அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Tuesday, February 23, 2010

பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள்...! டாக்டர் K V S ஹபீப் முஹம்மத் உரை

பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள்...!
 டாக்டர் K V S ஹபீப் முஹம்மத்
வீடியோ உரை

41 இடங்களில் பொது தேர்வு பயிறிசி முகாம்-2 மாதத்தில் நடத்தி TNTJ மாணவர் அணி மீண்டும் ஓர் சாதனை

தமிழகத்தில் இதுவரை யாரும் செய்திராத கல்விசேவைகளை நமது TNTJ மாணவர் அணி அல்லாஹ்வுடைய மிக பெரிய கிருபையால் சிறப்பாக தமிழகம் முழுவதும் செய்துவருகின்றது, அல்ஹம்துலில்லாஹ். குறைந்த செலவில் நல்ல கல்வி பெற அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு தேர்வு துவங்குவதர்க்கு முன்னதாகவே தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? என்ற பொது தேர்வு பயிற்சி முகாமை தமிழகத்தில் 20 மாவட்டத்தில் 41 இடங்களில் நடத்தி உள்ளது. (இடங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது). கடந்த இரண்டு மாதங்களாக தேர்வுக்கு மாணவர்களை தயாராக்க TNTJ மாணவர் அணி சகோதரர்கள் மாநில முழுவதும் சுற்று பயணம் செய்து இத்தகைய சாதனையை செய்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.



திட்டமிட்டபடி மாணவ, மாணவிகளுக்கு, தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது? என்ற கையேடு இலவசமாக வங்கப்பட்டது. மேலும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது? என்ற வீடியோ உரையும் தயாரித்து நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டது. (தமிழகம் முழுவதும் பொது தேர்வு பயிற்சி முகாம் நடத்தபடும் என 4/12/09 அன்று TNTJ மாணவர் அணி உணர்வில் வெளியிட்ட அறிக்கை அட்டாச்செய்யபட்டுள்ளது).



தமிழகத்தில் எத்தனையோ அமைப்புகள், கல்வி அறகட்டளைகள் உள்ளன. யாரும் நம் அளவிற்க்கு (41 இடங்களில் ) பயிற்சி முகாம்களை நடத்தவில்லை, சில அமைப்புகள், அறக்கட்டளைகள் ஓரிரு இடங்களில் நடத்தின. மிக பெறிய அமைப்பு என தங்களை சொல்லிகொள்ளும் அமைப்புகள் கூட 5 அல்லது 6 இடங்களுக்கு மேல் நடத்த இயலவில்லை. அல்லாஹ்வுடைய மிக பெரிய கிருபையால் நமது TNTJ மாணவர் அணி இந்தகைய சாதனைகளை செய்யதுள்ளது. (இது வரை தமிழக்த்தில் 132 இடங்களில் TNTJ மாணவர் அணி கல்வி சேவை நிகழ்சிகளை நடத்தி உள்ளது குறிபிட்டதக்கது). நிகழ்சிகளை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.

முஸ்லிம் லீக் கடலூர் நகர நிர்வாகிகள் தேர்தல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடலூர் நகர நிர்வாகிகள் தேர்தல் 22-02-2010.அன்று நடைபெற்றது இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் மௌலான தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஏ.கே.ஏ.ரஹ்மான் தலைமை வகித்தார் தேர்தல்


மேற்பார்வையாளர் டி.கப்பார் கான்,பட்டதாரிகள் அணி அமைப்பாளர் ஏ.ரஷித் ஜான் ,மாவட்ட தலைவர் எஸ்.ஏ.அப்துல் கப்பார் மற்றும் செயலாளர் ஏ.சுக்கூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கடலூர் நகர செயலாளர் எஸ்.முஹம்மது இஸ்மாயில் முன்னதாக அனைவரையும் வரவேற்றார் கடலூர் நகர தலைவர் ஜபார் ,பொருளாளர் எம்.ஷரிப் ,லால்பேட்டை ஏ.எஸ்.அஹமத் மற்றும் கடலூர் நகர செயல் வீரர்கள் மகளிரணி

சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tuesday, February 16, 2010

மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளிகூடங்கள் – மாயையும், தீர்வும்

பெரும்பாலான பெற்றோர்கள் தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணியிடம் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில பள்ளிகள் இருகின்றன, இங்கு இடம் கிடைப்பது மிக மிக கடினம், இடம் கிடைத்தாலும் கல்வி கட்டணம் மிக மிக அதிகம்.
.

Tuesday, February 9, 2010

பிப்ரவரி 14 -கற்பு கொள்ளையர் (காதலர்) தினம்- TNTJ மாணவர் அணி மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம்

பிப்ரவரி 14 - கற்பு கொள்ளையர் தினத்தில் நடக்கும் அனாச்சாரங்களையும், சமூக சீர்கேடுகளையும் கலைய TNTJ மாணவர் அணி சார்பாக மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யபட உள்ளது (இன்ஷா அல்லாஹ்). பிரவரி 14 காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக வருட வருடம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த சமூக சீர்கேட்டை மீடியாக்கள் நியாப்படுத்தியும், அரசு மவுனமாக வேடிக்கைபார்த்து கொண்டும் இருக்கின்றது, இந்த சமூக சீர்கேட்டில் இருந்து இளைஞர்களையும், இளம் பெண்களையும் மீட்டு எடுக்க நமது TNTJ மாணவர் அணி காதல் என்ற போர்வையில் நடக்கும் சமூக சீர்கேட்டின் விளைவுகளை இளைஞர்களுக்கும் , இளம் பெண்களுக்கும் அறிவுருத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது உள்ளது இன்ஷா அல்லாஹ்.

Monday, February 8, 2010

விடுதலைப்போரில் முஸ்லிம்கள்!!

தினமணி நாளிதழின் தலைமை செய்தியாளர் வி.என்.சாமி எழுதி மதுரை பாவலர் பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஹவிடுதலைப் போரில் முஸ்லிம்கள் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை பிரஸ் கிளப் அரங்கில் 7.2.2010 ஞாயிறு மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

1112 பக்கங்களில் குஞ்சாலி மரைக்காயர் தொடங்கி நேதாஜிக்கு தொண்டு செய்த அமீர் ஹம்சாவரை விடு தலைப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பு விளக்கமாக இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

திருமண பதிவு சட்டத்தில் விதி விலக்கு ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு தீர்மானம்

விருத்தாசலம் :
தமிழக அரசு அறிவித்துள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து இஸ்லாமியர்களுக்கு விதிவிலக்கு அளிக் கவேண்டும் என ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

விருத்தாசலம் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு கூட்டம் நவாப் பள்ளிவாசலில் நடந்தது.

நகர தலைவர் அப்துல்மஜீது தலைமை தாங்கினார். நாகூர்கனிஇ அபுபக்கர்இ பாஷா முன் னிலை வகித்தனர். கூட் டம் குறித்து செயலாளர் சபியுல்லாஹ் பேசினார். சுக்கூர்இ முஸ்தபாஇ யாசீன்இ அலங்கார்இ அப் துல் மஜீத்இ ஜவஹர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்த ஆண்டு மிலாதுநபி விழாவை ஆலடிரோடு நவாப் பள்ளிவாசலில் நடத்தி அனைவருக்கும் ஊர் விருந்து அளிப்பதுஇ அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஊக்கதொகை வழங்குவது தமிழக அரசு அறிவித் துள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து இஸ்லாமியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template