அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Tuesday, February 17, 2009

stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிசிசிஸ்

<பீவீஸ் ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ5.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ5.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" />ணீ>தமக ன் த யம்??பீவீஸ்><பீவீஸ் ணீறீவீரீஸீ="றீமீயீt">தமிழகம் எங்குபீவீஸ்><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" />ணீ>மனிதஜீ><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ3.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ3.யிறிநி" ஜீ><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ1.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ1.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" />ணீ>ஜீ><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ2.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ2.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" />ணீ> முஸ்லிம்கள் ஜீ><ஜீ><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" /><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" /><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" / ஜீ><ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ ஆரம்பிக்கப்ட <ஜீ ணீறீவீரீஸீ="நீமீஸீtமீக்ஷீ"><ணீ லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீறீ4.யிறிநி" தீஷீக்ஷீபீமீக்ஷீ="0" />மனத லீக்ஷீமீயீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீமீறீணீவீஸீணீsணீக்ஷீ.யிறிநி"><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/அட்டைக்

Wednesday, February 11, 2009

பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட தப்லீக் பிரமுகர் புளியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் தமிழக அரசு உதவி

கொலை செய்யப்பட்ட புளியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த 2 லட்ச ரூபாய் நிதியை அவரது மனைவி சவுதால் பீவியிடம் நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ் வழங்குகிறார். அருகில் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி செயலாளர் புளியங்குடி எம். காதர் மொகிதீன்.

திருநெல்வேலி, பிப்.11-
புளியங்குடியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 09-02-2000 அன்று தப்லீக் ஜமாஅத் பணி செய்வதற்காக பாளையங்கோட்டை கிரசன்ட் நகர் பள்ளி வாசலில் இருந்தபோது வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் கொல்லப்பட்டார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது இவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 2 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்கியது. இந்த வழக்கு தொடர்பாக இன்றைய டி.ஐ.ஜி.யும், அப்போதைய எஸ்.பி.யும் ஆன கண்ணப்பன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டு அப்துல் ரஷீத் சொந்த காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டதாகவும், கொலையாளி அவர் மகன்தான் என்றும் அறிவித்து அவரது மகன் மைதீன் பிச்சையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனைத் தொடர்ந்து அரசு அறிவித்த நிவாரணத் தொகை திரும்பப் பெற்றது. இச் சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அன்றைய மாநிலத் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிப் அன்றைய மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் முதவ்வர் கலைஞரை நேரில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக சி.பி. சிஐ.டி. விசாரணை கோரி னர்.. பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு முஸ்லிம் லீக் பிரமுகர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். கோதர் மொகிதீன், வி.எஸ். டி. சம்சுல் ஆலம் மற்றும் காயல் மகபூப், எல்.கே.எஸ். மீரான் முகைதீன் உள்ளிட்டோர் சென்று சிறை வைக்கப்பட்டிருந்த மொய்தீன் பிச்சையிடம் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்.

உண்மைகளை தெரிந்துகொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இப் பிரச்சினையில் நீதி வழங்க கோரி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மாநாடுகளிலும், செயற்குழு - பொதுக் குழு கூட்டங்களிலும் தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு அப்துல் ரஷீத் கொலைக்கும், அவரது மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முடிவு செய்யப்பட்டு சிறையிலிருந்த அவர் மகன் மொய்தீன் பிச்சை விடுவிக்கப்பட்டார். அவர் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்ட நிவாரணத் தொகை 2 லட்ச ரூபாயை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

சமீபத்தில் புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டங்கள் நடத்தப்பட்டு இது தொடர்பான கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வைக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அரசு அப்துல் ரஷீத் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிதி வழங்கியது. 09-02-2009 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. பிரகாஷ் இந்த நிதியினை அப்துர் ரஷீத்தின் மனைவி சவுதால் பீவியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன், மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி அமைப்பாளர் புளியங்குடி எம். காதர் மொகிதீன் ஆகியோர் உடன் இருந்தனர். அரசு வேலை வழங்கவேண்டுகோள்கொலை வழக்கில் அநி யாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மொய்தீன் பிச்சைக்கு நீதி கிடைக்கும் வகையிலும் காலதாமத மாக இந்த உதவி வழங்கப்பட்டதை கருத்தில் கொண்டும் மொய்தீன் பிச்சைக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது.
.

