அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Monday, March 29, 2010

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக 14 ஆம் ஆண்டு பெருவிழா

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக 14 ஆம் ஆண்டு பெருவிழா ஏப்ரல் 2,3,ஆகிய தேதிகளில் அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது 02.04.2010. வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு தொடக்கவிழா நடைபெறுகிறது

 இலக்கியக் கழக தலைவர் முனைவர் அய்யூப் தலைமை வகிக்கிறார் ,பொதுச்செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் வரவேற்ப்புரையாற்றுகிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் தொடக்க உரையாற்றுகிறார் ,

இந்நிகழ்ச்சியில் அறிஞர் பெருமக்கள் பலரின் நூலினை தமிழக அமைச்சர் உபையதுல்லா வெளியிட்டு உரையாற்றுகிறார் அதனை தொடர்ந்து


இலக்கிய கழக மகளிர் பிரிவு தலைவர் பேராசிரியை சா.நசிம பானு தலைமையில் மகளிர் அரங்கம் நடைபெறுகிறது

ஆன்மிக அரங்கம்

சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் ஆன்மிக அரங்கிற்கு ஹாஜி.அ.அஹமத் பசீர் தலைமை தாங்குகிறார்,ஹாஜி கா.மு.ஜக்கரியா வரவேற்ப்புரையாற்றுகிறார்,ஹாஜி.ப.யூ.அய்யூப்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்கத் துறைச் செயலாளர் அல்ஹாஜ் .தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் ,ஆலிம் கவிஞர் ஹுசைன் முகமத் மன்பஈ ஆகியோர் சிறப்புரையற்றுகின்றனர் ,

அதனை தொடர்ந்து கவியரங்கம்,ஆய்வரங்கம்,பட்டிமன்றம் ஆகியன நடைபெறுகின்றன

நிறைவரங்கம்

இரவு 7 மணிக்கு நடைபெறும் நிறைவரங்குக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் வ.மு.செய்யது அஹமத் தலைமை தாங்குகிறார்,இலக்கியக் கழக தலைவர் முனைவர் அய்யூப் வரவேற்ப்புரையாற்றுகிறார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும்,இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக உலக ஒருங்கினைப்பாலருமான முனிருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ் கே.எம்.கதர் மொகிதீன் தமிழ் மாமணி ,சேவைச் செம்மல் ,மற்றும் சாதனையாளர் விருதுகளை சாதனையாளர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கு வழங்கி பாராட்டி சிறப்பிக்கிறார் ,

உலக தமிழ் பண்பாட்டுக்கழக தலைவர் அ.ரபியுதீன் ,பேராசிரியர் முகமத் பாரூக்,எஸ்.முகமத் அஸ்லம்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் பாராட்டுரை நிகழ்த்துகின்றனர்

நிறைவுப் பேருரை

.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும்,இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக உலக ஒருங்கினைப்பாலருமான முனிருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ் கே.எம்.கதர் மொகிதீன் நிறைவுப் பேருரையாற்றுகிறார்,
 
 மாநாட்டு தீர்மானங்களை இலக்கியக் கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் முன் மொழிகிறார் துணைத் தலைவர் முஹம்மத் தாஹா நன்றியுரையாற்றுகிறார்

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template