீர்மானங்களை இலக்கியக் கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் முன் மொழிகிறார் துணைத் தலைவர் முஹம்மத் தாஹா நன்றியுரையாற்றுகிறார்

Wednesday, March 24, 2010

துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை சிற‌ப்பு நிக‌ழ்ச்சி : பேராசிரிய‌ர் கே.எம்.கே. ப‌ங்கேற்பு

துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை சிற‌ப்பு நிக‌ழ்ச்சி : பேராசிரிய‌ர்


கே.எம்.கே. ப‌ங்கேற்பு



துபாய் : துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் சார்பில் தாய்ச்ச‌பையின்

62 ஆம் ஆண்டு துவ‌க்க‌ விழா ம‌ற்றும் பிறைமேடை மாத‌மிருமுறை இத‌ழ் வெளியீட்டு

விழா 25.03.2010 வியாழ‌க்கிழ‌மை மாலை ஈடிஏ அஸ்கான் தொழுகைக்கூட‌த்தில் (

அஸ்கான் ஹ‌வுஸ் ‍ மூன்றாவ‌து த‌ள‌ம் ) ந‌டைபெற‌ இருக்கிறது.



இந்நிக‌ழ்ச்சியில் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ த‌மிழ்மாநில‌ இந்திய‌ யூனிய‌ன்

முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் முனீருல் மில்ல‌த் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர்

மொகிதீன் ( முன்னாள் எம்.பி. ) அவ‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்புச்

சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருக்கிறார்.



இந்நிக‌ழ்வில் அனைத்து ஜ‌மாஅத்தார்க‌ளும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌

கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.



மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு : 050 51 96433 / 050 4753052 / 050 67 65 812

Friday, March 19, 2010

வேலைவாய்ப்பு செய்தி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பான சகோதர சகோதரிகளுக்கு,கீழ் இணைத்துள்ள வேலை வாய்ப்புகளுக்கு நேரடி இன்டர்வியூ நடைபெறுகிறது. மேலும் சென்னையிலும் 18 மற்றும் 20 மார்ச் 2010 தேதிகளில் நடைபெறுகிறது. எனவே இந்த துறையில் உள்ள நம் சகோதரர்களுக்கு இச் செய்தியை அறிவித்து இந்தியாவிலேயே நல்ல வேலைவாய்ப்பை அமைத்துள்ள கொள்ள அல்லாஹ்விடம் உதவி தேடுவோம். இது நேரடி இன்டர்வியூ மட்டும் தான் இது சம்மந்தமான வேறு எந்த விபரங்கள் வேண்டுமாலும் இன்டர்வியூவில் கலந்து கொண்டு விளக்கம் கேட்கவும்.
.
My Career: TCS-BYB Walk-in Drive - Across India -20,21-March-2010
.

பேராசிரியர். Dr. அப்துல்லாஹ் (Dr .PERIYAR DASAN) அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு விழா

Monday, March 8, 2010

நீடூரில் மிஸ்பாஹி உல‌மா பேர‌வையின் 17 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்ட‌ம்

நீடூர் : நீடூர் நெய்வாச‌ல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அர‌பிக் க‌ல்லூரியில் மிஸ்பாஹி உலமா பேர‌வையின் பொதுக்குழுக் கூட்ட‌ம் இன்ஷா அல்லாஹ் வருகிற‌ 16.03.2010 செவ்வாய்க்கிழ‌மை காலை 9.30 ம‌ணிக்கு ந‌டைபெற‌ இருக்கிற‌து.


இக்கூட்ட‌த்தில் மிஸ்பாஹி உலமாக்க‌ள் அனைவ‌ரும் ப‌ங்கு பெற‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். மேல‌திக‌ தொட‌ர்புக்கு 94423 19264

Sunday, February 28, 2010

இலங்கையில் முஸ்லீம் லீக் தலைவர்களுக்கு வரவேற்பு

இன்று காலை முதல் இரவு வரை இலங்கை நாட்டின் வெலிகமை நகரில், அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா சார்பில் மீலாத் பெருவிழா நடைபெறுகிறது.



இலங்கை - இந்திய மார்க்க அறிஞர்களும், சமுதாய அறிவாளர்களும் பங்கேற்று உரையாற்றவுள்ள இவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணிச் செயலாளர் மௌலானா தளபதி ஷஃபீகுர் ரஹ்மான், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுவதோடு, குத்புல் ஃபரீத், ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமீ (ரலி) அவர்களின் அறபு - தமிழ் அகராதி நூலை பேராசிரயர் கே.எம்.கே, வெளியிடுகிறார்.



காயல்பட்டினம் மவ்லவி எச்.ஏ. அஹமது அப்துல் காதிர் ஆலிம், சென்னை மவ்லவி ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, திருச்சி மவ்லவி இப்ராஹீம் ரப்பானி, மவ்லவி ஹுசைன் முஹம்மது மன்பஈ ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
.
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template