முஸ்லிம் லீகின் அவாவும் - துஆவும் இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும்-

கடலூர், பிப்.11-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஆசையும் - பிரார்த்தனையும் இலங்கை யில் அமைதி திரும்ப வேண்டும். கலைஞர் பூரண நலம் பெறவேண்டும் என்பதுதான் என தமிழ் நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க துறை செயலாளர் மவ்லானா தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் உரையாற்றினார்.

கடலூரில் இலங்கை தமிழர்களுக்காக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது-இலங்கையில் அப்பாவி தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்படுவதையும், போரின் மரபையும், வரம்பையும் மீறி சின்னஞ் சிறு குழந்தைகள் கொல்லப்படுவதையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவரும், மத்திய இணை அமைச்சருமான இ.அஹமது சாஹிப் அவர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொதுச் செயலாள ரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி,யும் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அரசியல்ரீதியாகத்தான் தீர்க்க முடியும். தீர்வுகாண முடியும் என்று தெளிவாக சொல்லி தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் அனைத்து வகையான முயற்சிகளுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவை வழங்கி வரும் என்று சொல்லியுள்ளனர்.

நம் நாட்டிலுள்ள சில தலைவர்கள் தேர்தலுக்காக இலங்கைப் பிரச்சினையை அரசியலாக்கி வருகிறார்கள். ஆனால், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும், மேம்பாடுகளுக்காகவும் அரும்பாடுபட்டு வருகிறார்கள். உடல் நலம் குன்றிய நிலையிலும், மருத்துவமனையிலும் இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பெருந்தலைவர் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ. அஹமது சாஹிப், அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., ஆகியோர் முதல்வர் கலைஞரை மருத்துவ மனையில் சந்தித்து அவர் பூரண நலம் பெற வேண்டும் என்று வாழ்த்தி வந்தார்கள்.உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் மருத்துவமனையிலும் முதல்வர் ஆற்றி வரும் சேவையை எங்கள் தலைவர்கள் நெஞ்சுருக பாராட்டினார்கள். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படு வதை நிறுத்த வேண்டும். உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற்று நலமுடன் வாழ்ந்து நமக்கும், நாட்டுக்கும் பணி செய்திட பிரார்த்திக்கின்றோம்.

இவ்வாறு தளபதி ஷபீகுர் ரஹ்மான் உரை யாற்றினார்.கண்டன ஆர்ப்பாட்டத்திலும் பொதுக் கூட்டத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார் ஹாஜியார், மாவட்ட துணைத் தலை வர்களான லால்பேட்டை கே.ஏ. முஹம்மது, மங்களம்பேட்டை அப்துர் ரஹ்மான், கடலூர் கமாலுத்தீன், மாவட்டச்செயலாளர் ஏ. சுக்கூர், துணைச் செயலாளர்கள் லால்பேட்டை கே.ஏ. அமானுல்லா, விருத்தாசலம் லியாகத் அலி, அப்துல் மஜீத், நெல்லிக்குப்பம் ராஜா ரஹிமுல்லா, மாநில பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷீத்கான், மாவட்ட இளைஞர் அணை அமைப்பாளர் முஸ்தபா, கடலூர் நகரத் தலைவர் அக்பர் அலி, செய லாளர் இஸ்மாயில், பொருளாளர் ஷரீப், மாவட்ட பொருளாளர் மங்களம்பேட்டை ஹபீபுர் ரஹ்மான், லால்பேட்டை நகரச் செயலாளர் முஹம் மது ஆசிப், இளைஞர் அணிச் செயலாளர் சல்மான் மற்றும் மாவட்டம் முழுவதிலுமிருந்தும் முஸ்லிம் லீக் தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

