அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Friday, April 23, 2010

தென்காசி, மன்னார்குடியில் - என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? TNTJ மாணவர் அணி கல்வி கருத்தரங்கம்

தென்காசியில் , TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்


என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : 25/04/10- ஞாயிறு கிழைமை - (இன்ஷா அல்லாஹ்)

நேரம் : காலை 9: 30 மணி முதல் மதியம் 1 மணி வரை

சிறப்புரை : S. சித்திக் M.Tech (TNTJ மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : காட்டுபாவா உயர் நிலை பள்ளி , மவுன்ட்ரோடு, தென்காசி, நெல்லை மாவட்டம்

தொடர்பிற்கு : 9789514761

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ. நெல்லை மாவட்ட மாணவர் அணி.





மன்னார்குடியில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : 25/04/10- ஞாயிறு கிழைமை - (இன்ஷா அல்லாஹ்)

நேரம் : மாலை 4 மணி

சிறப்புரை : சகோ.கலீல்.M.B.A

இடம் : ASA திருமண மண்டபம், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்

தொடர்பிற்கு : 9865962542

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ. திருவாரூர் மாவட்ட மாணவர் அணி

Wednesday, April 21, 2010

சென்னையில் நடந்த ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை ஓர் ஆய்வு வீடியோ,

இதில் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை குறித்தும், இந்திய அளவில் முஸ்லிம்கள் எவ்வாறு பின் தங்கி உள்ளனர் என்பது குறித்தும், மத்திய அரசில் நமக்கு 10% இட ஒதுகீட்டின் அவசியத்தையும், இட ஒதுக்கீடு கிடைத்தால் எந்த எந்த துறைகளில் நமக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும், இதனால் நமது சமுதாயத்திற்க்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கப்பட்டுளது.




உரை : S.சித்தீக்.M.Tech- TNTJ மாநில மாணவர் அணி செயலாளர்



Thursday, April 8, 2010

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை பற்றிய முழு ஆய்வு, பயிற்சி முகாமிற்க்கு ஏற்பாடு செய்துள்ளது.TNTJ

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை பற்றிய முழு ஆய்வு, அறிக்கையின் பரிந்துரைகள் ஆகியவற்றை சமுதாயத்திற்க்கு விளக்கும் வண்ணமாக TNTJ மாணவர் அணி பயிற்சி முகாமிற்க்கு ஏற்பாடு செய்துள்ளது.


நாள் : 11/04/10 - ஞாயிறு கிழைமை
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
இடம் : TNTJ மாநில தலைமையகம், மண்ணடி , சென்னை -1


சிறப்புரை : S.சித்தீக்.M.Tech - TNTJ மாநில மாணவர் அணி செயளாலர்
தொடர்பிற்க்கு : 9884235802


அனுமதி இலவசம் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைகின்றது TNTJ மாணவர் அணி
.

Thursday, April 1, 2010

இந்திய முஸ்லீம்களின் நிலையும் ரங்கநாத்மிஸ்ரா அறிக்கையின் பரிந்துரைகளும்

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு :


1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைகத்தில் சட்டம் படித்தவர்.

1950-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் வழக்கஞராக பணியை துவக்கினார்.

1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார்.

1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியானார்

1983-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார்.

25.9.1990. முதல் 24.11.1991 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) தலைமை நீதிபதியாக பதவிவகித்தார்

இந்திய முஸ்லீம்களின் நிலை-அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

மக்கள் தொகை (பக்கம் 13)

முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி)

முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17)

1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %

அதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது.

2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர்

3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

5. 12-ஆம் வகுப்புவரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர்

குடி இருப்புகள் : (பக்கம் 23)

1. முஸ்லீம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.

2. முஸ்லீம்களில் 41.2% பேர் அடிப்படைகட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர்.

3. மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் பேர் மட்டுமே வசிக்கதகுந்த வீடுகளில்வாழ்கின்றனர்.

வறுமை கோட்டிற்க்குகீழ் வாழ்பவர்கள்: (பக்கம் 25)

இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் முஸ்லீம்கள்தான் அதிகம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.