உடலில் முதுகுவலியோடும் - உள்ளத்தில் இலங்கை வலியோடும் விமர்சனங்களை தாங்கி தமிழர்களுக்காக உழைக்கின்றவர் கலைஞர்

திருவள்ளுர், பிப்.10-
உடலிலே முதுகுவலியோடும் - உள்ளத்தில் இலங்கை வலியோடும் விமர்சனங்களை தாங்கி தமிழர்களுக்காக உழைக் கின்றவர் கலைஞர் என்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது உரை யாற்றினார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை சார்பில் திருவள்ளுரில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் உரை யாற்றுகையில் அவர் பேசியதாவது-சமீபத்தில் இலங்கை தமிழர் படுகொலை பிரச்சினை உக்கிரமானபோது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து அந்த இனப்படு கொலை யைத் தடுத்து நிறுத்த இங்கிருந்து ஒரு மித்த குரல் கொடுக்க ஓரணியில் திரளக் கூடாதோ என்று பத்திரிகை வாயிலாக கவிதை ஒன்று எழுதி அழைத்தார்.

அதற்கு ஆதரவு தெரிவித்து நான் எழுதிய ஒரு கவிதையை இந்த மேடையில் எங்கள் இயக்கத்தின் சார்பாக அரங்கேற்றுகிறேன்.

ஓரணியில் திரண்டிடுவார் உலகத்து தமிழர்க ளெல்லாம் பேரணியாய் கலைஞர் தம் தலைமை ஏற்று தாரணியை மீட்டு வரும் தமிழர் கூட்டம் ஊர் அணியை அமைத்தவரே தமிழகத்தில் யார் அணியும் ஜெயிக்காது நீரே வெல்வீர்.உடலிலே முதுகுவலியோடும் - உள்ளத்திலே இலங்கை வலியோடும் உடல் தாங்குகிறதோ இல்லையோ எதிர்க்கட்சிகளின் மோசமான விமர்சனங்களை உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டும். இலங்கைத் தமிழர் களின் வாழ்வு பள்ளமாகி விட என உடல் உள்ள வேதனையோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழினத் தலைவர் கலைஞருக்கு இந்த கூட்டத்தின் வாயிலாக தெரியப் படுத்துகிறேன்.

இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவான அண்ணன் - தம்பிகள், தாய்மார்கள், சகோதரிகள், அப்பா - பிள்ளைகள் நமது தமிழினம் அழிந்து கொண் டிருக்கிறது. இந்த அவலமான சூழ்நிலையில் தமிழகத்தில் கட்சி மாச்சாரியங்களையெல்லாம் மறந்து நாமெல்லாம் தமிழர்கள் என்ற ஒருமித்த உணர்வோடு செயல்பட வாருங்கள் என அழைக்கும் கலைஞர் அவர்களது பரந்து விரிந்த அழைப்பு என்பது இலங்கை தமிழர் களை மட்டுமல்ல உலகின் எல்லாப் பகுதியிலும் வாழ்கின்ற தமிழர்களுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு தருவதாகும்.

நாம் பிரிந்து நின்றால் இந்த பாதுகாக்கும் செயலை வலிமையாக செய்ய இயலாது. அவ்வாறு செய்வது நம்மை நாமே பல வீனப்படுத்தி தமிழர்களை பாதுகாக்கும் செயலையும் நம்மை செய்யவிடாது செய்துவிடும் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தி ஒருங்கிணைந்து போராடவே இந்த இலங்கை தமிழர் நல உரிமை பேரவை நோக்கமாக கொண்டு பாடுபடுகிறது.

உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர், மூதறிஞர் கலைஞர் அவர்களது தலைமையில் முடிவெடுக்கப்பட்டு முயற்சிகளை மேற்கொள்கின்ற இது சம்பந்தமான அனைத்து செயல்களிலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அருந்தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரிய பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர்களது வழிகாட்டுத லில் இயங்கும் இயக்கத்தை சேர்ந்த நாங்கள் அனைவரும் மனிதச்சங்கிலி போராட்டம், பேரணி, பொதுக்கூட்டம் அனைத் துக் கட்சிகளின் கூட்டம் என்று எல்லா நடவடிக்கைகளிலும் நாடு தழுவிய அள வில் கலந்து கொண்டு வலிமை சேர்த்து வருகின்றோம்.

தலைவர் கலைஞர் அவர்களது வழித் தடத்தை கிஞ்சித்தும் பிசகாது இந்த பிரச்சினை நடைபோட்டு வருகிறோம். இதுபோல் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் ஒன்று திரள வேண்டும் என மிக்க பணிவன்போடு எங்கள் இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்று பாடினார்கள். அது என்ன குணம், தமிழன் உயிர் பிச்சைக் கேட்டு யாரிடமும் தாழ மாட்டான்.

கடைசிவரை எதிர்த்து போராடுவான். அதுபோல் தன்னை நம்பி வந்தவரை தாழ்த்தவும் மாட்டான் - வாழ்த்துவான், வாழவைப்பான். அதனால்தான் ஹவந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று தமிழர்களை உள்ளடக்கிய தாய் தமிழகம் நம்மு டையது. அப்படிப்பட்ட தமிழனை இலங்கை அரசு அழிப்பது நியாயமா என்பதைத்தான் நமது தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு கோஷமாக்கித் தந்துள்ளார்கள். இதைத்தான் நாமக்கல் கவிஞர் ஹதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேநம்மை அழிக்கும் ராட்சசேதமிழன் மேலே கையை வச்சேநிறுத்த மாட்டோம் எங்கள் பேச்சே என தமிழக மக்கள் எச்சரித்து - உச்சரித்து இந்த கூட்டத்தின் மூலம் தெரிவிக்கின்றோம்.இலங்கைத் தமிழர் இன படுகொலையை நிறுத்த தொடர்ந்து தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களது தலைமையிலும், தமிழின தளபதி அவர்களோடு அணி வகுத்து முஸ்லிம் லீக் தலைவர் முனீருல் மில்லத் அவர்களை பின்தொடர்ந்து நாமெல்லாம் அயராது பாடுபடுவோம் என்பதை உறுதிப்படுத்தி இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும் வரை ஓயமாட்டாம். நிலையான அமைதிக்கு வழி காண்போம்! தடுப்போம்! தடுப்போம்!

இனப் படுகொலையை தடுப்போம்! என்ற தலைவர் கலைஞர் அவர்களது வாய் - மெய் மொழியை வழிமொழிந்து பாவேந்தர் பாரதிதாசன் பாடிய எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு - என்ற சங்கநாதம் நம் காதுகளில் ஒலிக்கட்டும் என கூறி முடிக்கின்றேன். இவ்வாறு வடக்கு கோட்டையார் வ.மு. செய் யது அஹமது உரையாற்றினார்.

Monday, February 9, 2009

வளைகுடாவாழ் சகோதரர்களின் அவலநிலைகள்

தடைகளை உடைத்து சிகரத்தைத் தொடுவோம்

َلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكةُ
போர் தந்திரம் வகுத்து எதிரிகளை விரட்டியடித்து வெற்றிவாகை சூடுவதில் ரோமானியப் பேரரசை வீழ்த்தி இந்தியாவை ஆக்ரமித்த பரங்கியர்களை விரட்டி அடித்ததுவரை உலக வரலாற்றில் முஸ்லீம்கள் அன்று தனித்து விளங்கினர்.

இந்திய மண்ணை ஓர் இந்தியனைத் தவிர வோறொருவன் ஆளத் தகுதியற்றவன் என்று நினைத்த மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்கள் அண்ணியர்களை விரட்டியடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தினர்.

அவ்வாறு அன்னியர்களை விரட்டியடிப்பதில் அதிக கவனம் செலுத்தியவர்களால் பாரதம் முழுவதிலும் பரந்து கிடந்த தங்களின் பெரும்பான்மை சந்ததியினரின் எதிர்காலத்தைப் பற்றி அறவே சிந்திக்கத் தவறி விட்டனர்.