1. நகர்புரத்தில் 27.22 % முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்

2. கிராமபுரத்தில் 36.92% முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்

அதாவது 100-க்கு 36 முஸ்லீம்கள் உணவு உடை, இருப்பிடம் இல்லாமல் வாழ தகுதி அற்ற நிலையில் வாழ்கின்றனர்.

வறுமைகோடு என்றால் என்ன ?

அரசு 13 காரணிகளை வைத்துள்ளது இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களாக கருதபடுவர்.

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது.

இந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்க்கு கீழ்) வாழ்கின்றன்ர். தமிழகத்தில் 5 -இல் ஒரு முஸ்லீம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றார்

மாதவருமானம் (பக்கம் 30)

ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு).

பரிந்துரைகளில் சில :

1. இந்திய அரசியல் அமைப்புசட்டம் Article 16 (4) விதி -படி சிறுபாண்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனதொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்படவேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு அந்த இடங்களை வழங்கவேண்டும்.(பெரும்பாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்ககூடாது)- (பக்கம் 150,152)

2. கல்வி வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடும். பிற சிறுபாண்மை மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152)

3. SC/ST-க்கு இருப்பது போல் முஸ்லீம்களுக்கும் கல்வி கற்பதர்க்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்ந்தபட வேண்டும். விண்னப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் குறைக்கப்பட வேண்டும்.

4. முஸ்லீம்களுக்காக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலை கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலை கழங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முஸ்லீம் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் பல்கலை கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151)

5. அங்கன்வாடிகள், நொவோதியா விதியாலயாஸ் (பள்ளிகள்) போன்றவை முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தபட வேண்டும். முஸ்லீம்களின் குழைந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லீம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். (பக்கம் 151)

6. முஸ்லீம்/கிருத்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கபெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153).

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் இரண்டாவது வால்யூமில் (பகுதி) பிற (அரசு மற்றும் அரசு சார) அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் பரிந்துரைகளும் உள்ளது. அதில் தேர்ந்தெடுத சில பரிந்துரைகளில் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.

அந்த பரிந்துரைகளில் சில :

1. கல்வியில் பின் தங்கி உள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்க வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2)

2. சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லீம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரவேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2)

3. (பொருளாதாரத்தில் பின் தங்கிய) முஸ்லீம்களுக்கு சமையல் கேஸ் இனைப்பு மிக குறைந்தவிலையில் வழங்கபட வேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2)

4. அரசின் நலதிட்ட உதவிகள் பெருவதில் முஸ்லீம்கள் பெருமளவில் பின் தங்கிஉள்ளனர், எனவே அரசின் நலதிட்ட உதவிகள் பற்றி முஸ்லீம்களுக்கு அரசு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நல திட்ட திட்ட உதவிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2)

முஸ்லீம்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்க்கு இந்த பரிந்துரைகள் கட்டாயம் நடைமுறைபடுத்தபடவேண்டும். இந்த அறிக்கை அமல்படுத்தபட்டால் IAS,IPS, IFS , உள்துறை, உளவுதுறை என எல்லா மத்திய அரசு பணிகளிளும் 10-ல் ஒரு முஸ்லீம் இருக்க முடியும்.

காலத்தே பயிர் செய் எனபதுபோல் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நாம் நமது குரலை அரசுக்கு உரக்க தெரிவிக்கவேண்டும்.

இந்திய அளவில் முஸ்லீம்களின் உரிமையை மீட்க நடக்கும் முதல் மாநாடாகவும் முன்னோடி மாநாடாகவும் திகழ தலைநகர் சென்னையை நோக்கி திரண்டு வருங்கள்.

இட ஒதுக்கீட்டால் பெரிதும் பயன் பெருவது மாணவர்கள் தான், எனவே மாணவர்களே! வருங்காலாத்தை வளமாக்கிட காலம் தாழ்த்தாமல் களப்பணியை ஆற்றிட களம் இறங்குங்கள். இன்றே ஆயத்தமாகுங்கள். மாநாட்டு வரலாற்றில் சரித்திரம் படைக்க மாநாட்டை மக்கள் வெள்ளம் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

தொகுப்பு

S.சித்தீக்.M.Tech

TNTJ மாணவர் அணி
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template