ஆனால் ஓர் இனம் மட்டும் தங்களுடைய சந்ததியனருடைய எதிர்காலம் பற்றி ஆழ்ந்து சிந்தித்தது
நாமே வந்தேறிகளாக இருப்பதால் இந்த பூமியை ராமன் ஆண்டால் என்ன ? ராவணன் ஆண்டால் என்ன ?

ஆட்சி அரியணையின் ஓரத்தில் நமக்கோர் இடம் வேண்டும் !
நமக்குப் பின் நமது சந்ததியினருக்கு முழு ஆட்சி பீடமும் வேண்டும் என்று சிந்தித்தது.

ஒரு புறம் உச்சி வெயிலில் சுதந்திரப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போதே கொள்ளைப் புறத்தில் நள்ளிரவில் வெள்ளையர்களுக்கு காட்டிக் கொடுக்கும் கள்ள அமர்வில் அந்த கயமைக் கும்பல் அமர்ந்து சதி ஆலோசனையில் ஈடுபட்டது.

சுதந்திரப் போராட்ட முஸ்லீம் வீரர்களுடைய முகாம்களையும், பதுங்குக் குழிகளையும் ஆக்ரமிப்பாளர்களுக்கு காட்டிக்கொடுத்து அவர்களுடைய சிம்மாசனத்தை தாங்கிப் பிடிக்கும் தூத்துத் தூக்கிகளாக மாறி அன்றே அவர்களின் அரியனையின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டார்கள்.

அதனால் இன்று சுதந்திர இந்தியாவின் முழு அரியணையையும் காட்டிக் கொடுத்தவர்களுடைய வாரிசுகள் கைப்பற்றிக் கொண்டனர்.

உயிரைப் பணயம் வைத்துப்போராடி தாய் மண்ணிலிருந்து ஆக்ரமிப்பாளர்களை விரட்டியடித்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் சொந்த நாட்டின் ப்ளாட்பாரங்களில் பெட்டிக்கடை வியாபாரிகளானார்கள் !

இந்த நேரத்தில் இதை ஏன் நாம் நிணைவுப் படுத்துகின்றோம் ?

இது ஆகஸ்ட் 15ம் அல்ல !
ஜனவரி 26ம் அல்ல !

ஆனால் மார்ச் 2ம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ் 2 க்கான முழு ஆண்டு பரீட்சை தொடங்கவிருப்பதால் தொழில் நுட்ப கல்வி கற்பதற்காக விழிப்புணர்வூட்டுகிறோம்.

கடந்த கால முஸ்லீம் சமுதாயத்துடைய உச்சகட்டப் படிப்பு என்பது எஸ்.எஸ்.எல்.சி வரை, அல்லது ப்ளஸ் 2 வரை தான் அதற்கு மேல் போக மாட்டார்கள்.

இனிவரும் காலங்களில் அதற்கு மேலும் படிப்பைத் தொடர வேண்டும் படிப்பின் சிகரத்தை எட்ட வேண்டும் பின் வாங்கக் கூடாது என்பதற்காக இந்நேரத்தில் இதை நாம் நிணைவுப் படுத்துகிறோம்.

நாம் பிறந்த மண்ணிலேயே மற்ற சமுதாயத்தினர் அரசுத் துறைகளில் வேலை செய்து கைநிறையப் பொருளீட்டி தனது குடும்பத்தினருடன் நிம்தியாக வாழ்வது போல் நாமும் நம்முடைய வாழ்வை அவர்களைப் போல் சுதந்திரமாக அமைத்துக் கொள்வதற்காக கல்வி கற்று அரசாங்க உத்தியோகத்தில் இடம் பிடிப்பதற்காக எத்தனையோ முறை அறவழிப் போராட்டங்கள் செய்துப் பார்த்தும் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகி விட்டது. கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலையில் உள்ளது.

ஆள்வோருடைய செவிப்பறைகளைத் தட்டுவதைப்போல் அதை விட இன்னும் செவிலில் அறைந்தாற் போல் சச்சார் கமிட்டி தனது அறிக்கையை முஸ்லீம்கள் கல்வி அறிவிலும், அரசாங்க உத்யோகத்திலும் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்று உரக்கக் கூறியும் அது அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டது.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த முஸ்லீம்களாகிய நாம் அயல்நாட்டில் பிழைப்புத் தேடித் திறியும் சமுதாயமாகி விட்டோம். நம்முடைய நிலமை இது தான் என்று தெள்ளத் தெளிவாக ஆனப்பிறகு அதிலாவது முறையாக ஏன் கால் ஊண்டக் கூடாது ?

படிப்பறிவில்லாமலும்> கைத்தொழில் கற்காமலும் அயல்நாட்டிற்கு பிழைப்புத் தேடிச் செல்லும் நம் சமுதயாத்தின் நிலை என்னத் தெரியுமா ?

ஆடு, மாடுகளை மேய்ப்பவர்களாகவும்>,
விவசாயிகளாகவும்,
ரோடு போடுகின்றவர்களாகவும்,
ரோடு கூட்டுகின்றவர்களாவும்,
கார் கழுவுகின்றவர்களாகவும்,
கட்டடம் கட்டுவதற்காக கற்களை சுமப்பவர்களாகவும்>,
சந்தைகளில்> மார்கெட்களில் லோடிங்> அன் லோடிங் செய்பவர்களாகவும்.

கால் நூற்றாண்டுகளைக் கடந்து அரை நூற்றாண்டுகளுக்கு மத்தியில் இளமையைத் தொழைத்து முதுமையை ஈன்று தாயகம் திரும்புகினற்னர்
இதில் இன்னும் கொடுமை என்னத் தெரியுமா ?

இத்தனை ஆண்டுகள் கடந்து தாயகம் திரும்பும் பலருக்கு சொந்த வீடு இருக்காது.

வருடங்கள் ஓடிக்கொண்டே இருக்கும் இளமை தேய்ந்து கொண்டே செல்லும் கடமைகள் முடிவதில்லை.

இதெற்கெல்லாம் என்னக் காரணம் ?
படிக்காமல் அரபு நாடுகளுக்கு வேலைத் தேடி வந்து மிகவும் குறைந்த சம்பளத்தில் லேபர் வேலையில் சேருவதால் லடசக் கணக்கில் செலவு செய்து வந்தக் கடனையும் சீக்கிரத்தில் அடைக்க முடிவதில்லை, குடும்பத்திற்கான அடிப்படை கடமைகளையும் செய்து முடிக்க முடிவதில்லை. ஆனால் முருக்கேறிய வாலிபப் பருவம் சிறுது, சிறிதாக கரைந்து தொழைந்துப் போய் வீடுத் திரும்புகிறோம்.

அதில் பலர் தாயகம் திரும்பாமலேயே வந்த இடத்தில் ஆக்ஸிடென்டுகள் மூலமும்> ஹார்ட் அட்டாக் மூலமும் அகால மரணத்தைத் தழுவி விடுகின்றனர்.

தலைமாட்டில் நின்று அழுது நெற்றியில் முத்தமிட்டு எடுத்துச்சென்று புதைக்கக் கூட நாதியில்லாமல் ஊரார் கூடி புதைக்கும் பரிதாபத்திலும் பரிதாப நிலை.

யாருக்காக பிறந்த மண்ணை விட்டு அண்ணிய மண்ணுக்கு பிழைப்பு தேடிவந்து மண்ணோடு மண்ணாகிப் மடிந்துப் போனாரோ அன்னாருடைய வாரிசுகளுக்காக 5 ரியால் 10 ரியால் வசூல் செய்து அனுப்பி வைக்கும் அடுத்த அவல நிலை.

அன்புள்ளம் கொண்ட தாய் - தந்தையரே !
கடன் வாங்குவதற்கும், திருப்பிக் இறைவன் அனுமதித்திருப்பதால் கடன் பெற்று உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து பட்டதாரியாக, பொறியாளராக, ஆங்கிலப் புலமையுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
அவ்வாறு செய்தால் கைநிறைய சம்பதாதித்து வெகு சீக்கிரத்தில் கடனை அடைத்துவிட்டு தனது குடும்பத்திற்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதுடன் தனது மனைவி பிள்ளகைளை வரவழைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்க்கையைத; தொடர முடியும்.

தவறினால்...
இந்தியாவில் முன்னேறிய சமுதாயத்தவர்கள் அரசு வேலைகளை மட்டும் நம்பாமல் இந்தியா> மற்றும் வெளிநாடுகளில் உதவும் விதமாக சாஃப்ட்வேர் இஞ்சினியராக> சிவில் இஞ்சினியராக> மெக்கானிக்கல் இஞ்சினியராக இன்னும் பிரபல தொழில் நுட்ப கல்விகயைப படித்து விட்டு வெளி நாடுகளில் வந்து நம்மை விட முன்னேறுகிறார்கள்.

ஆயிரம் முஸ்லீம் லேபர்களை வைத்து இயங்கக் கூடிய பிரபலக் கம்பெனிக்கு எம்.டி யாக ஒரு ஐயரையோ, கிருஸ்தவரையோ தேர்வு செய்து கொண்டு வருகின்றனர் அவரும் கம்பெனியை பிரமாதமாக நடத்துகிறார் அதற்குக்காரணம் அதற்கு தேவையானப் படிப்பு அவரிடம் இருப்பதுவேயாகும்.

அதே கம்பெனியில் சேல்ஸ் ரெப்ரஸென்டிவ்களாகவும்> சூப்பர்வைஸர்களாகவும், அவர்களே இருப்பார்கள் அதற்கும் காரணம் அதற்கு தகுந்தப் படிப்பு அவர்களிடம் இருப்பதுவேயாகும்.

படிக்காமல் வெளிநாடு வரும் முஸ்லிம் லேபருடைய சம்பளம் 300 ரியாலாக இருந்தால் படித்து விட்டு வெளிநாடு வரும் அவர்களுடைய சம்பளம் மூவாயிரம் ரியாலாக இருக்கும்.

படிக்காமல் வெளிநாடு வந்து 300 ரியால் சம்பளம் பெருகின்ற உங்கள் பிள்ளைகள் 3 வருடமானாலும் தாய் நாட்டுக்குத் திரும்பி தனது மனைவி பிள்ளைகளை பார்க்க வர முடியாத அளவுக்;கு பண நெருக்கடி சம்பளம் பற்றாக்குறையினால் ஏற்படும்.

படித்து விட்டு வெளிநாட்டுக்கு வருகின்றவர்களுக்கோ வந்த மூன்று மாதங்களில் கடனையும் அடைத்து விட்டு மனைவிப் பிள்ளைகளை வரவழைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.

தடைகளை உடைத்து சிகரத்தைத் தொடுவோம்.
மார்ச் 2ல் முழாண்டு தேர்வு தொடங்கவிருப்பதால் இப்பொழுதே உங்கள் மகனுக்கு எந்த காலேஜில் என்னப் படிப்பு ? என்ற விபரங்களை சேகரிக்கத் தொடங்குங்கள்.

காலச் சூல்நிலையில் மாற்றம் ஏற்படும் போது இந்திய ஆட்சியாளர்களுடைய உள்ளத்தை இறைவன் புரட்டி விட்டால் பிறந்த நாட்டில் உயர் பதவிகளில் அமருவதற்கும் அந்தப் படிப்பு உதவிடும்> இல்லை என்றாலும் அயல்நாட்டில் கைநிறைய பொருளீட்டுவதற்கு உதவிடும். படிப்பு வீண் போகாது.

படிக்காமல் வேலைத் தேடி வெளிநாடு வருவோருடைய அவல நிலையும்>
படித்துவிட்டு வேலைத் தேடி வெளிநாடு வருவோருடைய செல்வ நிலையையும் விளக்கும் வீடியோவை onlinepj.comல் வளைகுடாவாழ் சகோதரர்களின் அவலநிலைகள் எனும் இரண்டு பாகங்களைக் கொண்ட வீடியோவைக் காணத் தவறாதீர்கள்.

இங்கே க்ளிக் செய்யவும Valaikuda Val Avalangal

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Sunday, September 28, 2008

திருக்குர்ஆன் மென் பொருளுடன் LG நிறுவனத்தின் டிவி அறிமுகம்!


உலகிலேயே முதன் முறையாக திருக்குர்ஆன் மென்பொருளை தன்னகத்தே கொண்ட தொலைக் காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்கிறது தென் கொரியாவின் பிரபல நிறுவனமான எல்.ஜி
இம்மாதம் முதல் சந்தைக்கு வரும் 42 இன்ச் மற்றும் 50 இன்ச் ப்ளாஸ்மா டிவிக்களில் இந்த மென்பொருள் நிறுவப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கின்றன.


ரமளான் மாதத்தில் உலகமெங்கும் இஸ்லாமியர்கள் திருக் குர்ஆனை ஓதுவதைக் கருத்தில் கொண்டு இந்த ரமளானில் 'குர் ஆன் டி.வி'கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.


இதன் மூலம் ஸி.டி, டி.வி.டி ப்ளேயர் போன்றவை இணைக்காமலும் கேபிள் டிவி, சாட்டலைட் / டிஷ் ஆண்டெனா போன்ற இணைப்பு ஏதுமின்றி வெறும் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டே குர்ஆனின் அத்தியாயங்கள் மற்றும் அதன் வசனங்களைப் பார்வையிடவும் அழகிய குரலில் ஓதுதலைக் கேட்கவும் முடியும்.


160 ஜி.பி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க் வசதி கொண்ட இந்த டி.வியில் இதற்கான மென்பொருள் டி.வியின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் விரும்பிய பக்கங்களைப் பார்வையிடவும், விருப்பமுள்ள இறை வசனங்களை சேமித்துக்கொள்ளவும் (Bookmark) தன்னகத்தே கொண்ட அகவசதிகள் செய்யப்பட்டுள்ளன.


டிஜிட்டல் புரட்சிக்குப் பின்னர் சர்வதேச அளவில் முஸ்லிம்கள், குர்ஆனை டிவிடி ப்ளேயர்களின் மூலமும், சாட்டலைட் சேனல்களின் மூலமும் பெருமளவு பயன்படுத்துவதைப் புள்ளிவிபரங்கள் மூலம் அறிந்து தனது வியாபாரத்தில் இந்தத் திட்டத்தினைப் புகுத்தியுள்ளது எல்.ஜி நிறுவனம்.


எல்.ஜி நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் வைஸ் பிரஸிடெண்ட் திரு. பார்க் ஜோங்-சியோக் அவர்கள் இந்த டி.வியை அறிமுகப் படுத்துவதற்கான சிறப்புப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் "சர்வதேச அளவில் முஸ்லிம்கள் இறை வேதமான குர்ஆனைத் தங்களது தினசரி வாழ்வில் ஓதி வருவதைக் கணக்கில் கொண்டே இந்தத் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளோம்" என்கிறார்.

நன்றி
சத்தியமார்க்கம்

Monday, September 22, 2008

கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி

கடையநல்லூர், செப். 20: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி 14- வது வார்டிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாகுல்ஹமீது அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மானை விட 239 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வார்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1467. இதில் ஆண் வாக்காளர்கள்-721. பெண் வாக்காளர்கள்-746. கடந்த 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 915. இதில் பதிவான ஆண் வாக்குகள் 324. பெண் வாக்குகள் 591. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் நடைபெற்ற காரணத்தால் சில நிமிஷங்களிலேயே முடிவுகளை நகராட்சி ஆணையர் அருணாசலம் அறிவித்தார். இதில் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாகுல்ஹமீது 577 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மான் 338 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர் ஷாகுல்கமீதுவிற்கு சான்றிதழை ஆணையர் அருணாசலம் வழங்கினார். இதில் உதவி வாக்குபதிவு அலுவலர் கரீம், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலர் செய்யது முகமது, நகர்மன்ற உறுப்பினர் அப்துல்காதர், நகரத் துணைச் செயலர் ஹைதர் அலி, திமுக நிர்வாகி முகமதுஅலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template